Published:Updated:

சூரியகாந்தி விதை எண்ணெய் தரும் பலன்கள்...

Sponsored content

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் (FSSAI) விதிமுறைகளின்படி தயாரிக்கப்படும் கோல்டு வின்னர் சூரியகாந்தி எண்ணெயில்,

கோல்டு வின்னர்
கோல்டு வின்னர்

எண்ணெயால் சமைத்த உணவை உண்டால் தேவையற்ற கொழுப்பு சேரும், எண்ணெய்ச் சமையலில் கொலஸ்ட்ரால் அதிகம், எண்ணெய்ப் பொருள்கள் இதயத்துக்குக் கேடு... இப்படிச் சொல்லி சொல்லியே நமக்கு நன்மையை உண்டாக்கும் எண்ணெயை ஒதுக்கிவைத்து வருகிறோம். இது மிகவும் தவறான செயல் என்பதே மருத்துவர்களின் கருத்து. ஏனெனில் நமக்கான ஆரோக்கியத்தைத் தரக்கூடிய பொருள்களில் எண்ணெய் பிரதானமானது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்த, விரைந்து நோய்களைக் குணப்படுத்த, ஹார்மோன்களை சமநிலைப்படுத்த, தொற்றுநோயைக் கையாள, இதய நோயைத் தடுக்க, உடலின் சுழற்சி அமைப்பைச் சரிப்படுத்த, மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் விளைவுகளைக் குறைக்க, வலிமையான எலும்பு மற்றும் மூட்டுகளுக்கு, சுவாச நோய்கள் மற்றும் மலச்சிக்கலைக் குணப்படுத்த, நெருப்பாலும் பிறவிதத்திலும் ஏற்படும் பலவிதமான காயங்களைக் குணமாக்க, ரத்த அழுத்தம், தசை, முடி மற்றும் முகத்தில் ஏற்படும் உபாதைகள் உள்ளிட்ட பல பிரச்னைகளைக் கட்டுப்படுத்துவதற்கு எண்ணெய்ச் சத்து நமக்கு அவசியமாகும்.

சூரியகாந்தியின் (Sunflower) நன்மைகள்...

பெரும்பாலும் அனைவரின் இல்லங்களிலும் சூரியகாந்தி எண்ணெயில்தான் தற்போது சமையலே. இந்த சூரியகாந்தி எண்ணெயில் நன்மைகள் பல இருக்கின்றன. இயற்கையாகவே 40 முதல் 43% வரையிலான எண்ணெயை தன்னுள் அடக்கியிருக்கும் சூரியகாந்தி விதையில், நம் உடலுக்குத் தேவையான சத்துக்களும் நிறைந்துள்ளன. இதன் காரணமாகவே சூரியகாந்தி விதையின் எண்ணெய் சமையலில் முக்கியப் பங்களிக்கிறது. சூரியகாந்தியின் விதைகள் நார்ச்சத்து கொண்டதால் ரத்தத்தில் ஏற்படும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இவ்விதைகள் மன அழுத்தத்தை விளைவிக்கும் கார்டிசால் ஹார்மோனைக் குறைப்பதால், இரவில் நிம்மதியான தூக்கத்தை உண்டாக்கும். கெட்ட கொழுப்புகளைக் குறைக்கவும், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவியாக இருக்கும் இதன் விதைகள், புரதச் சத்தையும் தருகிறது.

கோல்டு வின்னர்
கோல்டு வின்னர்

சூரியகாந்தி எண்ணெயில் வைட்டமின் இ அதிகமாக இருப்பதால், யு.வி. கதிர்களால் தசைச் செல்கள் பாதிப்படையாமல் காத்தும், பதற்றத்தைக் குறைக்கவும் உதவுகிறது. வைட்டமின் இ மட்டுமில்லாமல் வைட்டமின் ஏ, சி மற்றும் டி அடங்கிய சூரியகாந்தி எண்ணெய் முகப்பருக்களையும், சேதமடைந்த தோலையும், வயதான அறிகுறிகளைச் சரிசெய்யவும் உதவியாக இருக்கிறது. இது தவிர, இதயப் பிரச்னை மற்றும் அழற்சி போன்றவற்றை எதிர்த்துப் போராடுகிறது, ஜீரண சக்தியையும் அதிகரிக்கிறது.

கோல்டு வின்னர் சன்ஃபிளவர் ஆயில்

சூரியகாந்தி விதை எண்ணெய் தரும் பலன்கள்...

உலகின் மிகப்பெரிய சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியாளராக உக்ரைன் நாடு உள்ளது. இங்கு நிபுணர்களின் வழிகாட்டுதலின்படி தர ஆய்வாளர்களின் துணையோடு சூரியகாந்தி விதைத் தோட்டம் பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்நாட்டு அரசால் ஒப்புதல் வழங்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெயை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து வருகிறது தென்னிந்தியாவின் மிகப்பெரிய சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி நிறுவனமான காளீஸ்வரி ரிஃபைனரி நிறுவனம். நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையிலும், ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும் விதமாகவும், பலவகையான தயாரிப்புகளை இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக விளங்கிவருகிறது காளீஸ்வரி நிறுவனம்.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் (FSSAI) விதிமுறைகளின்படி தயாரிக்கப்படும் கோல்டு வின்னர் சூரியகாந்தி எண்ணெயில், வைட்டமின் ஏ மற்றும் டி3 சேர்த்து தயாரிக்கப்படுவதால், உடலுக்குக் கூடுதல் வலுவூட்டலை கோல்டு வின்னரின் சூரியகாந்தி எண்ணெய் தருகிறது. இதிலிருக்கும் அத்தியாவசியமான Fatty Acids, கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவுகிறது. தவிர, இந்த எண்ணெயில் உள்ள ஓமெகா 6 பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் (PUFA) மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் (Tocopherols, Vitamin E) நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானதாகும். இந்தியா மட்டுமில்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து, அரபு நாடுகள் (ஓமன், கத்தார், துபாய்...), கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு கோல்டு வின்னர் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

காளீஸ்வரி ரிஃபைனரி நிறுவனம்

சூரியகாந்தி விதை எண்ணெய் தரும் பலன்கள்...

1993ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் காளீஸ்வரி ரிஃபைனரி நிறுவனம், தங்களின் ஆரோக்கியமான தயாரிப்புகள் மூலம் ஆயிரக்கணக்கான வியாபாரிகளையும், லட்சக்கணக்கான நுகர்வோரையும் தக்கவைத்துக்கொண்டுள்ளது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட காளீஸ்வரி, இந்தியாவில் நான்கு நவீனமயமாக்கப்பட்ட உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளது. கோல்டு வின்னர் பிராண்டைத் தவிர, ஃபெடோரா ஆலிவ் ஆயில், கார்டியா லைஃப், ஒரைஸா ரீஃபைண்ட் ரைஸ் பிரான் ஆயில், பியூர் ப்ளஸ் தேங்காய் எண்ணெய், எல்டியா தேங்காய் எண்ணெய், தீபம் விளக்கேற்றும் எண்ணெய் உள்ளிட்ட பல பிராண்டட் பொருட்களையும் விற்பனை செய்கிறது காளீஸ்வரி நிறுவனம்.