Published:Updated:

பச்சிளங்குழந்தைக்கு கல்லீரல் செயலிழப்பு! #Save_Mithulashree

மிதுலாவின் மருத்துவ செலவுக்கே ஸ்ரீகாந்தின் எல்லா சேமிப்புகளும் செலவாகிவிட்டன. மிதுலாவிற்கு கல்லீரலை தானம் செய்ய அவளது தாய் தயாராக இருக்கையில் அவளின் உயிரைக் காப்பாற்றக்கூடிய ஒற்றை வழியாக பணமே இருக்கிறது.

உதவி
உதவி

பொதுவாக குழந்தைகள் நம்மைச் சுற்றி இருக்கும்போது கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருப்போம். பிரச்னைகள் நிறைந்த இடங்களில் ஒரு குழந்தை இருந்தால் பிரச்னைகூட சிரிப்பில் முடியும். ஆனால் அத்தனை மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்கும் அந்தக் குழந்தை மகிழ்ச்சியாக இல்லாமல் இருக்கும் தருணம் மரண வலியைக் கொடுக்கும். அவ்வாறான வலியைத்தான் தற்போது உணர்ந்து வருகின்றனர் மிதுலாஸ்ரீயின் பெற்றோர்.

அரியவகை நோய்!

இரண்டு வயதாகும் மிதுலாவின் தலையைக் கோதிவிட்டு அவளைத் தன் மடியில் கஷ்டப்பட்டு உறங்கவைக்கும் தாய் ஸ்ரீலக்ஷ்மியின் கண்களில் கண்ணீர் வடிகிறது. ஏனெனில் திடீரென விழித்துக்கொள்ளும் மிதுலா வலியால் துடித்துப்போவாள். அவள் நிம்மதியாக தூங்கியே பல நாட்கள் ஆகின்றன. மிதுலாவிற்கு இப்பிரச்னை, பிறந்த மூன்று மாதங்களிலேயே ஆரம்பித்துவிட்டது. அரிதான கல்லீரல் நோயின் பாதிப்பே இதற்கு காரணம்.

பச்சிளங்குழந்தைக்கு கல்லீரல் செயலிழப்பு! #Save_Mithulashree

மிதுலா பிறந்தபோது வாழ்வின் பெருமகிழ்ச்சியை அவளின் பெற்றோர் அடைந்தனர். ஆனால், ஸ்ரீலக்ஷ்மி மற்றும் ஸ்ரீகாந்தின் அந்தக் கொண்டாட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. மூன்று மாதங்களுக்குப் பிறகு, மிதுலாவிற்கு கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டது. யாரையும் நெருங்கக்கூட விடாமல் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தாள். அவளை சமாதானம் செய்ய எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகின. இதனையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மிதுலாவிடம் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மிதுலாவுடன் அதிக நேரம் செலவிட முடியாத அவளின் தந்தை ஸ்ரீகாந்த் தனியார் வேலையில் அன்றாட வாழ்க்கையை நகர்த்தும் அளவிற்கு சம்பாதித்து வருகிறார். தன் மகளுக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையை நினைத்து மிகுந்த கவலை கொண்டிருந்த அவருக்கும், ஸ்ரீலக்ஷ்மிக்கும் இதயம் நொறுங்கியதைப் போன்று இருந்தன மருத்துவரின் வார்த்தைகள். மிதுலா, அரியவகை கல்லீரல் நோயால் (Progressive Familial Intrahepatic Cholestasis Type 2) பாதிக்கப்பட்டிருப்பதாக வெளிவந்த அந்த வார்த்தைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

பச்சிளங்குழந்தைக்கு கல்லீரல் செயலிழப்பு! #Save_Mithulashree

பணம்தான் ஒரே வழி...

பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய இந்த நோய், கடும் நமைச்சல், மஞ்சள் காமாலை போன்றவற்றை உண்டாக்கும். அதுமட்டுமில்லாமல் சில வருடங்களில் கல்லீரலைச் செயலிழக்க வைத்துவிடும். இரண்டு வருடங்களில் மிதுலாவின் நோய் மோசமடைந்துள்ளது. இப்போது மிதுலாவின் உயிரைக் காப்பாற்றக்கூடிய ஒரே வழி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைதான் என மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். இந்தச் சிகிச்சைக்கு ரூ. 16.5 லட்சம் தேவைப்படும் என்பதை அறிந்தபின் எல்லா நம்பிக்கையும் சுக்குநூறானதுபோல இருந்தது மிதுலாவின் பெற்றோருக்கு...

மிதுலாவின் மருத்துவ செலவுக்கே ஸ்ரீகாந்தின் எல்லா சேமிப்புகளும் செலவாகிவிட்டன. மிதுலாவிற்கு கல்லீரலை தானம் செய்ய அவளது தாய் தயாராக இருக்கையில் அவளின் உயிரைக் காப்பாற்றக்கூடிய ஒற்றை வழியாக பணமே இருக்கிறது. பணம் இல்லாத ஒரே காரணத்திற்காக இவ்வளவு வலியைத் தங்கள் மகள் அனுபவித்து வருவதாக மிதுலாவின் பெற்றோர் ஒவ்வொரு நாளும் மனம் வருந்துகின்றனர். இந்த நிலைமையில் மிதுலாவின் பெற்றோருக்கு நிதி திரட்டும் இணையதள நிறுவனமான 'Ketto' ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது.

உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மிதுலாவின் உயிரைக் காப்பாற்ற கெட்டோவுடன் இணைந்து நாமும் உதவ முன்வருவோம். மற்ற நல்லுள்ளங்களையும் உதவ முன்வர வேண்டுகோள் விடுப்போம். சிறிய செயல் பெரிய மாற்றத்தை உருவாக்கும் எனில் இதுவும் சாத்தியமே. மிதுலாவிற்கு உதவ நினைக்கும் நல்லுள்ளங்கள் https://www.ketto.org/fundraiser/savemithulasree?utm_campaign=savemithulasree&utm_medium=position_1&utm_source=external_vikatan இந்த லிங்கிற்குச் சென்று உதவலாம்!

பச்சிளங்குழந்தைக்கு கல்லீரல் செயலிழப்பு! #Save_Mithulashree

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Ketto-வின் விளம்பரதாரர் பகுதியாகும். எனவே, இதில் கூறப்பட்டுள்ள செய்திகளின் உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பாகாது. இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம் என்பதால், நன்கொடை செய்வதற்கு முன்னர் இச்செய்தியின் உண்மைத்தன்மையை சுயாதீனமாக ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுமாறு வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.