Published:Updated:

மே 1... உயிர் காக்க உழைப்போருக்காக உங்கள் சார்பில் ஓர் அறப்பணி!

அறப்பணி
அறப்பணி

இந்த யுத்தத்தின் தாக்கத்தால் அமைப்புசாரா தொழிலாளர்களும், அன்றாடம் உழைத்துச் சாப்பிடும் எளிய மக்களும் பெரும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

மே 1... உழைப்பாளர் தினம். நம் உயிர் காக்க தங்கள் உயிரைப் பணயம் வைத்து, கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் முன்வரிசையில் நின்று நமக்காக உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவத்துறை ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினரையும் போற்றும் தருணம் இது.

அதேவேளையில், இந்த யுத்தத்தின் தாக்கத்தால் அமைப்புசாரா தொழிலாளர்களும், அன்றாடம் உழைத்துச் சாப்பிடும் எளிய மக்களும் பெரும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். ஒருவேளை உணவுகூட சரியாகக் கிடைக்காமல் தவிக்கிறார்கள். மத்திய, மாநில அரசுகள் திட்டங்களை அறிவித்து செயல்படுத்துகின்றன. நல்லுள்ளம் கொண்ட தன்னார்வலர்கள் ஆங்காங்கே களமிறங்கி தங்களாலான உதவிகளைச் செய்கிறார்கள். ஆனாலும், தேவை அதிகமிருக்கிறது.

போதுமான முகக்கவசங்கள் இல்லாமல் தவிக்கும் தூய்மைப் பணியாளர்களுக்குக் கைகொடுக்க வேண்டும்; உணவில்லாமல் தவிக்கின்ற, வாழ்வாதாரம் இழந்து, எதிர்காலத்தின் மீது நம்பிக்கையின்றி கலங்குகிற நம் உறவுகளுக்குக் கரம் கொடுத்து மீட்கவேண்டும்… இதுபோன்றவைதான் தற்போதைக்கு நம்முன்பாக இருக்கும் ஆகப்பெரும் பொறுப்புகள்.

மே 1... உயிர் காக்க உழைப்போருக்காக உங்கள் சார்பில் ஓர் அறப்பணி!

கொரோனா பரவலில் இருந்து நம்மைக் காப்பதற்கே ஊரடங்கு. ஆனாலும், அன்றாடம் கடுமையாக உழைத்தால் மட்டுமே கூலி என்ற நிலையில் இருக்கும் சாமானியர்களின் வாழ்க்கையை அது புரட்டிபோட்டுவிட்டது. அன்றாடம் உணவுக்கே வழியில்லாமல் அல்லாடும் அந்த உழைப்பாளிகளுக்காக, உங்களுடன் கைகோத்து அறப்பணியாற்றி வருகிறது விகடன்.

அந்த வகையில், 2020 மே 3 வரையில் விகடன் குழுமத்துக்கு வாசகர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து 10 சதவிகிதத்தொகையை, கொரோனா நிவாரணப் பணிகளுக்கு அர்ப்பணிக்கவுள்ளோம். நீங்கள் இப்போது சலுகையுடன் பெறும் விகடன் டிஜிட்டல் சந்தாவின் 10% தொகையும் நிச்சயம் இப்போது உரியவர்களுக்கு உதவும்.

அதேபோல், தற்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு விகடன் டிஜிட்டல் சப்ஸ்க்ரிப்ஷனில் 43 சதவீத அளவில் சலுகையையும் உங்களுக்காகத் தருகிறோம்.

* ரூ.1,749 மதிப்பிலான ஓர் ஆண்டு டிஜிட்டல் சப்ஸ்க்ரிப்ஷனை ரு.999-க்கு பெற > க்ளிக் செய்க... https://bit.ly/3aSWG2h

* ரூ.2,998 மதிப்பிலான 2 ஆண்டுகளுக்கான டிஜிட்டல் சப்ஸ்க்ரிப்ஷனை ரூ.1,799-க்குப் பெற > க்ளிக் செய்க... https://bit.ly/3d9n3CC

விகடன் டஜிட்டலில் சப்ஸ்கிரைப் செய்வதன் பலன்கள்:

* ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், அவள் விகடன், சக்தி விகடன், நாணயம் விகடன், பசுமை விகடன், மோட்டார் விகடன், அவள் கிச்சன் என அனைத்து விகடன் இதழ்களையும் வாசிக்கலாம்.

* விகடன் டிஜிட்டல் ப்ரைம் கன்டென்ட்டுகள் அனைத்தையும் பெறலாம்.

* 2006 முதல் வெளியான அனைத்து விகடன் இதழ்களின் பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம் வரலாம்.

* விகடன் மொபைல் ஆப், ஸ்மார்ட்போன், டேப், டெஸ்க்டாப் எங்கும் எதிலும் நாடலாம்.

* விகடன் App-ல் இதழ்களை டவுன்லோடு செய்து, தேவைப்படும்போது ஆஃப்லைனில் வாசிக்கும் வசதி; ஒலி வடிவிலும் கட்டுரைகளை உள்வாங்கும் வசதி.

* விகடன் சப்ஸ்க்ரைபர்கள் எவ்வித விளம்பரங்களுமின்றி வாசிப்பு அனுபவம் பெறலாம்.

அடுத்த கட்டுரைக்கு