Published:Updated:

காலேஜ் சேரணுமா? இந்தக் கல்லூரியை மிஸ் பண்ணிடாதீங்க!

தங்கவேலு பொறியியல் கல்லூரி
News
தங்கவேலு பொறியியல் கல்லூரி

சென்னை இராஜீவ்காந்தி சாலையில் அமைந்துள்ள இக்கல்லூரிகள் அனைத்துவிதமான உள்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டுள்ளதால் தொழிற்கல்வி, கட்டடக்கலை, கலை மற்றும் அறிவியல், வர்த்தகம், மேலாண்மை, சார்ந்த கல்வி பயில ஏற்ற இடமாக அமைந்துள்ளது.

கல்வி என்பது எப்படி சிந்திக்க வேண்டும் என்பதைக் கற்றுத் தந்து, ஆக்கப்பூர்வமான சிந்தனைகளைத் தூண்டும் விதம் அமைய வேண்டும்...

இந்த உன்னத நோக்கத்துடன் 1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம்தான் பொன்னியம்மன் கல்வி அறக்கட்டளை. கல்வியின் மூலம் மாணவர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட, 'தங்கவேலு பொறியியல் கல்லூரி'யை நிறுவிய இவ்வறக்கட்டளை பாடங்களையும் ஒழுக்கத்தையும் மாணவர் சமுதாயத்திற்கு புகட்டி வருகிறது.

கல்வியின் மூலம் சமுதாயத்தின் எல்லா தேவைகளையும் தாமே பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்ற நோக்கோடு டி.ஜெ.கல்வி அறக்கட்டளை 2000ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்தக் கல்வி அறக்கட்டளை டி.ஜெ.பொறியியல் கல்லூரி, டாவின்சி கட்டட வடிவமைப்பு கல்லூரி (Davinci School of Design and Architecture), சென்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Chennai College of Arts and Science) ஆகியவற்றை நிறுவி மாணவ சமுதாயத்தினரிடையே பொறுப்புணர்வையும் சமுதாய முன்னேற்றத்தில் அவர்களின் பங்கையும் உணர்த்தி வருகிறது.

கடின உழைப்பு, ஒழுக்கம், படிப்பைக் கற்றுத்தருவதில் நேர்மை ஆகியவற்றில் மேன்மை பெற்று விளங்கும் இக்கல்லூரிகள் மாணவ மாணவிகளின் அறிவையும், ஆற்றலையும் கூர்மைப்படுத்துவதோடு அவர்களைக் கற்பனை வளம் கொண்டவர்களாகவும் திறமை உடையவர்களாகவும் உருவாக்குவதையே பிரதான இலட்சியமாக கொண்டுள்ளன.

தங்கவேலு பொறியியல் கல்லூரியும், டி.ஜெ.பொறியியல் கல்லூரியும் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தால் (AICTE) அங்கீகரிக்கப்பட்டுள்ளன. Davinci School of Design and Architecture இந்தியக் கட்டிடக்கலை கழகத்தால் (COA) அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

காலேஜ் சேரணுமா? இந்தக் கல்லூரியை மிஸ் பண்ணிடாதீங்க!

நீங்கள் சேர விரும்பும் கோர்ஸ் இங்கே!

இக்கல்லூரிகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இளநிலை பி.இ.கோர்ஸ்களில், CSE, EEE, ECE, EIE, IT, Mechanical, Civil, B.Arch மற்றும் முதுநிலை கோர்ஸ்களில் MBA, MCA, ME: CAD, PED, CSE, ED, PSE, CS, AE ஆகிய பாடப் பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

சென்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ற கல்லூரி சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இளநிலை B.Com – General, B.Com – Accounting & Finance, B.Com – Computer Application, B.Sc - Computer Science, BBA ஆகிய பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

சிறப்பான கட்டமைப்பு.

சென்னை இராஜீவ்காந்தி சாலையில் அமைந்துள்ள இக்கல்லூரிகள் அனைத்துவிதமான உள்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டுள்ளதால் தொழிற்கல்வி, கட்டடக்கலை, கலை மற்றும் அறிவியல், வர்த்தகம், மேலாண்மை, சார்ந்த கல்வி பயில ஏற்ற இடமாக அமைந்துள்ளது.

இக்கல்லூரிகளில் வகுப்பறைகளும், ஆய்வகங்களும் அரசு விதிகளி்ன்படி அமைக்கப்பட்டுள்ளன.

ஆராய்ச்சி மாணவர்கள் உபயோகப்படுத்தும் அளவிற்கு மிகச் சிறந்த புத்தகங்களைக் கொண்ட நூலகமும், இணையதளத்தின் மூலம் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள நூலகங்களை இணைக்கும் டெல்நெட் வசதி உள்ளது.

தகுதி மற்றும் அனுபவமிக்க பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் மாணவர்கள் 90 முதல் 100 சதவிகித தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

ஆய்வக வசதி, இணைய தள வசதியுடன் கூடிய கணினி நிலையம், தொழில் முனைவோருக்கான மையம், தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றும் மையம், தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நிர்வாகிகள், தொழில்முறை ஆலோசகர்களுடன் கலந்து பேசிடும் வாய்ப்பு என்று பற்பல சிறப்பம்சங்கள் இங்கேயுண்டு.

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் மற்றும் அண்ணா பல்கலைக்கழக விதிமுறைகளை கடைபிடிப்பதோடு மாணவரின் முழுமையான கல்விக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் அந்தந்த துறையைச் சார்ந்த படிப்புகளுக்கு அது தொடர்புடைய தொழிற்கூடங்களை பார்வையிடுதல் மற்றும் தொழிற்சாலைகளில் நேரடி பயிற்சி போன்ற வசதிகள் செய்து தரப்படுகின்றன. இது தவிர தேசிய மாணவர் படை, தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகள், மாணவர்கள் கலை, கலாச்சார திறன்களை வெளிப்படுத்தும் போட்டிகள் ஆகியவையும் உண்டு.

காலேஜ் சேரணுமா? இந்தக் கல்லூரியை மிஸ் பண்ணிடாதீங்க!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெளியூர் மாணவர்கள் தங்கிப் படிக்கலாம்.

மாணவ மாணவிகளுக்கு தனித்தனியான விடுதிகள் அனைத்து வசதிகளையும் கொண்ட உணவகம் கல்லூரி வளாகத்திலேயே அமைந்துள்ளது.

சென்னையையும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்து மாணவர்கள் கல்லூரிக்கு வந்து செல்ல கல்லூரி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மாணவர் சேர்க்கை முறை அகில இந்திய தொழில்நுட்பக் கழகம், மாநில அரசு, அண்ணா மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு செய்யப்படுகின்றது.

இக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள் பட்டம் பெற்று உலகம் முழுவதும் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியும், பல்வேறு கல்லூரிகளில் உயர்கல்வி பயின்றும் வருகின்றனர். ஒவ்வொரு துறையிலும் மாணவ மாணவியர்களின் முன்னேற்றம் மற்றும் வேலை வாய்ப்பிற்கான அத்தனை சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுவதால் இக்கல்லூரிகளில் படிக்கும் அனைவருமே பணியிட வாய்ப்பினைப் பெற்று விடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற கல்வி ஆண்டில் (2020) 92% மாணவ மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். எஞ்சியோர் உயர் கல்வி பயில்கின்றனர்.

பொன்னியம்மன் அறக்கட்டளை மற்றும் டி.ஜெ. கல்வி அறக்கட்டளை எதிர்கால இந்தியாவின் தொழில்நுட்ப தேவைகளையும் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டுவதில் தன் முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.