Published:Updated:

திண்டுக்கல்: சிலிக்கானில் தாய்மாமன் சிலை; மடியில் அமர்த்திக் குழந்தைகளுக்குக் காது குத்திய பாசமலர்!

சிலை

பாண்டித்துரை இறந்து போனதால் அவருடைய சிலிக்கான் முழுஉருவச் சிலையை வைத்து தாய்மாமன் செய்முறைகள் செய்யப்பட்டு அவரது சிலையின் மடியில் வைத்து குழந்தைகளுக்கு காது குத்தப்பட்டது. முன்னதாக தாய்மாமன் சிலிக்கான் சிலை குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக திருமண மண்டபம் வந்தது.

திண்டுக்கல்: சிலிக்கானில் தாய்மாமன் சிலை; மடியில் அமர்த்திக் குழந்தைகளுக்குக் காது குத்திய பாசமலர்!

பாண்டித்துரை இறந்து போனதால் அவருடைய சிலிக்கான் முழுஉருவச் சிலையை வைத்து தாய்மாமன் செய்முறைகள் செய்யப்பட்டு அவரது சிலையின் மடியில் வைத்து குழந்தைகளுக்கு காது குத்தப்பட்டது. முன்னதாக தாய்மாமன் சிலிக்கான் சிலை குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக திருமண மண்டபம் வந்தது.

Published:Updated:
சிலை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வினோபா நகரைச் சேர்ந்த சவுந்தரபாண்டி-பசுங்கிளி தம்பதியின் மகன் பாண்டித்துரை. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 21.

இந்நிலையில் அவருடைய மூத்த சகோதரி பிரியதர்ஷினியின் மகள் தாரிகா ஸ்ரீ, மகன் மோனேஷ் குமரன் ஆகியோரது காதணி விழா ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது. பாண்டித்துரை இறந்து போனதால் அவருடைய சிலிக்கான் முழுஉருவச் சிலையை வைத்து தாய்மாமன் செய்முறைகள் செய்யப்பட்டு அவரது சிலையின் மடியில் வைத்து குழந்தைகளுக்கு காது குத்தப்பட்டது முன்னதாக தாய்மாமன் சிலிக்கான் சிலை குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக திருமண மண்டபம் வந்தது. அதன்பின் அவரது சிலையின் மடியில் குழந்தைகளை அமர வைத்து காதணி விழா நடைபெற்றது.

சிலை
சிலை

அக்காள் குழந்தைகளுக்கு தன்னுடைய மடியில் வைத்து காதணி விழா நடைபெற வேண்டும் என்பது பாண்டி துறையில் நீண்ட நாள் கனவு இருந்துள்ளது. இதை அவர் உறவினர்களிடம் அடிக்கடி கூறி வந்திருக்கிறார். இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார்.

இதனால் தம்பி பாண்டித்துரையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பெங்களூருவில் சிலை செய்பவரிடம் பாண்டித்துரை அச்சு அசல் உருவம் போலவே தத்துரூபமாக இருக்கும்படி சிலை செய்யச்சொல்லி ஒட்டன்சத்திரம் கொண்டு வந்துள்ளனர். இந்த சிலை செய்வதற்கு 5 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. இதன்மூலம் தம்பியின் விருப்பம் நிறைவேறியது. பெற்றோருக்கும் பெரும் மனநிம்மதி கிடைத்துள்ளது என பிரியதர்ஷினி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாண்டிதுரை
பாண்டிதுரை

தென்மாவட்டங்களில் தாய்மாமன் முறை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்பதை பறைசாற்றும் விதமாக வினோதமான முறையில் சிலையில் அமரவைத்து குழந்தைகளுக்கு காதணி விழா நடைபெற்றது அப்பகுதி மக்களிடையேயும் உறவினர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism