Published:Updated:

விளையாட்டாகக் கடலில் தூக்கி எறிந்த கடிதம்! - 50 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த அதிசயம்

கலிலுல்லா.ச

ஒரு பாட்டிலில் வைத்து, 50 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் தூக்கி எறியப்பட்ட கடிதம் ஒன்று, தற்போது கிடைத்திருக்கிறது.

பாட்டில்
பாட்டில் ( theguardian )

எந்த ஒரு எதிர்பார்ப்பும் முன்முடிவும் இல்லாமல் கடலில் தூக்கி ஏறியப்பட்ட ஒரு கடிதம், மீண்டும் உங்களை வந்தடைந்தால் எப்படியிருக்கும். அது என்ன மாதிரியான உணர்வைத் தரும் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா... அப்படியொரு உணர்வுதான் பால் கில்மோருக்கு ஏற்பட்டிருக்கும். 1969-ம் ஆண்டு, பால்கில்மனுக்கு 13 வயது இருந்திருக்கும். அப்போது, தன் கடிதம் ஒன்றை எழுதி, அதை பாட்டிலில் அடைத்து கடலில் தூக்கி ஏறிந்துள்ளார். இதனிடையே, தெற்கு ஆஸ்திரேலியாவில் தலியா பகுதியைச் சேரந்த சிறுவன் ஜியா எலியட் (வயது 9). சிறுவன் அங்கிருக்கும் கடற்கரை மணலில் வழக்கம்போல விளையாடிக்கொண்டிருந்தான்.

கடிதம்
கடிதம்
ABC Adelaide

அப்போது, மணலில் புதைந்திருந்த பாட்டில் ஒன்றைப் பார்த்து, அதை எடுத்துக்கொண்டு தன் தந்தையிடம் சென்றான். அவர், தந்தை பால் எலியட், அந்தப் பாட்டிலை உடைத்து, அதிலிருக்கும் கடிதத்தைப் படித்துப் பார்த்தார். அதில், `என் பெயர் பால்கில்மோர். பேர்ஸ்டார் என்ற கப்பலில் இங்கிலாந்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். இதைப் படிப்பவர்கள், எனக்கு பதில் அளிக்கவும்” என்று எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்த சிறுவன் ஜியா எலியட்,`இதை சம்பந்தப்பட்டவரிடம் கொண்டுசெல்ல எதுவும் வழி இருக்கா?’ என்று தந்தையிடம் கேட்க, அவர், ` சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில், கடிதத்தை சம்பந்தபட்டவருக்கு தெரியப்படுத்துவது பெரிய விஷயமல்ல’ என்று கூறினார்.

உடனே அந்தக் கடிதம் சமூக வலைதளத்தில் பதியப்பட்டு, அதிக அளவில் ஷேர் ஆனது. கடிதத்துக்கு சொந்தக்காரர் கடிதத்தைப் பார்ப்பாரா? என்று எதிர்பார்ப்பில் இவர்களும் இருந்தனர். அதிக ஷேர் செய்யப்பட்டதன் எதிரொலியாக, பால்கிமோருக்கு கடிதம் கிடைத்தது. இதுகுறித்து பால்கில்மோர், `சமீபத்தில்தான் இந்தக் கடித்ததைப் பற்றி என் மனைவியிடம் கூறிக்கொண்டிருந்தேன்.

பால் கில்மோர்
பால் கில்மோர்
ABC Adelaide

இங்கிலாந்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு கப்பலில் சென்றுகொண்டிருக்கும்போது, விளையாட்டுத்தனமாக இந்தக் கடித்தத்தை எழுதி கடலில் வீசினேன். 50 ஆண்டுகள் கழித்து கடிதம் கிடைத்துள்ளதை நம்பமுடியவில்ல; ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது” என்றார்.