Published:Updated:

மன்னர் காலங்களில் வெளியிடப்பட்ட விநாயகர் உருவம் பொறித்த நாணயங்கள்!

என்.ஜி.மணிகண்டன்

பண்டைய காலத்தில் மன்னர்களால் வெளியிடப்பட்ட விநாயகர் உருவம் பொறித்த செம்பு நாணயங்களின் தொகுப்பு.

  • 1/14

    1509 ம் ஆண்டு செஞ்சி நாயக்கர்களால் வெளியிடப்பட்ட விநாயகர் பொறித்த நாணயம்.

  • 2/14

    1529–ம் ஆண்டு மதுரை நாயக்கர்களால் வெளியிடப்பட்டது.

  • 3/14

    1635–ம் ஆண்டு தஞ்சை நாயக்கர்களால் வெளியிடப்பட்டது.

  • 4/14

    1690–ல் ஆற்காடு நவாப் வெளியிட்டது.

  • 5/14

    மதுரைக்கு தென்பகுதியில் வாழ்ந்த பாளையக்காரர்களால் 1529–ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஒருபுறம் விநாயகரும் மறுபுறம் பழனி எனத் தமிழிலும் பொறிக்கப்பட்டுள்ளது.

  • 6/14

    1529–ல் மதுரை நாயக்கர்களால் வெளியிடப்பட்ட நாணயம்.

  • 7/14

    1606ல் ராமநாதபுரம் சேதுபதி வெளியிட்ட நாணயம். ஒருபுறம் விநாயகர் உருவம் மறுபுறம் சேதுபதி எனத் தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது.

  • 8/14

    1689ல் மதுரையை ஆண்ட நாயக்கர்களால் வெளியிடப்பட்ட மங்கம்மா நாணயம். இந்த நாணயத்தில் மங்கம்மா எனத் தெலுங்கில் பொறிக்கப்பட்டுள்ளது.

  • 9/14

    1635ம் ஆண்டு தஞ்சை நாயக்கர்களால் வெளியிடப்பட்ட விநாயகர் நாணயம்.

  • 10/14

    1490ல் மைசூர் உடையார் வெளியிட்டது.

  • 11/14

    1660–ல் மதுரை நாயக்கர்களால் வெளியிடப்பட்ட நாணயத்தில் ஒருபுறம் விநாயகரும் மறுபுறம் ஶ்ரீரங்கா எனத் தெலுங்கிலும் பொறிக்கப்பட்டிருந்தது.

  • 12/14

    1635–ல் தஞ்சை நாயக்கர்களால் வெளியிடப்பட்டது. ஒருபுறம் விநாயகர் தனது வாகனத்தில் அமர்ந்திருப்பது போலும் மறுபுறம் சிவலிங்கமும் பொறிக்கப்பட்டுள்ளது.

  • 13/14

    1529–ல் பாளையக்காரர்களால் வெளியிடப்பட்டது. ஒருபுறம் விநாயகரும் மறுபுறம் விருப்பாசி எனத் தமிழ் எழுத்தும் பொறிக்கப்பட்டுள்ளது.

  • 14/14

    1670–ல் தஞ்சை மராட்டியர்களால் வெளியிடப்பட்டது. ஒருபுறம் விநாயகரும் மறுபுறம் சிவலிங்கமும் அரூர் எனத் தமிழ் எழுத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது.