Published:Updated:

கடல் சூழ் மண்ணின் 'கலர்' ஹீரோக்கள்... ஸ்ரீ பாலாஜி ஹார்டுவேர்ஸ்

நிப்பான் பெயின்ட்
நிப்பான் பெயின்ட்

நிப்பான் பெயின்ட் விளம்பர வேலைகளில் மும்முரமாக இறங்குவதற்கு முன்னரே, அவர்களின் விளம்பர வீடியோக்களை கடையில் பெரிய திரை வைத்து ஓட்டுவது, நிப்பான் பிளாபி பொம்மையை வைத்து விளம்பரம் செய்வது, பெயின்டிங் டெமோ எனப் பலவற்றைச் செய்துள்ளோம்.

காரைக்காலில் இருந்து, புகழ்பெற்ற திருநள்ளாற்றீஸ்வரர் (சனீஸ்வர பரிகாரத்) திருத்தலத்துக்கு செல்லும் வழியில் பச்சூரில், பளிச்சென நிமிர்ந்து நிற்கிறது ஸ்ரீ பாலாஜி ஹார்டுவேர்ஸ். பாபா அட்டாமிக் ரிசர்ச் சென்டரில் பணிபுரிய விரும்பிய N. ரவிச்சந்திரன் பாலாஜி ஹார்டுவேர்ஸ் நிறுவனரானது எப்படி? கடற்கரை பூமியான காரைக்காலில் பெயின்ட் விற்பனையில் கொடிகட்டிப் பறப்பது எவ்வாறு? இன்னும் பல தொழில் சுவாரஸ்யங்களைப் பகிர்ந்துகொள்கிறார் ரவிச்சந்திரன்...

வெற்றிகரமாக செயலாற்றிவரும் நிப்பான் பெயின்ட் டீலர்கள் தங்களின் வியாபார அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் சிறப்புப் பகுதி இதுவாகும்...

கடல் சூழ் மண்ணின் 'கலர்' ஹீரோக்கள்... ஸ்ரீ பாலாஜி ஹார்டுவேர்ஸ்

1986-லிருந்து...

"அப்பா ஆசிரியர், அம்மா இல்லத்தரசி. எளிமையான குடும்பம். அறிவியலில் ஆர்வம்கொண்ட எனக்கு பாபா அட்டாமிக் ரிசர்ச் சென்டரில் பணிபுரிய வேண்டும் என்பது ஆசை, ஆனால் வாய்ப்பு கிடைத்ததோ வேறொன்றில். 1986-ல் காரைக்கால் பகுதியில் பெயின்ட் விற்பனை பிரதிநிதியாக என் வாழ்வைத் தொடங்கினேன். 9 வருட உழைப்பின் பயனாய், 1995-ல் உருவானது எங்களின் 'எவர் பிரைட் செம்' பெயின்ட் நிறுவனம். அதைதொடர்ந்து 'பாலாஜி ஹார்டுவேர்ஸ்' கடையை தொடங்கினோம். இன்று காரைக்கால் சுற்றுவட்டாரத்தில் நம்பகமான ஹார்டுவேர்ஸ் & பெயின்ட் டீலராக உயர்ந்துநிர்கிறோம்" என்பது ரவிச்சந்திரன் அவர்கள் தரும் கதைச்சுருக்கம்...

கடல் சூழ் மண்ணின் 'கலர்' ஹீரோக்கள்... ஸ்ரீ பாலாஜி ஹார்டுவேர்ஸ்

தற்போது ரவிச்சந்திரனுடன் இணைந்து, அவரது மகன்கள் 'அகிலன்' மற்றும் 'மதன்' கடையைக் கவனித்து வருகின்றனர். "வளர்ந்துவரும் சிறந்த பிராண்டாக சந்தையில் அறியப்பட்ட நிப்பான் பெயின்ட்டின் டீலராக ஆகவேண்டும் என்பது எங்களின் விருப்பம், இருப்பினும் எங்களுக்கு டீலர்ஷிப் வழங்க முதலில் நிப்பான் தயாராக இல்லை. எங்களைப் பற்றி மார்க்கெட்டில் சர்வே எடுத்து, எங்களின் தொழில் நேர்த்தியை அறிந்தபிறகே டீலர்ஷிப் வழங்கப்பட்டது. நிப்பானின் 'ரைசிங் ஸ்டார்' டீலராக இருந்து தற்போது 'கிளப் நிப்பான்' விருது பெறும் வரை உயர்ந்துள்ளோம்." என்கிறார் ரவிச்சந்திரன்.

கஸ்டமர்கள் கொடுத்த வரவேற்பு...

