Published:Updated:

`குழந்தைகளும் பயணமும்தான் என் வாழ்வியல்!' -`கதை சொல்லி' குமார்ஷா

`நான் ஒரு இன்ஜினீயரிங் மாணவன். ஆனால், தற்போது அந்த வேலையைச் செய்யவில்லை.'

மாணவர்களுடன் குமார்ஷா
மாணவர்களுடன் குமார்ஷா

`குழந்தைகளிடம் கதை சொல்வதும் அவர்களைப் புரிந்துகொள்ள முயல்வதும்தான் என்னுடைய விருப்பம். எனக்கு இலக்கு என ஒன்று இருந்ததில்லை' -இப்படி சொல்பவர் குமார்ஷா என்ற இளைஞர்.

ஆம்... குமார்ஷா ஒரு கதை சொல்லி. பயணத்தையும் கதையையும் தனது வாழ்க்கையாக்கிக்கொண்டு குழந்தைகளுடன் தன்னை இணைத்துக்கொள்ள பயணித்துக்கொண்டிருக்கிறார்.

கதை சொல்லும்போது
கதை சொல்லும்போது

அவரைப் பற்றி சுருக்கமாக அவரே கூறியபோது, "எனக்குச் சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். ஆனால், வளர்ந்தது கோவை, அருப்புக்கோட்டை, சேலம், சென்னை என்று பல இடங்களை சொல்வேன். நான் ஒரு இன்ஜினீயரிங் மாணவன். ஆனால், தற்போது அந்த வேலையைச் செய்யவில்லை.

Vikatan

எனக்குப் பிடித்த வேலையை மட்டும் செய்கிறேன். என்னுடைய மொழியில் அது வேலையும் இல்லை. என்னுடைய விருப்பம் மட்டுமே. என்னுடைய பயணம் 2007-ல் தொடங்கியது. அறம் பவுண்டேஷன் என்ற அமைப்பை நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி கிராம மாணவர்களின் முன்னேற்றத்துக்காக முயன்றோம்.

வெளிமாநில பயணங்கள்
வெளிமாநில பயணங்கள்

அதன் பின்னர், கதைகள் மீதும் அதைக் கேட்கும் குழந்தைகள் மீதும் ஆர்வம்வந்தது. 1 மணி நேரம் என்பது கதை சொல்வதாக மாறியது. கதைக்குள் பயணம், பயணத்துக்குள் கதை என்று மாறி, மாறி வருடங்கள் கடக்கின்றன.

இந்தியா முழுதும் பல இடங்களுக்குச் சென்றுவிட்டேன். கடந்த ஆண்டு பயணத் திட்டமிடல் சைக்கிளில் இருந்தது. அரை வருடம் சைக்கிளில் பயணித்து கதைகளைச் சொன்னேன், கதைகளைக் கேட்டேன். ஒவ்வொரு முறை நான் கதை சொல்ல கிளம்பும்போதும் என்னிடம் ரூ.500, ரூ.550, ரூ.200 என்றுதான் பட்ஜெட் இருக்கும்.

சைக்கிள் பயணத்தில் குமார்ஷா
சைக்கிள் பயணத்தில் குமார்ஷா

அதைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை. பயணம் என்னை தொடர்ச்சியாக இயங்க வைத்தது. பல நண்பர்களால் என்னால் இயங்க முடிந்தது. என்னுடைய விருப்பம் குழந்தைகளிடம் கதை சொல்லணும், நிறைய பயணிக்கணும். அது மட்டும்தான் என்னுடைய மனதின் திட்டமிடல்.

எனக்கு இலக்கு என்ற ஒன்று இல்லை. ஒரு நதிபோல இருக்க ஆசைப்படுகிறேன். நதி எப்படி குட்டைக்குள் செல்லவும் பள்ளத்துக்குள் செல்லவும் பயம் இல்லாமல் தன்னை மாற்றிக்கொள்கிறதோ... அதேபோல் என் பயணத்தையும் கதையையும் மாற்றிக்கொள்கிறேன். என்னிடம் அதிகக் கதைகள் இல்லை. ஆனால், என்னால் பல கதைகளை உருவாக்க முடியும். கற்பனைக் கதைகளைத்தான் குழந்தைகள் விரும்புகின்றனர்.

கதை சொல்லல்
கதை சொல்லல்

இதைத்தான் நானும் விரும்புகிறேன். இன்று நான் பாண்டிச்சேரியில் உள்ளேன். நாளை பாண்டிச்சேரியில் உள்ள பள்ளியில் கதை சொல்ல உள்ளேன். மறுநாள் எங்கிருப்பேன் என்று எனக்கே தெரியாது" என்றார் சிரித்தபடியே...