Published:Updated:

ஜூ.வி பைட்ஸ்: ஆட்டோ சங்கர் கடைசியாக கேட்டது... | 'நீட்'டுக்கு 'உதவுமா' சி.பி.எஸ்.இ?

ஜூ.வி பைட்ஸ்

திடீரென, "சார்... நான் இந்த பாட்டிலை உடைச்சு என் வயித்துல குத்திக்கிட்டா என்னைத் தூக்கிலிட முடியுமா?" என்றார்.

ஜூ.வி பைட்ஸ்: ஆட்டோ சங்கர் கடைசியாக கேட்டது... | 'நீட்'டுக்கு 'உதவுமா' சி.பி.எஸ்.இ?

திடீரென, "சார்... நான் இந்த பாட்டிலை உடைச்சு என் வயித்துல குத்திக்கிட்டா என்னைத் தூக்கிலிட முடியுமா?" என்றார்.

Published:Updated:
ஜூ.வி பைட்ஸ்

மீண்டும் ஓர் இறுதி இரவு... இந்த முறை சங்கர் வெளிச்சத்தைப் பார்ப்பாரா எனத் தெரியவில்லை. ஏற்கெனவே அவரிடம் பல சந்தர்ப்பங்களில் பேசியிருக்கிறேன்தான். ஆனால், இந்த முறை சங்கடமாக உணர்ந்தேன். மெதுவாகப் பேச்சு கொடுத்தேன். சகஜமாகப் பேசினார். குரலில் நடுக்கமோ பதற்றமோ இல்லை. அவர் கண்கள் நேருக்குநேராக என் கண்களைப் பார்த்தன. "சார், நான் செஞ்சதெல்லாம் ரொம்பத் தப்புதான். அவ்வளவு கெட்டது பண்ணியிருக்கேன். ஆனா, அதைச் செய்யுறப்பெல்லாம் எந்த உறுத்தலும் ஏற்படலை. இப்ப யோசிக்கிறப்ப எத்தனை பேருக்கு எவ்வளவு கொடுமை பண்ணியிருக்கேன்னு உணர முடியுது. என்னைத் தூக்குல போட்ருங்க சார். அதுதான் சரியான தண்டனையா இருக்கும்" என்றார். இப்போது குரல் சற்றே உடைந்திருந்தது.

அவருடன் பழகிய அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் பிரபலமான பலர் தனக்கு வாடிக்கையாளர்கள் என்றார். நள்ளிரவைத் தாண்டியிருந்தது.

சங்கர் எங்கள் அனைவரிடமும் நலம் விசாரித்தார். இரவு மணி 3 இருக்கும். "சார்... ஆர்டர் ஏதாச்சும் வந்திருக்குதா பாருங்க" என்றார். "ஆர்டர் வந்தால் உடனடியாக நமக்குச் சொல்வார்கள். கடைசி நிமிடம் வரை ஆர்டருக்காகக் காத்திருப்போம். உன்னைத் தூக்கிலிட வேண்டும் என்று எங்களுக்கு ஆசை ஒன்றுமில்லை'' என்றேன்.

ஜூ.வி பைட்ஸ்: ஆட்டோ சங்கர் கடைசியாக கேட்டது... | 'நீட்'டுக்கு 'உதவுமா' சி.பி.எஸ்.இ?

''எனக்கு தாகமா இருக்கு. ஒரு கூல்டிரிங்க்ஸ் வேணும். என்னுடைய கடைசி ஆசைனு வெச்சுக்கோங்களேன்'' என்றார். அந்தப் பின்னிரவிலும் ஒரு காவலரை அனுப்பி, கடை ஒன்றைத் தேடிப்பிடித்து, குளிர்பானம் வாங்கி வரச்செய்து கொடுத்தேன். அதை ரசித்து அருந்தியபடி என்னுடன் பேசிக்கொண்டிருந்தார்.

திடீரென, "சார்... நான் இந்த பாட்டிலை உடைச்சு என் வயித்துல குத்திக்கிட்டா என்னைத் தூக்கிலிட முடியுமா?" என்றார். ''இது உன்னிடமிருந்து எதிர்பார்த்ததுதான். அதற்கு பதிலும் வைத்திருக் கிறேன். ஒருவேளை நீ அவ்வாறு செய்தாலும் ஒரு துணியை வைத்துக் கட்டி உன்னை அப்படியே தூக்கிக்கொண்டு போய் தூக்குக்கயிற்றில் மாட்டிவிடுவேன்" என்றேன். ''சார், சும்மா விளையாட்டுக்குக் கேட்டேன்'' என்றார். அடுத்து என்ன பேசுவது எனத் தெரியவில்லை. கனத்த மெளனம் நிலவியது. காலை மணி 4...

