Published:Updated:

இனி பசுமைப் பட்டாசுகளை வாங்குங்க! #AyyanCrackers

Ayyan Crackers
Ayyan Crackers

சென்ற ஆண்டுகளில் நீங்கள் வாங்கிய பட்டாசுகளைவிட 30% குறைவான புகையை மட்டுமே வெளியிடக்கூடியவை இந்தப் பசுமைப் பட்டாசுகள். அதுமட்டுமல்லாது 160 டெசிபெல் வரை சத்தம் எழுப்பும் பட்டாசுகள் இனி 125 டெசிபெல் சத்தம் மட்டும் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன

ஒளியும் ஒலியும் கலந்து, இருளுக்கு வண்ணம் தீட்டும் பட்டாசுகள் இல்லாமல் தீபாவளி முழுமை அடைவதில்லை. ஆனால், தீபாவளியை வண்ணமயமாக மாற்றும் பட்டாசுகளை உற்பத்தி செய்யும் பட்டாசு நிறுவனங்களின் வாழ்வில் மட்டும் ஏனோ கடந்த சில ஆண்டுகளாக வசந்தம் வீசவில்லை. சுற்றுச்சூழலைக் காரணம் காட்டி உச்ச நீதிமன்றம் அறிவித்த தடை, சீனப் பட்டாசு இறக்குமதி, பட்டாசு வெடிக்கும் நேரத்தில் கெடுபிடி போன்ற பல காரணங்களால் அலைக்கழிக்கப்பட்ட பட்டாசு நிறுவனங்களுக்கு இந்த வருடம் புத்துயிர் கிடைத்துள்ளது, காரணம் ‘பசுமைப் பட்டாசுகள்!’

பசுமைப் பட்டாசுகள் ரெடி!

“கடந்த ஆண்டே உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, சுற்றுச்சூழலுக்கு தீங்கிழைக்காத பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியிருந்தோம். இந்த வருடம் முழுமையாக பசுமைப் பட்டாசுகளைத் தயாரித்து, அதற்கான அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறோம்” என்கின்றனர் சிவகாசியின் முன்னணி பட்டாசு உற்பத்தி நிறுவனமான அய்யன் ஃபையர்வர்கஸ்.

பசுமைப் பட்டாசு - என்ன ஸ்பெஷல்?

“சென்ற ஆண்டுகளில் நீங்கள் வாங்கிய பட்டாசுகளைவிட 30% குறைவான புகையை மட்டுமே வெளியிடக்கூடியவை இந்தப் பசுமைப் பட்டாசுகள். அதுமட்டுமல்லாது 160 டெசிபெல் வரை சத்தம் எழுப்பும் பட்டாசுகள் இனி 125 டெசிபெல் சத்தம் மட்டும் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.” எனத் தெரிவிக்கிறது அய்யன் பட்டாசுகள் நிறுவனம்.

வெடித்தபின் தண்ணீர் மூலங்களாக மாறும் 'Water Releasers' எனும் முறையில் பசுமைப் பட்டாசுகளைத் தயாரித்துள்ளதாக அறிவிக்கிறது அய்யன்.

வரவேற்கத்தக்க மாற்றம்...

“சென்ற தீபாவளிக்கே, பசுமைப் பட்டாசுகளை அய்யன் ஃபையர்வர்கஸ் போன்ற நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியிருந்தாலும், பசுமைப் பட்டாசுகளுக்குச் சான்றிதழ் வழங்கும் அமைப்பான ‘சி.எஸ்.ஐ.ஆர் – நீரி’யின் ஒப்புதல்கள் அனைத்தும் இந்தாண்டுதான் பலருக்கும் முழுமையாக கிடைத்துள்ளன. இதனால் அய்யன் ஃபையர்வர்க்ஸ் உள்ளிட்ட பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்யும் சிவகாசியைச் சேர்ந்த ஆலைகளுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது”

“நச்சுப் பொருள்கள் என்று 6 வகை உலோகங்கள்/கனிமங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. ஆனால் இந்தப் பொருள்களை சிவகாசியைச் சேர்ந்த எந்த நிறுவனமும் தங்கள் தயாரிப்பில் இதுவரை பயன்படுத்தியது கிடையாது என்பதே உண்மை. உச்ச நீதிமன்றம் மற்றும் இந்தியப் பசுமை தீர்ப்பாயத்தின் அறிவுறுத்தலின்படி புகை மற்றும் சத்தத்தைக் குறைப்பதற்கு, ரசாயனக் கலவையில் பல மாற்றங்களைச் செய்து, முந்தைய பட்டாசுகளைவிடச் சுற்றுச்சூழலுக்குக் கேட்டை விளைவிக்காத பசுமைப் பட்டாசுகளை இப்போது உற்பத்தி செய்துள்ளோம். சர்வதேச தரத்தில் இருப்பதால் வெளிநாடுகளுக்கு பசுமைப் பட்டாசுகளை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் கூட இப்போது ஏற்பட்டுள்ளது.”

விலையில் மாற்றம் உண்டா?

காலத்துக்குத் தேவையான இந்த மாற்றத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும். புதிய முறைப்படி பசுமைப் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டாலும் இதன் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்பது நிம்மதியளிக்கிறது. பசுமைப் பட்டாசுகளுக்கு உரிய சின்னம் தாங்கி வரும் அய்யன் பட்டாசுகளை வாங்கி, இனி பசுமை தீபாவளியைக் கொண்டாடி மகிழலாம்!

அடுத்த கட்டுரைக்கு