Published:Updated:

14 மாத குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உங்களின் உதவி தேவை!

11 வருடங்களாக நமக்கொரு குழந்தை பிறக்காதா என்று ஏங்கியவர்கள் நாங்கள். ஏதேதோ சிகிச்சைகள், வேண்டுதல்கள், ஒன்றுமே பலன் அளிக்கவில்லை. ஆனால் திடீரென்று அந்த அதிசயம் நடந்தது, நான் கர்ப்பம் அடைந்தேன். அன்று என் கணவரும் நானும் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது!

ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நாள் நிலைக்கவில்லை.

2019-ல் எங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

ஜனவரி 2021, குழந்தைக்கு திடீரென்று உடம்பு சரியில்லாமல் போனது.

முதலில் காய்ச்சல் வந்தது. நாங்கள் செய்த கை வைத்தியங்கள் எதுவுமே பலன் அளிக்கவில்லை.

குழந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினோம். அங்கே சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

டெஸ்ட் ரிசல்ட் கேட்டதும் எங்கள் இதயமே சுக்குச்சுக்காக உடைந்துபோனது!

விஸ்காட்-ஆல்டிரிச் சிண்ட்ரோம் (Wiskott-Aldrich Syndrome), ரெஃப்ராக்டரி த்ரோம்போசைட்டோபீனியா (Refractory Thrombocytopenia) ஆட்டோஇம்யூன் வாஸ்குலிட்டிஸ் (autoimmune vasculitis) என்று ஏதேதோ நோய்கள் குழந்தைக்கு இருப்பதாக கூறினார்கள்.

எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது, எங்கள் குழந்தைக்கு ஏதோ பெரிய பிரச்னை.

14 மாத குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உங்களின் உதவி தேவை!

அடுத்து என்ன செய்வது? எங்கு போவது? ஒன்றுமே புரியாமல் திக்கற்று நின்றிருந்தோம்.

எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை (Bone Marrow treatment) மட்டுமே இதற்கான தீர்வு என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சிகிச்சைக்கு ஆகும் செலவு என்ன தெரியுமா? 25 லட்ச ரூபாய் ($ 34507). அவ்வளவு பணத்தை நாங்கள் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை.

என் கணவர் மட்டும்தான் வேலைக்குச் செல்கிறார். கடை ஒன்றில் வேலை செய்யும் அவரின் மாதச் சம்பளம் 6000 ரூபாய்.

எங்களுடைய எல்லா உறவுகளிடம் இருந்தும் கடன் வாங்கி இதுவரை சிகிச்சையை சமாளித்துவிட்டோம். நிறைய கடன்கள், இருந்த கொஞ்சநஞ்ச நகைகளையும் விற்றுவிட்டோம்.

எங்களிடம் இப்போது காசும் இல்லை, வேறு வழியும் இல்லை.

எங்கள் குழந்தைதான் எங்களுக்கு எல்லாமே. அவன்தான் எங்களின் உலகம். எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அவனின் மழலைச் சிரிப்பில் அதையெல்லாம் மறந்திருந்தோம்.

ஒவ்வொரு முறை பிஞ்சு உடலில் ஊசி குத்தும்போதும், குழந்தை வலியால் துடிப்பதை எங்களால் சகிக்க முடியவில்லை! அவனை எப்படியாவது இந்த வேதனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று மனம் கிடந்து அடித்துக்கொள்கிறது.

அவன் அப்பா குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை வழங்க முடியும். ஆனால் இப்போது எங்களுக்குத் தேவை உங்களின் உதவிதான்!

எங்களின் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற, சிகிச்சைக்கு உங்களால் முடிந்த பண உதவியைச் செய்யுமாறு மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம். அது மிகச் சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை, தயவு செய்து உங்களால் ஆனதைக் கொடுத்து உதவுங்கள்.

எங்களின் 14 மாதக் குழந்தையை, 11 வருட தவத்தின் பலனைக் காப்பாற்றித் தருமாறு மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம்.

பண உதவி செய்ய, இந்த லிங்கைக் கிளிக் செய்யவும்.

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை கெட்டோ-வின் விளம்பரதாரர் பகுதி என்பதால் கட்டுரையின் உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பாகாது. இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம் என்பதால் நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு