Published:Updated:

90 நாடுகளில் 900+ வகை காஃபி! #Continental_Coffee

முன்னணி ஸ்டோர்ஸ், மளிகைக் கடைகள், சில்லறை நிறுவனங்கள் மற்றும் இ.காமர்ஸ் தளங்களில் தற்போது கான்டினென்டல் காஃபியை வாங்கலாம்

Continental Coffee
Continental Coffee

காலையில் தினமும் கண்விழித்தால், நம் மனம் தேடும் மணம்தான் காஃபி! வேலைக்குச் செல்பவரோ, இரவில் கண் விழித்துப் படிக்கும் மாணவரோ, ஒரு கப் காஃபிக்கு இணையாக அவர்களுக்கு உடனடி உற்சாகத்தை கொடுக்கும் பானம் வேறேதுமில்லை, இதனால்தான் உலகம் முழுக்க உள்ள மக்களின் மனதில் காஃபி நீங்கா இடம்பிடித்துள்ளது. கடந்த பத்து வருடங்களாக இந்தியர்கள் டீயை விட காஃபியை அதிகம் விரும்ப ஆரம்பித்துள்ளனர், இளசுகளின் காஃபி ஆர்வம் இதற்கொரு முக்கிய காரணமாகும்.

கான்டினென்டல் காஃபி

25 வருடமாக காஃபி துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனம் 'கான்டினென்டல் காஃபி' - உலகளவில் காஃபி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. துவக்கத்தில் 10 நாடுகளுக்கு மட்டுமே காஃபியை ஏற்றுமதி செய்துவந்த இந்நிறுவனம் தற்போது 90 நாடுகளுக்கு 900-ற்கும் மேற்பட்ட பிளெண்டுகளில் காஃபியை ஏற்றுமதி செய்துவருகிறது!

90 நாடுகளில் 900+ வகை காஃபி! #Continental_Coffee

சர்வதேச தரத்தில் காஃபி பிளெண்ட் தயாரிப்பதில் நிபுணர்களாக விளங்கும் கான்டினென்டல் காஃபி தற்போது இந்தியாவில் நேரடி விற்பனையில் களமிறங்கியுள்ளது. தற்போது இந்தியக் கடைகளில் கான்டினென்டல் 3 பிராண்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

கான்டினென்டல் 'எக்ஸ்ட்ரா - எக்ஸ்டரா ஸ்ட்ராங் இன்ஸ்டன்ட் காஃபி

கான்டினென்டல் 'மால்குடி' - பாரம்பர்ய ஃபில்டர் காஃபி மற்றும்

கான்டினென்டல் 'திஸ்' - இன்ஸ்டன்ட் பிரீமிக்ஸ் காஃபி

முன்னணி ஸ்டோர்ஸ், மளிகைக் கடைகள், சில்லறை நிறுவனங்கள் மற்றும் இ.காமர்ஸ் தளங்களில் தற்போது கான்டினென்டல் காஃபியை வாங்கலாம். புதுமை, டிரெண்ட் மற்றும் தரத்துக்கு கான்டினென்டல் கொடுத்து தனக்கென தனி வாடிக்கையாளர்களை உருவாக்கி வைத்துள்ளது கான்டினென்டல்.

90 நாடுகளில் 900+ வகை காஃபி! #Continental_Coffee

நல்ல காஃபி குடித்தால், நல்ல யோசனைகள் உதிக்கும். ஆனால், மிகச்சிறந்த யோசனைகளால் மட்டுமே மிகச்சசிறந்த காஃபியை உருவாக்க முடியும். கான்டினென்டல் காஃபியின் இந்தப் பயணத்தில் முக்கிய பங்கு வகிப்பவர் அக்கம்பெனியின் எக்ஸக்யூட்டிவ் சேர்மேன் செல்ல ராஜேந்திர பிரசாத். 'மிகச் சிறந்த காஃபியை அனைவரும் பருகவேண்டும்' என்பது அவரது கனவு. சர்வதேச இன்ஸ்டன்ட் காஃபி அமைப்பால் சமீபத்தில் நடத்தப்பட்ட உலக இன்ஸ்டன்ட் காஃபி சந்திப்பில் செல்ல ராஜேந்திர பிரசாத் (எக்ஸக்யூட்டிவ் சேர்மேன், சிசிஎல் புராடக்ட்ஸ் (இந்தியா)) அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தனது கனவை விரைவில் நனவாக்கிவிடுவார் செல்ல ராஜேந்திர பிரசாத்!