"கும்பகோணத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் நிப்பான் 'ஓடர்லெஸ் ஏர்கேர்' பெயின்ட் பற்றி கேள்விப்பட்டு தன் வீட்டுக்கு அதை அடிக்க எண்ணியிருந்தார். தற்செயலாக திருநள்ளாறு கோவிலுக்கு வந்துசெல்லும்போது எங்களின் கடையைப் பார்த்து ஆர்டர் கொடுத்தார். அவருக்காக மலேசியாவிலிருந்து நிப்பான் பெயின்டை தருவித்து கொடுத்தோம், இன்றும் அவரின் தேவைகளுக்கு நிப்பான் பெயின்டையே வாங்குகிறார்" என்கிறார் ரவிச்சந்திரன். "இதேபோல, தமிழகத்தின் முன்னணி கிரானைட் நிறுவனர் ஒருவர் அவரின் சொந்தத் தேவைக்காக வேறு ஒரு நிறுவன பெயின்ட் கேட்டு வந்தார். இரண்டு நிமிட அவகாசம் கேட்டு, அவரின் வீட்டைப்போன்ற மாதிரியை கணினியில் வடிவமைத்து கலர் செய்து காட்டினோம். அதைப் பார்த்து அசந்துபோனவர், எங்களின் முயற்சிக்காகவே நிப்பான் பெயின்ட்டை வாங்கினார். இன்று அவரின் வீடு, அலுவலகம், உற்பத்தி ஆலை என எல்லா இடங்களுக்கும் நிப்பான் பெயின்டையே பயன்படுத்துகிறார்!" என்கிறார் இளைய மகன் மதன்.

"நிப்பான் பெயின்ட் விளம்பர வேலைகளில் மும்முரமாக இறங்குவதற்கு முன்னரே, அவர்களின் விளம்பர வீடியோக்களை கடையில் பெரிய திரை வைத்து ஓட்டுவது, நிப்பான் பிளாபி பொம்மையை வைத்து விளம்பரம் செய்வது, பெயின்டிங் டெமோ எனப் பலவற்றைச் செய்துள்ளோம். ஒரு கல்லூரியில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு நிப்பான் பிளாபியை பரிசாக வழங்கினோம். அன்று முக்கிய விருந்தினரை விட அதிக வரவேற்பு பெற்றது என்னமோ நிப்பான் பிளாபிதான்!" என்கிறார் மூத்த மகன் அகிலன்.

கடல் சூழ் மண்ணின் 'கலர்' ஹீரோக்கள்... ஸ்ரீ பாலாஜி ஹார்டுவேர்ஸ்

அப்பாதான் எல்லாமே!

"அப்பாதான் எங்களுக்குப் பெரிய ஊக்கம். வியாபாரத்தைப் பொறுத்தவரை தரம், நேரம் தவறாமை போன்ற விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். நாங்கள் பள்ளியில் படிக்கும்போதே, எங்களைத் தன்னுடன் ஃபீல்டுக்கு அழைத்துச் சென்று வியாபாரம் என்றால் என்ன, எவ்வளவு கஷ்டமானது என்பதை உணரச்செய்து எங்களைப் பொறுப்பான பிள்ளைகளாக வளர்த்தவர் அப்பா. ஊழியர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என எடுத்துக்காட்டாக திகழ்பவர்" என்கின்றனர் அகிலனும் மதனும்.

ரவிச்சந்திரன் கூறுகையில்: "இந்தப் பாராட்டுகளுக்கு முக்கிய காரணம் என் மனைவி மணிமேகலை. அரசுப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றிக்கொண்டு குடும்பத்தையும் சிறந்தபடி அவர் கவனித்ததால்தான் என்னால் வியாபாரத்தில் கவனம் செலுத்த இயன்றது. அடுத்து, எங்களின் வெற்றிக்குக் காரணமாக இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும். குறிப்பாக ரமேஷ் மற்றும் சுவாமிநாதன், 20 வருடங்களாக எங்களிடம் பணிபுரிந்து வருகின்றனர். எங்கள் கடையின் மேனேஜர் மீனாட்சி சுந்தரி, அவரும் 20 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருகிறார். இந்தத் தருணத்தில் என் வாழ்வில் மறக்கமுடியாத தஞ்சை A.N. சுப்பிரமணிய செட்டியார், சிவகாசி R. ராமசாமி நாடார், கீர்த்திவாசன் ஐயர், குருமூர்த்தி ஐயர் மற்றும் ரமணன் ஐயர் அவர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்!"

தரம், அதுவே நிப்பான்

"பசுமைக் கட்டிடங்களுக்கு ஏற்ற தயாரிப்பு நிப்பான் பெயின்ட். வெப்பம் கடத்தல், வெளிச்சம், பளபளப்பு போன்ற அம்சங்கள் இதைத் தனித்து நிற்கச் செய்கின்றன. நச்சுக் கரிமங்கள் இல்லாத, நெடி ஏற்படுத்தாத, காற்று மாசுபாடு ஏற்படுத்தாத சுற்றுச் சூழலுக்கு ஏற்ற தயாரிப்புகளைக் கொண்டுள்ளதால்தான் நிப்பான் பெயின்டை அனைவரும் விரும்பி வாங்குகின்றனர். கூட்டுக்குடும்பமாக வாழும் எங்களின் மற்றுமொரு குடும்ப உறுப்பினராகவே நிப்பான் பெயின்டைப் பார்க்கிறோம். எங்களின் புகழுக்குக் காரணமாக இருக்கும் நிப்பான் பெயின்ட் நிறுவனத்துக்கு மிக்க நன்றி" என்கிறார் ஸ்ரீ பாலாஜி ஹார்டுவேர்ஸ் மற்றும் எவர் பிரைட் செம் நிறுவனர் ரவிச்சந்திரன்.

அடுத்த கட்டுரைக்கு