Published:Updated:

`திருடவே முடியாத எலெக்ட்ரிக் சைக்கிள்' - 4 ஆண்டுகள் உழைத்து சாதித்துக் காட்டிய ITI மாணவர்!

ITI மாணவர் (ANI)

"உலகின் எந்த மூலையில் இருந்தும் இந்த சைக்கிளைக் கட்டுப்படுத்த முடியும்" என்கிறார் இந்த சைக்கிளை உருவாக்கிய சாம்ராட் என்கிற மாணவர்.

`திருடவே முடியாத எலெக்ட்ரிக் சைக்கிள்' - 4 ஆண்டுகள் உழைத்து சாதித்துக் காட்டிய ITI மாணவர்!

"உலகின் எந்த மூலையில் இருந்தும் இந்த சைக்கிளைக் கட்டுப்படுத்த முடியும்" என்கிறார் இந்த சைக்கிளை உருவாக்கிய சாம்ராட் என்கிற மாணவர்.

Published:Updated:
ITI மாணவர் (ANI)

யாராவது திருட முயன்றால் போனுக்கு குறுஞ்செய்தி வரும் வசதி, உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ட்ராக் செய்யும் வசதி, பிங்கர் பிரின்ட் வசதி, எலெக்ட்ரிக் பேட்டரி இவை எல்லாமும் உங்கள் சைக்கிளில் இருந்தால் எப்படி இருக்கும்? ஆச்சரியமாக இருக்கிறதா? அப்படியான சைக்கிள் ஒன்றை உருவாக்கியிருக்கிறார் அஸ்ஸாமைச் சேர்ந்த தொழிற்கல்வி மாணவர்.

அசாமின் கரீம்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த சாம்ராட்நாத் என்கிற மாணவர் உருவாகியுள்ள எலெக்ட்ரிக் சைக்கிள் எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. அதுகுறித்து ஆங்கில இணையதளம் ஒன்றிற்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், "திருட்டுப் போகாத ஸ்மார்ட்டான எலெக்ட்ரிக் சைக்கிள் ஒன்றை உருவாக்கியுள்ளேன். யாராவது திருட முயன்றால் இதனோடு இணைக்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட்போனுக்கு குறுஞ்செய்தி போகும். உலகின் எந்த மூலையில் இருந்தும் இந்த சைக்கிளை கட்டுப்படுத்த முடியும்" என்கிறார் சாம்ராட்.

ITI மாணவர் (ANI)
ITI மாணவர் (ANI)
PRINT-124

இந்த சைக்கிளை உருவாக்க 4 ஆண்டுகள் செலவாகியிருக்கிறது. இந்த சைக்கிளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பேட்டரிகள் பழைய லேப்டாப்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை. "சின்ன வயதில் இருந்தே எலெக்ட்ரிக் சைக்கிள் உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. இறுதியாக என்னுடைய கனவு நிஜமாகி இருக்கிறது. கோடிங் கற்று கொண்ட பிறகு இதை உருவாக்க 4 ஆண்டுகள் எனக்கு செலவானது" என்கிறார் சாம்ராட்.

அதிகபட்சமாக 40 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும் இந்த சைக்கிளில் ஒரு முறை சார்ஜ் போட்டால் 60 கி.மீ. வரை செல்லமுடியுமாம். சில்சாரில் உள்ள அஸ்ஸாம் ரைபிள்ஸ் தொழிற்கல்வி கழகத்தில் படித்து வரும் சாம்ராட், இந்த சைக்கிளில் பொருத்தியுள்ள பாதுகாப்பு கருவியை எந்தவித எலெக்ட்ரிக் பைக்கிலும் பயன்படுத்தும் அளவிற்கு தயாரித்துள்ளார். இந்த இளைஞருக்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism