Election bannerElection banner
Published:Updated:

'லீடர்ஷிப்' என்றால் என்ன? 'MMM' (எ) M. முருகானந்தத்தின் கதை.

M. முருகானந்தம்
M. முருகானந்தம்

கொண்ட கொள்கையில் பிடிப்பும், மாற்றத்தை நிகழ்த்த வேண்டும் என்ற துடிப்பும், அரசியலில் ஆழப் பார்வையும் கொண்டுள்ள M. முருகானந்தம், சமகால அரசியல் ஆளுமைகளில், உள்ளதை உள்ளபடி உடைத்துப் பேசும் 'பளிச்' ரகத்தவர்.

மக்கள் நீதி மய்யத்தின் (கட்டமைப்பு) பொதுச்செயலாளர் எனும் ஆற்றல் வாய்ந்த பொறுப்பைக் கமல்ஹாசன் இவருக்கு வழங்கியபோது, 'யார் இந்த முருகானந்தம்?' என்று கூகுள் பல தேடல்களைக் கண்டது.

'MMM' என்றால் அத்துப்படி...

தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாநகரில் தற்போது மய்யத்தின் பரப்புரைகளை பறைசாற்றும் முக்கிய பணி M. முருகானந்தத்திற்கு... 'திருவெறும்பூர்' சட்டமன்றத் தொகுதியின் ம.நீ.ம வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் அவர்தான்.

கல்வியில் சிறந்த ஒருவர் தங்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற பொதுமக்களின் ஆசைக்கு நிறைவாகும் டெம்ப்ளேட் முருகானந்தம்தான். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளோமா, இண்டஸ்ட்ரியல் இஞ்சினியரிங்கில் இளநிலைப் பட்டம், பிட்ஸ் - பிலானியில் M.S., மேலும் MBA, MFT, PGDMM என்று தன் வாழ்வில் கல்விக்கு அதிமுக்கியத்துவம் அளித்துள்ளார்.

திருச்சி 'பெல் (BHEL)' நிறுவனத்தில் பணியாளர்களாக இருந்தவர்கள் இவரின் பெற்றோர் மரகதவல்லி & மருதையன். இன்று பெல் நிறுவனத்துக்கு நிகரான ஒரு சாம்ராஜ்ஜியமாக தன்னுடைய 'எக்சல் குழும நிறுவனங்களை' வளர்த்து ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வரும் முருகானந்தம், துடிப்பான இளைஞர்க்கும், பெண்களுக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படக்கூடாது என்பதில் உறுதியானவர்.

'லீடர்ஷிப்' என்றால் என்ன? 'MMM' (எ) M. முருகானந்தத்தின் கதை.

சமூகப் பணிகள்

திருச்சி மாநகரத்தில் பச்சிளம் குழந்தைக்கும் பரிட்சயமாகியிருக்கிறார் MMM எனப்படும் M. முருகானந்தம். காரணம், 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஆற்றி வரும் சமூகப் பணிகள். ரோட்டரி கிளப்பின் உயரிய டிஸ்ட்ரிக்ட் கவர்னர் பதவி வகித்துள்ள இவர், தனது எக்செல் பவுண்டேஷன் மூலம் பசி, ஆரோக்கியம், கல்வி, குழந்தைகள், இளைஞர் மற்றும் முதியோர் மேம்பாடு போன்ற பல சமூகப் பணிகளைச் செய்து வருகிறார்.

கல்வி சார் சமூகப் பணிகளில் தனிக் கவனம் செலுத்தி வரும் இவர், மாற்றுத் திறன் கொண்ட, விபத்தில் பாதிப்படைந்த மற்றும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறார்.

திருச்சி, BHEL தமிழ் வழி நடுநிலைப் பள்ளி மற்றும் செயின்ட் ஜோசப் பள்ளிகளின் தாளாளராக இருகிறார் முருகானந்தம். பணியின்மை காரணமாக கல் குவாரியில் வேலைப்பார்க்கும் ஊழியர்களின் பிள்ளைகள் படிப்பைக் கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது, அவர்களைத் தம் சொந்தச் செலவில் படிக்க வைத்தவர் முருகானந்தம்.

சமூக சீர்திருத்தப் பணிகளைச் செய்துவரும் ரோட்டரி கிளப்பில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ள முருகானந்தம், அச்சங்கத்தின் கொள்கையைத் தனது வாழ்நாள் கொள்கையாகக் கொண்டுள்ளார். எந்தச் செயல் செய்தாலும் முதலில் அது உண்மையானதா? சம்பந்தப்பட்டவர்களுக்கு நல்லது செய்கிறதா? நல்லுறவுகளை மேம்படுத்தக் கூடியதா? சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் பயனுள்ளதாக அமைகிறதா? என்று சுய பரிசோதனை செய்துகொண்டு தன் பயணங்களைத் தொடர்கிறார் இந்தப் புரட்சி அரசியல்காரர்.

'லீடர்ஷிப்' என்றால் என்ன? 'MMM' (எ) M. முருகானந்தத்தின் கதை.

புதுமையான முறையில் பிரச்சாரம்...

மய்யத்தினருடன் இணைந்து எண்ணற்ற பல தெருமுனைப் பிரச்சாரங்கள், தேநீர்க் கடை விளம்பரங்கள், துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், களப்பணிகள் என்று சுற்றிச் சுழன்று பிரச்சார வியூகம் அமைத்து வருகிறார் முருகானந்தம். 'அரசியல்வாதிகள் சுயநலவாதிகள்', 'அரசியல் ஒரு சாக்கடை' என்ற மக்களின் கருத்திற்கு மாறாக தன் பிரச்சாரத்தை முன்னிறுத்த வேண்டும் என்பது அவரது குறிக்கோள்.

பரப்புரைகளோடு நின்றுவிடாது, மக்களிடையே, முக்கியமாக மாணவர்களிடையே உண்மையாகவே அரசியல் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் என்று துடிப்பவர். மாணவர்களுக்கு தலைமைப் பண்பு வகுப்புகளை வழங்கி வரும் இவர் முயற்சியால் ஏறத்தாழ 14 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

தான் எம்.எல்.ஏ வாகவேண்டும் என்று மற்ற கட்சிக்காரர்கள் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் எம்.எல்.ஏ-வாகப் பார்க்கவேண்டும், அரசியலைப் பற்றி மக்களுக்கு ஆழமான கருத்து வேண்டும்' என்று 'நான் MLA ஆனால்' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும், 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும் நடத்திவருகிறார்.

மாறு, மாற்று...

சமூக மாற்றம் நம்மில் இருந்து தொடங்க வேண்டும் என்ற அசைக்க முடியாத கருத்துகொண்டுள்ள முருகானந்தம், தான் பிறந்து வளர்ந்த திருச்சி மாவட்டத்தை முன்னேற்றிடத் துடிக்கும் இளைஞர்க்கு முன்னுதாரணமாக இருக்கிறார். மாற்றம் நோக்கிப் பயணப்படும் இந்த ஆற்றலிடம், ஆட்சிப் பொறுப்பு வர வேண்டும் என்பது சாமானியர்களின் குரலாக ஒலிக்கத் துவங்கியுள்ளது...

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு