Published:Updated:

`நாம சொல்றதை, மக்கள் ஒரு நிமிஷமாவது நிண்ணு யோசிக்கணும்!'- இளைஞர்களின் அர்த்தமுள்ள ஹாலிடே

youngsters awareness painting
youngsters awareness painting

கார்த்திகேயன் உட்பட, இந்தக் குழுவில் உள்ள பலரும் பார்வையற்ற குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பதுடன், பல்வேறு சமூக அமைப்புகளிலும் தன்னார்வலர்களாகப் பணியாற்றுகிறார்கள்.

சுற்றுச்சுவர்களில் ஓவியங்கள் வரைவதற்காக, விடுமுறை நாள்களில் படையெடுக்கிறது ஓர் இளைஞர்கள் குழு. சென்னை`எக்கோ சொசைட்டி இண்டியா' அமைப்பைச் சேர்ந்த இவர்களின் நோக்கம், சுவர் ஓவியங்கள் மூலம் சமூகத்துக்குத் தேவையான மிக முக்கியமான விஷயங்களுக்கு விழப்புணர்வு ஏற்படுத்துவது. சென்னை விமான நிலைய சுற்றுச்சுவரிலுள்ள கலாசார சுற்றுலா தளங்கள் குறித்த கண்கவர் ஓவியங்களை இந்தக் குழுவினர்தான் வரைந்துள்ளனர்.

youngsters awareness painting
youngsters awareness painting

``ஒரு நல்ல விஷயத்தை எவ்வளவு மெனக்கெட்டு கத்திச் சொன்னாலும் அதை வெகுஜன மக்களுக்குக் கொண்டுபோய் சேர்க்கிறது சவாலா இருக்கு. நாம வெளிப்படுத்த நினைக்கும் விஷயத்தை, ஒரு நிமிடமாவது மக்கள் நிண்ணு யோசிக்கணும்.

youngsters awareness painting
youngsters awareness painting

அது, விழிப்புணர்வு ஓவியங்கள் மூலம் சாத்தியமாகும்னு உணர்ந்தோம். அதன்படி, பொதுமக்கள் அதிகம் கூடும் விமான நிலையம், பேருந்து நிலையம், பள்ளிகள்னு பல்வேறு இடங்கள்ல விழிப்புணர்வு ஓவியங்களை வரைகிறோம்.

இதன்மூலம்,  குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பிளாஸ்டிக் ஒழிப்பு, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, கட்டாயக் கல்வி உட்பட ஏராளமான விஷயங்களுக்கு ஓவியங்கள் மூலம் விழிப்புணர்வு செய்கிறோம்.

youngsters awareness painting
youngsters awareness painting

இந்த முயற்சி, மணிக்கணக்கில் கத்திப் பேசுவதைவிடவும் மேலானது. எல்லோராலும் இந்த ஓவியங்களுக்கான அர்த்தத்தை உணர முடியும். இதன்மூலம் சின்ன மாற்றம் உருவானாலும் எங்களுக்கு மகிழ்ச்சிதான்" என்கிறார், இந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பாளராக இருக்கும் இன்ஜினீயர் கார்த்திகேயன்.

youngsters awareness painting
youngsters awareness painting

வேலைக்குச் செல்லும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்டோர் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இவர்களில் பலரும், சனி மற்றும் ஞாயிறு உட்பட விடுமுறை தினங்களில் தன்னார்வத்துடன் ஓவியம் வரைவதற்கு ஆஜராகிவிடுகிறார்கள்.

``பள்ளிகள் உள்ளிட்ட முக்கியமான இடங்கள்ல ஓவியம் வரைய நாங்களே அனுமதி கேட்போம். பிறகு, ஓவியம் வரைவதற்குத் தேவையான செலவுகளுக்கு ஸ்பான்ஸர்கள் உதவுவாங்க. எங்க குழுவினரைப் பற்றி கேள்விப்பட்டு, சென்னை விமான நிலையத்தினர் எங்களை அணுகினாங்க. பெயின்ட் உட்பட எல்லாப் பொருள்களையும் வாங்கிக்கொடுத்தாங்க. நாங்க விமான நிலைய சுற்றுச்சுவரில் ஓவியம் வரைஞ்சுகொடுத்தோம்.

youngsters awareness painting
youngsters awareness painting

இப்படி நல்ல காரணத்துக்காக எங்களை அணுகினால், உடனடியாக சேவை நோக்கத்துடன் ஓவியம் வரைஞ்சு கொடுப்போம்" என்ற கார்த்திகேயன் உட்பட இந்தக் குழுவில் உள்ள பலரும், பார்வையற்ற குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பதுடன், பல்வேறு சமூக அமைப்புகளிலும் தன்னார்வலர்களாகப் பணியாற்றுகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு