Published:Updated:

இலவச பெயின்டிங் சேவை; அசத்தும் ஏசியன் பெயின்ட்ஸ்!!

Asian Paints'
Asian Paints'

வண்ணம், அலங்காரம், வாஸ்து என வாடிக்கையாளர்களுக்குத் தேவையானதை வழங்குவதில் அக்கறை கொண்டுள்ளது.

உலகத்திலேயே நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் ஒரே ஒரு இடம் 'வீடு'தான். வீட்டைப் பற்றி நினைத்தாலே நிம்மதிப் பெருமூச்சு விடுவோம். அவ்வாறு நாம் பார்த்து கட்டிய வீட்டின் தோற்றத்துக்கு கம்பீரத்தையும் முழுமையையும் தருவதில் 'பெயின்டிங்' அதிமுக்கிய பங்கு வகிக்கிறது. எப்பேர்ப்பட்ட வீடாக இருந்தாலும் ஒரே ஒரு கோட்டிங் பெயின்ட் ஒட்டுமொத்த வீட்டின் பொலிவையும் மெருகேற்றிவிடும். ஆயிரக்கணக்கான வண்ணங்களில் சரியானதைத் தேர்ந்தெடுப்பது கடினம் என்றாலும் அதில்தான் நமது ஆனந்தமும் அடங்கியிருக்கிறது.

வீட்டின் வெளிப்புறத்திற்கு ஒரு கலர், வீட்டின் உள்புறத்தில் இருக்கும் ஒவ்வோர் அறைக்கும் ஒவ்வொரு கலர் என நம் மனநிலைக்கு ஏற்றார்போல் வண்ணங்களை தேர்ந்தெடுப்பது மிகவும் சவாலான ஒரு விஷயம். நிறங்களுக்கும் மன செயல்பாட்டுக்கும் நிறைய தொடர்பு இருக்கின்றன. நம் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் நிறங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பண்பு இருக்கிறது. அதேபோல் நிறத்தை மட்டும் பார்க்காமல் நம் வீட்டின் சுவர்களைப் பாதுகாக்கும் பண்புகள் நிறைந்ததாகவும் பெயின்டைத் தேர்வு செய்ய வேண்டும்.

Asian Paints'
Asian Paints'

வீட்டின் லிவ்விங் ரூம், கிட்சன், பாத்ரூம், பெட்ரூம் என ஒவ்வொரு அறைக்கும் என்ன வண்ணம் பூசுவது... அவற்றை எவ்வாறு டிசைன் செய்வது என இப்படிப் பல விஷயங்களை நாம் நிதானமாக பார்த்து ஆலோசனை செய்து வேலையை முடிப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிடும். இவை அனைத்திற்கும் எளிய மற்றும் சிறந்த தீர்வை அளிக்கிறது 'ஏசியன் பெயின்டஸ்' நிறுவனம். ஏசியன் பெயின்ட்ஸ்-இன் இலவச பெயின்டிங் சேவை உங்களின் வேலையை மிகவும் சுலபமாக்குகிறது. வீட்டிற்கு பெயின்ட் செய்வதற்கு முன் போடப்படும் பிளான் முதல் அதைச் செயல்படுத்துவது வரையிலான ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஏசியன் பெயின்டஸ் நமக்கு உறுதுணையாகஇருந்து செயல்படுகிறது...

ஏசியன் பெயின்டஸ் ஹோம் சர்வீஸ்:

தொழில்முறை நிபுணர்களின் கண்காணிப்பிலும், இயந்திர கருவிகளின் உதவியுடனும் எந்தவித தொந்தரவுமின்றி மிகவும் கட்சிதமான பெயின்டிங் சேவையை ஏசியன் பெயின்டஸ் நிறுவனம் வழங்குகிறது. வண்ணம், அலங்காரம், வாஸ்து என வாடிக்கையாளர்களுக்குத் தேவையானதை வழங்குவதில் அக்கறை கொண்டுள்ளது.

Asian Paints'
Asian Paints'

ஏசியன் பெயின்டஸ் நிறுவனத்தின் 'ஹோம் பெயின்டிங்' சேவை வழங்கும் வல்லுநர்கள் வாடிக்கையாளரின் வீட்டிற்குச் சென்று அங்கு ஏற்கனவே உள்ள மரச்சாமான்கள், லைட்டிங், அறையின் அளவு, தன்மை போன்றவற்றை முதலில் ஆராய்வார்கள். அதன் பிறகு அவர்கள் வீட்டின் சுவருக்குத் தகுந்தார்போல் வண்ணம், டிசைன்களை பரிந்துரை செய்வார்கள். வீட்டிலுள்ள அலங்காரப் பொருட்களை பார்வையிடும் வல்லுநர்கள், அதனின் ஸ்டைலை மேன்மேலும் அதிகரிக்க உதவுவர். இதுமட்டுமில்லாது வாஸ்து, சாஸ்திரங்களின்படியும் வண்ணம் மற்றும் அலங்காரக் குறிப்புகளை வழங்குகிறது ஏசியன் பெயின்டஸின் ஹோம் சர்வீஸ்.

ஏசியன் பெயின்டஸின் பசுமை தயாரிப்புகள், நவீன பெயின்டிங் இயந்திரங்கள் & சாதனங்கள், சரியான நேரத்தில் வழங்கப்படும் திட்ட மேலாண்மை போன்றவை நமக்குச் சிறந்த பெயின்டிங் அனுபவத்தை உறுதி செய்யக்கூடியதாக அமைகின்றன. தவிர வீட்டை மேலும் அழகாக்கும் அலங்காரப் பொருட்களை மெருகேற்றவும், வீட்டில் பிளம்பிங், டைல்ஸ் ஒட்டுதல் போன்ற வேலைப்பாடுகளையும் நமது தேவைகளுக்கு ஏற்ப செய்து அசத்துகிறது ஏசியன் பெயின்டஸ்!!

விகடன் வாசகர்களே, உங்களுக்காக ஏசியன் பெயின்டஸின் பிரதிநிதி இலவச நேரடி ஆலோசனையைத் தர காத்திருக்கிறார். இச்சேவையைப் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை மட்டும் பூர்த்தி செய்துவிட்டால் போதும்... அனைத்து ஆலோசனைகளையும் ஏசியன் பெயின்டஸ் தந்துவிடும்!

அடுத்த கட்டுரைக்கு