Published:Updated:

பெண்கள் கைநிறைய சம்பாதிக்கலாம்! - அழகுக்கலை நிபுணர் Dr. வசுந்தரா #VisibleDifference

Dr. வசுந்தரா
Dr. வசுந்தரா

அழகுக்கலை நிபுணர், டிவி பிரபலம், சக்சஸ்ஃபுல் பிசினஸ் உமன் என்று பியூட்டி ஐகான் ஆக விளங்கும் வசுந்தரா தற்போது யூட்யூபில் அதிகம் தேடப்படும் பெயராக மாறியிருக்கிறார்.

இயற்கையான பொருள்களை வைத்து, இயல்பாக அழகை மெருகேற்ற இவர் தரும் பியூட்டி டிப்ஸ் அன்றும் இன்றும் என்றும் டிரெண்டிங்!

பியூட்டி டிப்ஸ் தரும் டிவி ஷோ ஒன்றில் பெண் தொகுப்பாளர் சில காரணங்களால் வெளியேறிவிட, வசுந்தராவே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். 'அட நமக்கு ஒரு புது ஆங்கர் கிடைச்சாச்சு' என்று அந்த டிவி சேனலும் இவரைப் புது புரோக்ராமில் இறக்கிவிட, பார்வையாளர்களை அள்ள ஆரம்பித்துவிட்டார் இந்தப் பார்லர் குயின். அப்போது வசுந்தராவுக்கு கல்யாணம் நடந்த புதுசு. இதெல்லாம் நடந்து இன்று 30 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது!

ஹாபி டு வாழ்க்கை...

'படித்த பெண் வீட்டில் சும்மா எதற்கு இருக்கணும்?' என்று மாமியார் கொடுத்த ஊக்கத்தில் ஒன்றரை மாத பியூட்டி கோர்ஸ் ஒன்றில் சேர்ந்திருக்கிறார் வசுந்தரா. எடுத்த கோர்ஸும், கோர்ஸ் எடுத்த டீச்சரும் ரொம்பவே பிடித்துப்போக 6 மாதமாக நீண்டுள்ளது பயிற்சிப் படிப்பு! அழகுக்கலையில் தனக்கு மிகுந்த ஈடுபாடு வந்ததற்கு காரணம் தன் ஆசிரியையின் அற்புதமான வழிகாட்டல்தான் என்கிறார் வசுந்தரா...

கோர்ஸ் முடிந்தது. 'உங்களுக்குத் தெரிந்ததை எனக்கு சொல்லித் தாங்களேன்' என்று பெண்மணி ஒருவர் கேட்க தன் வித்தையை எல்லாம் அவருக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார் வசுந்தரா. கற்றபின் நிற்க அதற்குத் தக என்று அந்தப் பெண்மணி ஓரிரு மாதங்களில் ஒரு பியூட்டி பார்லரே வைத்துவிட்டார். 'அட நமக்கு ஏன் இந்த யோசனை தோன்றவில்லை' என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தி.நகரில் தான் ஆரம்பித்த 'விசிபிள் டிபரன்ஸ்' பார்லருக்கு இன்று வசுந்தராதான் அடையாளம்!

பெண்கள் கைநிறைய சம்பாதிக்கலாம்! - அழகுக்கலை நிபுணர் Dr. வசுந்தரா #VisibleDifference

பெண்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

"பொதுவாக டீச்சர் பணி பெண்களுக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. அதைப்போல சிறப்பான, அதேசமயம் சுவராஸ்யமான துறைதான் அழகுக்கலை. அழகு ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது, ஒருவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கக்கூடியது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகரித்து வருவதால், இன்று 'பியூட்டி செஷன்' ஒரு தேவையாகப் பார்க்கப்படுகிறது. சருமப் பராமரிப்பு, ஹேர்கேர் & வெட்டிங் மேக் அப்பில் கொட்டிக் கிடக்கிறது வாய்ப்பு. மாதம் ரூ. 10,000 முதல் ரூ. 15,000 வரை சுலபமாகச் சம்பாதிக்கலாம்." என்கிறார் வசுந்தரா.

விசிபிள் டிஃபரன்ஸ் வழங்கும் கோர்ஸ்கள்!