தமிழ்நாடு சிறைத் துறையில் 39 ஆண்டுகள் பணியாற்றிய ஜி.ராமச்சந்திரன் எழுதும் ஜூ.வி தொடரின் அத்தியாயத்தை முழுமையாக வாசிக்க > ஜெயில்... மதில்... திகில்! - 3 - ஆட்டோ சங்கரின் கடைசி முத்தம்! க்ளிக் செய்க... https://www.vikatan.com/news/general-news/series-about-prison-experience-by-g-ramachandran-3

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பள்ளிக்கல்வியைக் கேலிக்குள்ளாக்கும் நீட்!

'எதைத் தின்றால் பித்தம் தெளியும்' என்று தவித்த தமிழக அரசு, உடனடியாக பாடத்திட்டத்தை மாற்றியது. நீட் தேர்வை மட்டுமே மையமாகக்கொண்டு தயாரிக்கப்பட்டன புதிய பாடப்புத்தகங்கள். அவ்வளவு கனமான புத்தகங்களை பையில் சுமக்கவே பிள்ளைகள் சிரமப்படுகிறார்கள். மூளையில் எப்படிச் சுமப்பார்கள்? கவலைப்பட யாரும் இல்லை!

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்தால் மட்டும் நீட் தேர்வில் எளிதாகத் தேர்ச்சி பெற்றுவிட முடியுமா?

கண்டிப்பாக முடியாது.

சி.பி.எஸ்.இ-யாக இருந்தாலும் சரி, மாநிலப் பாடத்திட்டமாக இருந்தாலும் சரி, தனியாக கோச்சிங் சென்றால் மட்டுமே நீட்டில் தேர்ச்சிபெற முடியும். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்தால் நீட் தேர்வில் எளிதாகத் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்பது தவறான நம்பிக்கை. இதை, அரசு தரும் புள்ளிவிவரங்களே நிரூபிக்கின்றன.

நீட் தேர்வின் பின்னணியில் பல்லாயிரம் கோடி ரூபாய் வணிகம் இருக்கிறது. கடந்த மூன்றே ஆண்டுகளில் தேசமெங் கும் பல ஆயிரம் பயிற்சி மையங்கள் முளைத்திருக்கின்றன. ஆறாம் வகுப்பு படிக்கும்போதே தனியார் பள்ளிகளை வளைத்து, பெற்றோர்களின் மனதைக் கரைத்து நீட் பயிற்சியில் பிள்ளைகளைச் சேர்க்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

ஜூ.வி பைட்ஸ்: ஆட்டோ சங்கர் கடைசியாக கேட்டது... | 'நீட்'டுக்கு 'உதவுமா' சி.பி.எஸ்.இ?

தனியார் பள்ளிகளும் தங்கள் வணிக உத்தியாக நீட் பயிற்சியைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. கருணையே இல்லாமல் 6-ம் வகுப்பு மாணவனின் நீட் பயிற்சிக்கு 20,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். 'எப்படியும் தங்கள் பிள்ளைகளை கரையேற்றிவிட வேண்டும்' என்ற மத்தியதர வர்க்கத்தின் பலவீன மனநிலையைப் பயன்படுத்தி மிகப்பெரும் வணிகம் செய்துவருகின்றன இந்தப் பயிற்சி மையங்கள்.

சரி... ப்ளஸ் டூ முடித்துவிட்டு இந்தப் பயிற்சி மையங்களில் ஓராண்டு பயிற்சி பெற்றால், நீட் தேர்வில் தேர்ச்சிபெற்றுவிட முடியுமா?

அப்படியும் சொல்லிவிட முடியாது.

இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் பணத்தைக் கொட்டி பயிற்சி பெற்றால் மட்டுமே தேர்ச்சிபெற முடியும். இந்த அவலத்தையும் அரசின் புள்ளிவிவரங்கள்தான் அம்பலப்படுத்துகின்றன.

- முழுமையான பின்புலத்தை ஜூனியர் விகடன் தொடரில் அறிய > நீட் வைரஸ் - 3: பள்ளிக்கல்வியைக் கேலிக்குள்ளாக்கும் நீட்! https://www.vikatan.com/social-affairs/education/series-about-neet-exam-3

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism