Published:Updated:

உடம்பு முழுக்க காயங்கள். உயிரை மீட்டெடுத்த பில்ரோத் மருத்துவமனை டாக்டர்கள்!

பில்ரோத்
பில்ரோத்

ரத்தம் சொட்ட சொட்டத்தான் அந்த 17 வயது இளைஞரை பில்ரோத் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள்.

பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த அவரின் உடலில் ஏற்கெனவே நிறைய ரத்தம் போயிருந்தது, பயங்கர காய்ச்சல், இரு தொடைகளிலும் தசைகள் பெருமளவு கிழிந்து சிராய்ந்து இருந்தன, இடுப்பு முதல் உள்ளங்கால் வரை மொத்தமும் அடிபட்டு, சிகிச்சை அளிப்பதற்கு ரொம்பவே சிக்கலான கேஸாகத்தான் இருந்தது அது.

கைக்கோத்த டாக்டர்கள்!

அந்த இளைஞரின் உயிரைக் காப்பாற்ற பில்ரோத்-ன் பல்வேறு துறை மருத்துவர்களும் இணைந்து செயல்பட வேண்டியிருந்தது. நெஞ்சுப்பகுதி ஆபரேஷன் வல்லுனர்களாக டாக்டர் அருண்குமார் மற்றும் டாக்டர் பரத் குரு, மயக்க மருந்து நிபுணர்கள் டாக்டர் மகாதேவன் மற்றும் டாக்டர் நெடுமாறன் ஆகியோர் இணைந்து முதலில் சுவாசப்பாதையில் செயற்கைக் குழாய் அமைத்து அடிபட்டவரின் மூச்சை சீராக்கினர்...

எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலாஜி சாய்பாபாவின் மேற்பார்வையில் அடிபட்டவரின் இடுப்பு எலும்புகள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பிளேட் மூலம் ஸ்திரப்படுத்தப்பட்டது. சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் AC மணி அடிபட்டிருந்த சிறுநீரகப் பாதைக்கு பைப் வைக்க, மலம் கழிக்க கோலோஸ்டமி பேக் பொருத்தப்பட்டது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் பாப்லோ நெரூடாவின் உதவியுடன் தொடைகளின் தசைச் சிராய்ப்புகள் சரிசெய்யப்பட்டன.

உடம்பு முழுக்க காயங்கள். உயிரை மீட்டெடுத்த பில்ரோத் மருத்துவமனை டாக்டர்கள்!

இதன் பின்னர் கொரோனரி கேர் யூனிட்டுக்கு மாற்றம் செய்யப்பட்ட அந்த இளைஞரின் இருதய செயல்பாட்டை டாக்டர் சக்ரவர்த்தி மற்றும் குழுவினர் கண்காணித்து வந்தனர். 48 மணி நேரம் கழித்து மீண்டும் ஆபரேஷன் தியேட்டரில் அடிபட்டவரின் உடல் பரிசோதிக்கப்பட்டது. மயக்க மருந்து நிபுணர்கள் டாக்டர் ரங்கராஜன் மற்றும் டாக்டர் சுரேஷ் உதவியுடன் தசைப்பகுதி காயங்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு, வேக்யூம் டிரெஸ்ஸிங் வழங்கப்பட்டது... ஆனாலும் நோயாளி முழுமையாய் குணமடைந்து விடவில்லை.

அடிபட்ட பகுதிகளில், வேறு பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட தோல் பொருத்தப்பட்டது. சிக்கலான கேஸ் என்பதால் 2 வார இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக இது செய்யப்பட்டது. அடிபட்ட இளைஞரின் உடலுக்குத் தேவையான சத்துக்கள் சென்றடைவதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். 2 மாதங்கள் கழிந்தன.

உடம்பு முழுக்க காயங்கள். உயிரை மீட்டெடுத்த பில்ரோத் மருத்துவமனை டாக்டர்கள்!

இடுப்பு, சிறுநீர்ப்பாதை மற்றும் மலப்பாதையில் பொருத்தப்பட்டிருந்த புறக் கருவிகள் கடைசியாக அகற்றப்பட்டன. சாவின் விளிம்பிற்கே சென்று, பிழைப்பதற்கு வாய்ப்பில்லை என்று நினைக்கப்பட்ட அந்த இளம் மாணவர் குணமடைந்து நடக்க ஆரம்பித்து விட்டார், அடுத்து கல்லூரியிலும் சேர இருக்கிறார்!

பில்ரோத் மருத்துவமனையின் மனிதாபிமானம்.

மிக மிக சிக்கலான பல அறுவை சிகிச்சைகள், பல்வேறு மருத்துவர்களின் மேற்பார்வை தேவைப்பட்ட இந்த சிக்கலான கேஸுக்கு செலுத்தப்பட வேண்டிய முழு மருத்துவக் கட்டணத்தையும் செலுத்த அந்த மாணவரின் குடும்பத்திற்கு வசதியில்லை என்றறிந்த பில்ரோத் நிர்வாகம் வெகுவாக கட்டணத்தைக் குறைத்துக்கொண்டது.

அனைத்து விதமான நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் அனுபவமும் நிபுணத்துவமும் வாய்ந்த தலைசிறந்த மருத்துவர்களின் உதவியுடன் எல்லா தரப்பு மக்களுக்கும் சிறப்பான மருத்துவ சேவையை வழங்கி வருகிறது இவர்களின் சிறப்பாகும். அதிக ரிஸ்க் நிறைந்த, சவாலான கேஸ்களையும் திறமையுடன் கையாண்டு, உயிர்களைக் காப்பாற்றும் ஒப்பற்ற சேவையில் மிளிர்கிறது டாக்டர் ராஜேஷ் ஜெகன்நாதன் அவர்களின் தலைமையில் செயல்பட்டு வரும் சென்னை பில்ரோத் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை!

அடுத்த கட்டுரைக்கு