நிறைய மேக் ஆப் ஆர்டிஸ்ட்கள் இருக்கலாம், ஆனால் அதில் சிலரே விஷயம் தெரிந்த பியூட்டி தெரப்பிஸ்டுகள். சருமம் தலைமுடி எல்லாம் நம் உடலின் அங்கங்கள், அவற்றில் கை வைக்கும் முன் அதில் நிபுணத்துவம் பெற்றிருப்பது முக்கியம். கடந்த 30 வருடங்களாக உலகத்தின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று படித்து, நான் கற்றுக்கொண்டவற்றை கோர்ஸ்களாக வடிவமைத்து பெண்களுக்குச் சொல்லிக் கொடுத்து வருகிறேன்.

எங்களின் கோர்ஸ்:

சருமப் பராமரிப்பு

ஹேர்கேர்

அரோமா தெரப்பி

ஹெர்பல் தெரப்பி

ஸ்பா தெரப்பி

மெகந்தி

பிரைடல்

ஈஸ்தெட்டிஷியன்...

பல பியூட்டிஷியன்கள் ஆர்வத்தில் பல விஷயங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கற்றுக்கொண்டு களத்தில் இறங்குகின்றனர். தப்பில்லை. ஆனால் நல்ல தெரப்பிஸ்ட்டிடம் படிக்கும்போது அவரின் மொத்த வாழ்நாள் அனுபவத்தையும் கற்றுக்கொள்ளலாம்! பல இடங்களில் மலிவான தரத்திலான கிரீம்கள் மற்றும் பியூட்டி புராடக்ட்ஸ் பயன்படுத்துகிறார்கள். தவறு. கிளையன்ட் தன் உடலை நம்மை நம்பி ஒப்படைக்கிறார், அவருக்கு அலர்ஜி ஏற்படுத்தாத பாதுகாப்பான பொருள்களைப் பயன்படுத்துவது நம் கடமை. இதற்குத்தான் படிப்பு மிகவும் முக்கியம்.

விசிபிள் டிபரன்ஸ் பியூட்டி கோர்ஸ் பயன்கள்:

45 நாட்களில் 'கம்ப்ளீட் கோர்ஸ்'

தியரி மற்றும் பிராக்டிகல் பாடங்கள்

புரொஃபெஷனல் தெரப்பிஸ்ட் ஆகும் வாய்ப்பு

அழகுத் துறை தொழிலில் டிரெய்னிங்

தமிழிலும் பாடங்கள் எடுக்கப்படுகின்றன

'வ்ரிதி' பியூட்டி புராடக்ட்ஸ்

விசிபிள் டிபரன்ஸ்'ன் அழகுத் தயாரிப்புகளை 'வ்ரிதி' எனும் பேரில் வழங்கி வருகிறோம். இவற்றில் உள்ள பெரும்பான்மை பொருள்கள் இயற்கையானவை. எங்கள் கிளையண்ட்ஸ் எல்லாருக்கும் இந்தப் புராடக்ட்களையே வழங்குகிறோம். எங்களின் மாணவர்களுக்கு 25% தள்ளுபடியில் இவற்றைக் கொடுக்கிறோம். இவற்றை விற்பனை செய்தும் அவர்கள் பலனடைகின்றனர்.

விகடன் வாசகர்களுக்கு சிறப்புச் சலுகை

விகடன் வாசகிகளே! பியூட்டி தெரப்பிஸ்ட் ஆவது உங்கள் ஆசையா? அதன் மூலம் கௌரவமான வருமானத்தை ஈட்ட நினைக்கிறீர்களா? விசிபிள் டிபரன்ஸ் உங்களுக்காக தங்கள் அனைத்து கோர்ஸ்களுக்கும் ரூ. 5000 தள்ளுபடி கொடுக்கிறது!

குறுகிய கால ஆஃபராக 'வ்ரிதி' காஸ்மெட்டிக் புராடக்ட்களை வாங்குவோருக்கு 20% தள்ளுபடியும்; பியூட்டி தெரப்பி எடுத்துக்கொள்வோருக்கு 10-15% தள்ளுபடியும் வழங்குகிறது விசிபிள் டிபரன்ஸ்.

கூப்பன் கோட் SMS பெற்றிட, உங்கள் விவரங்களை இங்கே வழங்கவும்:

கோர்ஸ் பற்றி மேலுமறிய அழைக்கவும்: 99999 99999

அடுத்த கட்டுரைக்கு