Published:Updated:

600 கிராம் எடையில் குழந்தை! பிழைக்க உங்கள் உதவி தேவை.

கெட்டோ
கெட்டோ

11 வருடங்கள் தவமிருந்து பெற்ற குழந்தையைப் பறிகொடுக்கும் நிலையில் இருக்கிறோம். என்ன செய்வதென்றே புரியவில்லை!"-ஜெயலக்ஷ்மி.

50 வயதுக்கு மேல் ஜெயலக்ஷ்மி-பிரகாஷ் தம்பதியின் வாழ்க்கையில் நிகழ்ந்தது அந்த அதிசயம். ஏகப்பட்ட மருத்துவமனை படிகளை ஏறி இறங்கி, இருக்கின்ற டெஸ்டுகளையும் எல்லாம் செய்துபார்த்து, கையிலிருந்த பணத்தை வாரி இறைத்து, இறுதியாக குழந்தை வரம் கிடைத்தது அவர்களுக்கு...

இப்படித் தவமிருந்து பெற்ற மகனைக் கையில் கூட வாங்கமுடியாத பரிதாபம் எந்தப் பெற்றோருக்கும் ஏற்படக்கூடாது. குறைப்பிரசவத்தில் பிறந்ததால் இன்று இன்குபேட்டரில் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே அல்லாடிக்கொண்டிருக்கிறது அந்தப் பிஞ்சு சிசு.

"ஏழைகளுக்கு மட்டும் விதி கெட்டதையே செய்கிறது. வருடக்கணக்காய் காத்திருந்து நமக்கு குழந்தை பிறந்துவிட்டான் என்று தெரிந்தபின்... இப்படியொரு சோதனை எந்தப் பெற்றோருக்கும் ஏற்படவே கூடாது" எனக் கண்ணீர் வடிக்கிறார் தாய் ஜெயலக்ஷ்மி. "மார்ச் மாதத்தில் பிறக்க வேண்டிய குழந்தை ஜனவரி மாதத்திலேயே பிறந்துவிட்டான். 'இவ்வளவு நாள் கஷ்டப்பட்டாயே, சீக்கிரமே வந்துடுறேன் அம்மா' என்று நினைத்தானோ என்னவோ!"

7ஆம் மாதத்தில் ஜெயலக்ஷ்மியின் உடல்நிலை மிகவும் மோசமானதால், வேறு வழியின்றி சிசேரியன் செய்து குழந்தையை வெளியில் எடுத்தனர். பிறந்த குழந்தையின் எடை வெறும் 600 கிராம்தான். குறைப்பிரசவம் என்பதால் மூச்சு மண்டலத்தில் பிரச்னையும், இன்னும் பல உபாதைகளும் காணப்பட்டன.

கெட்டோ
கெட்டோ

"குழந்தையின் முதல் அழுகையைக் கூட என்னால் கேட்க இயலவில்லை, அவ்வளவு மோசமாக இருந்தது என் உடல்நிலை. சின்னஞ்சிறு உடல் முழுக்க ஊசிகளும், டியூப்களும் சொருகிய நிலையில் முதன்முதலாக NICU-வில்தான் குழந்தையை பார்த்தேன்! ஏழ்மையைக் காரணம்காட்டி, நெடுநாள் தவமிருந்து பெற்ற குழந்தையைக் காவுகொடுக்க முடியுமா?"

"தொட்டிலில் இட்டு தாலாட்டி, சீராட்டி பெயர்சூட்டு விழா நடத்தவேண்டிய இவ்வேளையில் மருத்துவமனையே கதி என்று நாங்கள் இருக்கிறோம்." எனக் கதறுகிறார் அந்தத் தாய்.

குழந்தை அபாயக்கட்டத்தை நீங்க இன்னும் 6 வார காலம் ஐ.சி.யூ-வில் இருக்க வேண்டும். நவீன மருத்துவ கருவிகள் மற்றும் மருத்துவ கண்காணிப்பு தொடர்ந்து கிடைத்திட ரூ. 78,40,000 எனும் மிகப்பெரிய தொகை தேவையாயுள்ளது.

பிரகாஷ் தன் கையிருப்பு அனைத்தையும் ஏற்கனவே மருத்துவ சிகிச்சைகளுக்கு செலவழித்துவிட்டார். இப்போது அவரால் செலவு செய்ய முடிந்தது கண்ணீர் மட்டுமே.

மருத்துவமனையிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், தான் பார்த்து வந்த ஆஃபிஸ் அட்டெண்டர் வேலையும் பறிபோனது.

"அனைத்தையும் இழந்துவிட்டோம். இப்போது எங்களிடம் உள்ளது எங்கள் குழந்தை மட்டுந்தான். 11 வருடங்கள் நாங்கள் சிந்திய கண்ணீரின் பலனாக பிறந்த குழந்தையைக் காப்பாற்றுமாறு உங்களிடம் கையேந்தி நிற்கிறோம்."

நீங்கள்தான் இந்தக் குடும்பத்தின் கடைசி நம்பிக்கை. நீங்கள் மனது வைத்து நிதியுதவி செய்தால் மட்டுமே குழந்தை உயிர்ப்பிழைக்கும்.

சிகிச்சையளித்து வரும் மருத்துவமனை இதுகுறித்து சான்று வழங்கியுள்ளனர். சிகிச்சை மற்றும் அது தொடர்பான கட்டணம் குறித்து மேலுமறிய, இந்த நிதித் திரட்டலை ஏற்பாடு செய்தவரையோ அல்லது மருத்துவமனையையோ தொடர்புகொள்ளலாம்.

உதவி செய்ய விரும்புவோர், இந்த லிங்கைக் கிளிக் செய்யவும்.

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை கெட்டோ-வின் விளம்பரதாரர் பகுதி என்பதால் கட்டுரையின் உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பாகாது. இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம் என்பதால் நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அடுத்த கட்டுரைக்கு