Published:Updated:

வீட்டிற்கு வண்ணம் முக்கியம்... ஏசியன் பெயின்டஸ் வழங்கும் பயனுள்ள பெயின்டிங் சேவை!

ஏசியன் பெயின்டஸ் நிறுவனத்தின் 'ஹோம் பெயின்டிங்' சேவை வழங்கும் வல்லுநர்கள் வாடிக்கையாளரின் வீட்டிற்குச் சென்று அங்கு ஏற்கனவே உள்ள மரச்சாமான்கள், லைட்டிங், அறையின் அளவு, இடத்தின் தன்மை போன்றவற்றை முதலில் ஆராய்வார்கள்.

asian paints
asian paints

வீட்டின் தோற்றம் முழுமையடைவதற்கு முக்கிய பங்காற்றுபவை வண்ணங்கள். வெளிப்புறத் தோற்றத்தை அழகாக்குவதற்கு மட்டுமின்றி உடல்நிலை & மனநிலையை மாற்றக்கூடியதாகவும் வண்ணங்கள் திகழ்கின்றன. வீட்டிற்கு பயன்படுத்தப்படும் பெயின்ட் முதலில் நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்காமல் இருக்க வேண்டும். பின், நாம் தேர்ந்தெடுக்கும் நிறம் மன அமைதிக்கு வழிவகுக்கக்கூடியதாக அமைவதும் முக்கியம்.

வீட்டின் வெளிப்புறம், உள்புறம் மற்றும் உள்புறங்களில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு வண்ணம் என வண்ணங்களால் வீட்டை அழகுப்படுத்த சற்று மெனக்கெடல் தேவைப்படுகிறது. புதிதாக வீடு கட்டினாலும் சரி மறுசீரமைப்பு செய்தாலும் சரி, வண்ணம் பூசுவது முதல் டிசைன் செய்வது வரை அனைத்திற்கும் பிளான் செய்வதற்குள் ஒருவழியாகிவிடுவோம். அதனால் பெயின்ட்டிங் போன்ற விஷயங்களைச் செய்வதற்கு முன் பெயின்ட் குறித்த ஆலோசனைகளைப் பெறுவது நிச்சயம் அவசியம்!

asian paints
asian paints

ஏசியன் பெயின்டஸ் :

பெயின்ட் வேலை குறித்த டென்சன்களில் இருந்து நம்மைக் காப்பாற்றி, நமது வேலைகளை மிகவும் எளிதாக்கிவிடுகிறது ஏசியன் பெயின்டஸ் நிறுவனம். வீட்டிற்கு பெயின்ட் செய்வதற்கு முன் போடப்படும் பிளான் முதல் அதைச் செயல்படுத்துவது வரையிலான ஒவ்வொரு நடவடிக்கையிலும் நமக்கு துணையாக நிற்கிறது ஏசியன் பெயின்டஸ்.

ஏசியன் பெயின்டஸின் அசத்தலான சேவை!

தொழில்முறை நிபுணர்களின் கண்காணிப்பிலும், இயந்திர கருவிகளின் உதவியுடனும் எந்தவித தொந்தரவுமின்றி மிகவும் கட்சிதமான பெயின்டிங் சேவையை ஏசியன் பெயின்டஸ் நிறுவனம் வழங்குகிறது.

ஏசியன் பெயின்டஸ் நிறுவனத்தின் 'ஹோம் பெயின்டிங்' சேவை வழங்கும் வல்லுநர்கள் வாடிக்கையாளரின் வீட்டிற்குச் சென்று அங்கு ஏற்கனவே உள்ள மரச்சாமான்கள், லைட்டிங், அறையின் அளவு, இடத்தின் தன்மை போன்றவற்றை முதலில் ஆராய்வார்கள். அதன் பிறகு அவர்கள் வீட்டின் சுவருக்குத் தகுந்தாற்போல் வண்ணம், டிசைன்களை பரிந்துரை செய்வார்கள். வீட்டிலுள்ள அலங்காரப் பொருட்களை பார்வையிடும் வல்லுநர்கள், அதனின் ஸ்டைலை மேன்மேலும் அதிகரிக்க உதவுவர். இதுமட்டுமில்லாது வாஸ்து, சாஸ்திரப்படியும் வண்ணம் மற்றும் அலங்காரக் குறிப்புகளை வழங்குகிறது ஏசியன் பெயின்டஸின் ஹோம் சர்வீஸ்.

asian paints
asian paints

சேவைகள் பலவுண்டு!

ஏசியன் பெயின்டஸின் பசுமை தயாரிப்புகள், நவீன பெயின்டிங் இயந்திரங்கள் & சாதனங்கள், சரியான நேரத்தில் வழங்கப்படும் திட்ட மேலாண்மை போன்றவை நமக்குச் சிறந்த பெயின்டிங் அனுபவத்தை உறுதி செய்யக்கூடியதாக அமைகின்றன. தவிர வீட்டை மேலும் அழகாக்கும் அலங்காரப் பொருட்களை மெருகேற்றவும், வீட்டில் பிளம்பிங், டைல்ஸ் ஒட்டுதல் போன்ற வேலைப்பாடுகளையும் நமது தேவைகளுக்கு ஏற்ப செய்து நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது ஏசியன் பெயின்டஸ்.

வாசகர்கள் கவனத்திற்கு!

விகடன் வாசகர்களுக்காக ஏசியன் பெயின்டஸின் பிரதிநிதி இலவச நேரடி ஆலோசனையைத் தர காத்திருக்கிறார். இச்சேவையைப் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை மட்டும் பூர்த்தி செய்தால் போதும்... அனைத்து ஆலோசனைகளையும் வழங்குவது ஏசியன் பெயின்டஸின் பொறுப்பு!