Published:Updated:

செக்கு எண்ணெய் சர்வே முடிவுகள் இதோ...

செக்கு எண்ணெய் சுத்தமாக இருப்பதாக நினைப்பதோடு இருந்துவிடாமல், அது உண்மையில் சுத்தமானதுதான் என்கிற தெளிவு கிடைத்தால் நமக்கு நிம்மதி!

செக்கு எண்ணெய்
செக்கு எண்ணெய்

இரண்டு வாரங்களாக நடத்தப்பட்ட செக்கு எண்ணெய் குறித்த ஆன்லைன் சர்வே முடிவுகள் உங்கள் பார்வைக்கு...

செக்கு எண்ணெய் சர்வே முடிவுகள் இதோ...

செக்கு எண்ணெயைப் பொறுத்தவரை ஆரோக்கியத்தைத்தான் மக்கள் முன்னிலைப்படுத்துகின்றனர்.

செக்கு எண்ணெய் சர்வே முடிவுகள் இதோ...

எந்தவொரு உணவு சம்பந்தப்பட்ட நிறுவனமும் உணவுத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம். உணவு சார் சிறு குறு தொழில்கள்கூட இந்த லைசென்ஸ் பெற்று வியாபாரத்தை நடத்துகின்றன. அப்படி இருக்கும்போது செக்கு எண்ணெய் உற்பத்தியாளர்களும் தங்களின் லைசென்ஸ் பற்றி மக்களிடம் எடுத்துரைத்தால் மட்டுமே வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக முடியும். ஆனால், இது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகம் இல்லை என்பதை இங்கே தெளிவாக காணமுடிகிறது.

செக்கு எண்ணெய் சர்வே முடிவுகள் இதோ...

பெரும்பாலும் குடும்பத்தொழில், சிறு தொழில் எனச் செய்வதால் செக்கு எண்ணெய் தயாரிப்பு சுகாதாரமில்லாத இடங்களில் தயாரிக்கப்படுவதை பார்க்க இயலுகிறது. மேலும், எண்ணெய் வித்துக்களை மொத்தமாக கொள்முதல் செய்யும் பெரிய நிறுவனமாக அல்லாமல், குறு நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் செக்கு எண்ணெய் வித்து, வேலையாள் கூலி போன்றவற்றைச் சமாளிக்க பாமாயில் போன்ற மலிவு விலை எண்ணெய்களைக் கலக்க வாய்ப்பிருப்பதாக பலர் கருத்து தெரிவித்து இருந்தனர். இது தவிர இயற்கை, ஆரோக்கியம் எனப் பேசும் நாம் செக்கு எண்ணெய் தயாரிக்கப் பயன்படுத்தும் மூலப் பொருள்கள் யாவும் இயற்கையாய் விளைந்தவையா என்பதை உறுதி செய்யத் தவறுகிறோம் என்பதை 21% பேர் அமோதிக்கின்றனர்.

செக்கு எண்ணெய் சர்வே முடிவுகள் இதோ...

செக்கை நேரில் பார்வையிட்டு வாங்குவது பாராட்டுதலுக்குரியது. இருப்பினும் கடையின் உணவுத் தர லைசென்ஸ், சுகாதாரம், செக்கில் போடப்படும் எண்ணெய் மூலப்பொருள்களின் இயற்கை & தரம், கலப்படம் இல்லாத தன்மை பற்றியும் தெரிந்துகொள்ளுதல் இன்னும் சிறப்பு...

செக்கு எண்ணெய் சர்வே முடிவுகள் இதோ...

செக்கு எண்ணெய் பயன்படுத்துவதால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா? எனும் கேள்விக்கு 93% பேர் இல்லை என்றே கூறுகின்றனர். இதுகுறித்த அறிவியல்பூர்வமான ஆய்வு வெளியிடப்பட்டால் மட்டுமே இன்னும் செக்கு எண்ணெய் குறித்து அறிந்துகொள்ளமுடியும்.

செக்கு எண்ணெய் சர்வே முடிவுகள் இதோ...

செக்கு எண்ணெய் சுத்தமாக இருப்பதாக நினைப்பதோடு இருந்துவிடாமல், அது உண்மையில் சுத்தமானதுதான் என்கிற தெளிவு கிடைத்தால் நமக்கு நிம்மதி!

செக்கு எண்ணெய் சர்வே முடிவுகள் இதோ...

சமையல் செக்கு எண்ணெய்களாக தேங்காய், நிலக்கடலை மற்றும் நல்லெண்ணெயே பிரதானமாக தயாரிக்கப்படுகின்றன. இவற்றை அதிக வெப்பத்தில் பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளது. 60% பேர் செக்கு எண்ணெய்க்கு அதரவு அளித்திருந்தாலும், கிட்டத்தட்ட 40% மக்கள் ஆரோக்கியத்துக்கு ஏற்ற பிற எண்ணெய்களைத் தாங்கள் மறுக்கவில்லை எனக் கூறியிருக்கிறார்கள்.