Published:Updated:

மகனைக் காப்பாற்றுங்கள்; 5 வருடங்களாய் வட்டி கட்டுகிறோம்!

Bone Marrow Translantation
Bone Marrow Translantation

5 வருடங்களாய் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதிலியே எங்கள் வாழ்க்கை சுழன்றுகொண்டிருக்கிறது. மீண்டும் வந்திருக்கும் இந்த நோயின் தாக்கம் எங்களின் கொஞ்ச நஞ்சம் நம்பிக்கையிலும் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது.

"என் மகன் நகுல், வயது 9. அவனுக்கு சாப்பாடு ஊட்டும்போதெல்லாம் இதுதான் அவனுடைய கடைசி வேளை உணவாக இருக்குமோ என்கிற பயம் என்னைச் சித்திரவதை செய்து வருகிறது. கடந்த சில மாதங்களாய் நடக்கும் இந்தப் போராட்டம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது"

"அவன் எப்படியும் பிழைத்துக்கொள்வான், சாமி இருக்கிறது என்று எவ்வளவுதான் சமாதானம் சொல்லிக்கொண்டாலும், ஏதாவதொரு அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே என் மகன் பிழைப்பான். கடவுளே, அவனைக் கேன்சரில் இருந்து காப்பாற்றக்கூடிய அந்த அதிசயம் நிகழ்ந்துவிடக்கூடாதா!"

நவம்பர் 2015...

"'உங்கள் பிள்ளைக்கு மெட்டாஸ்டேட்டிக் ஹை-ரிஸ்க் நியூரோபிளாஸ்டோமா (metastatic high-risk neuroblastoma) எனும் கேன்சர் உள்ளது. இப்போது அது கேன்சர் கட்டிகளாக உருமாற்றம் அடைந்துள்ளது. கீமோதெரப்பி சிகிச்சையை உடனே ஆரம்பிக்க வேண்டும்.' இந்த வார்த்தைகள்தான் எங்கள் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது."

"அவன் படுத்த படுக்கையாய் கிடந்தபோது, அவன் கழுத்தில் இருந்த கட்டியைக் கேன்சர் என்று நாங்கள் அறிந்திருக்கவில்லை. கனவில்கூட இப்படியெல்லாம் நடக்கும் என நான் நினைத்து பார்த்ததில்லை."

மகனைக் காப்பாற்றுங்கள்; 5 வருடங்களாய் வட்டி கட்டுகிறோம்!

"அவனுக்குக் கேன்சர் எனும் சேதி ஏற்கனவே தீராத வேதனை அளித்த வேளையில், சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்படும் என்பது பெரிய இடியாய் எங்கள் தலையில் விழுந்தது. நாங்கள் பணக்காரர்கள் கிடையாது, ஆட்டோ ஓட்டிதான் என் கணவர் எங்களைக் காப்பாற்றி வருகிறார்."

"ஆனாலும் பணத்தைக் காரணம் காட்டி மகனைக் காவு கொடுக்க முடியுமா? எங்களிடம் இருந்த எல்லாவற்றையும் விற்றுவிட்டோம், வட்டிக்கு மேல் வட்டி வாங்கி நகுலைக் காப்பாற்றி விட வேண்டும் என்று ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இது சிகிச்சையின் ஆரம்பம் மட்டும்தானாம்!"

இப்போது...

"சில மாதங்களுக்கு முன்பு என் மகனின் கேன்சர் மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்தது. 2015-ல் அவனுக்குக் கேன்சர் கண்டுபிடிக்கப்பட்டபோது இருந்ததை விட இப்போது நிலைமை படுமோசமாகிவிட்டது. நடக்கக்கூட முடியாமல் படுக்கையில் கிடக்கும் பிள்ளையால் இப்போது கை கால்களைக் கூட அசைக்க முடியவில்லை. கேன்சர் அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது."

மகனைக் காப்பாற்றுங்கள்; 5 வருடங்களாய் வட்டி கட்டுகிறோம்!

"ரேடியோ தெரப்பியுடன் போன் மேரோ டிரான்ஸ்பிளான்ட்டும் (Bone Marrow Transplant) செய்தால்தான் நகுல் பிழைப்பானாம். சிகிச்சைக்கு 30 லட்ச ரூபாய் ($ 40380) தேவைப்படும் என்கின்றனர்."

"5 வருடங்களாய் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதிலியே எங்கள் வாழ்க்கை சுழன்றுகொண்டிருக்கிறது. மீண்டும் வந்திருக்கும் இந்த நோயின் தாக்கம் எங்களின் கொஞ்ச நஞ்சம் நம்பிக்கையிலும் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது."

"நகுலின் அப்பா அவனுக்கு போன் மேரோ தானம் செய்ய தயாராக இருந்தாலும், சிகிச்சைக்கான கட்டணத்தைக் கட்ட வழியில்லாமல் அலைந்து வருகிறோம்."

"இந்த நிலையில் நீங்கள் மட்டுமே எங்களுக்கு உதவ முடியும். நீங்கள் அனைவரும் உங்களால் முடிந்த உதவியை விரைவாகச் செய்தால் நகுலைக் காப்பாற்றிவிட முடியும். அவனுக்கு மறுபிறவியைக் கொடுப்பீர்களா?"

- இப்படிக்கு நகுலின் தாய்.

இப்போதே உதவி செய்ய இந்த லிங்க் க்ளிக் செய்யவும்

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை கீட்டோ-வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும் வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளவும்.

அடுத்த கட்டுரைக்கு