Published:Updated:

'சட்டென' ருசித்து மகிழ... #Thillais_Masala

மசாலாக்களில் சிறந்து விளங்கும் தில்லை'ஸ், சமையல் அறையில் நாம் செலவிடும் நேரத்தைக் குறைக்கிறது

Thillais
Thillais

இந்தப் பொறப்புதான் ருசிச்சி சாப்பிட கிடைச்சுது...' உணவு பிரியர்களின் ஃபேவரட் சாங்கில் இதுவும் ஒன்றாக இருக்கும். உணவை ருசித்து உண்ணும் பலருக்கு ரசித்து சமைக்க நேரமிருப்பதில்லை. குறிப்பாக 'நகர்ப்புற வாழ்க்கைக்கு இதெல்லாம் செட்டே ஆகாது' என்பது தற்கால தலைமுறையின் வெளிப்படையான வாய்ஸ். இருந்தாலும் நமக்குப் பிடித்தமான விஷயங்களில் சுவாரஸ்யமும் வேடிக்கையும் நிறைந்திருந்தால் அதன் முடிவே வேற லெவல், சமையலும் அப்படித்தான்!

சமையல் என்றால் பணிக்குப்போகும் பெண்களுக்கு தினமும் திண்டாட்டம்தான். இதில் குழந்தைகள் இருந்தால் சொல்லவே தேவையில்லை. தினமும் என்ன சமைப்பது? பசிக்கும் குழந்தைகளுக்கும், திடீரென வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கும் சட்டென என்ன உணவு சமைப்பது? என்று குழம்புவார்கள். சிலர், உணவுப் பிரியராக இருந்தும் சமைக்கத் தெரியலையே? உணவு சமைக்கப் பிடித்திருந்தும் நேரமில்லையே? என நினைப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கும், சுடுதண்ணீர் வைக்கத் தெரிந்த டாட்'ஸ் லிட்டில் பிரின்சஸ்களுக்கும், '30 நாளில் சமையல்' வகையறா புத்தகங்களை நாடும் மாம்'ஸ் லிட்டில் பிரின்ஸ்களுக்கும் சமைக்கும் வேலையை சுலபமாக்கித் தருகிறது 'தில்லை'ஸ் மசாலா' (Thillais Masala).

'சட்டென' ருசித்து மகிழ... #Thillais_Masala

மணக்கும் தில்லை'ஸ் மசாலாக்கள்...

மசாலாக்களில் சிறந்து விளங்கும் தில்லை'ஸ், சமையல் அறையில் நாம் செலவிடும் நேரத்தைக் குறைக்கிறது. நகர்ப்புற இல்லத்தரசிகளின் சமையலை ஜாலியாகவும், சுலபமாகவும் மாற்றுகிறது. ஏனெனில், வெங்காயம், இஞ்சி, பூண்டு எனத் தனித்தனியாக வதக்குவதில் நேரத்தை செலவிடாமல் அதெல்லாம் அடங்கிய தில்லை'ஸ் மசாலாவை அப்படியே சேர்த்தால் சமைக்க வேண்டிய டிஷ் நொடியில் ரெடி! இதனால் எந்தப் பொருளை எப்போது போட்டு சமைக்க வேண்டும் என்கிற குழப்பமும், சுவை மாறும் பயமும் இருக்காது.

சமையல் மசாலா பவுடர்கள் மட்டுமின்றி, ஈஸி பிரியாணி, விருதுநகர் சால்னா, பள்ளிபாளையம் சிக்கன், செட்டிநாடு சிக்கன், மெரினா மீன் வறுவல், சிக்கன் 65 போன்ற ஸ்பெஷல் மசாலாக்களையும் வழங்குகிறது. இதனால், 'எனக்கு உடனே செட்டிநாடு சிக்கன் சாப்பிடனும் போல இருக்கு...' என்று நினைப்பவர்கள்கூட சட்டென தில்லை'ஸ் மசாலாவைக்கொண்டு சுவையான சிக்கன் டஷ் செய்து உடனே ருசித்து மகிழலாம். மணம், சுவை, தரம் எனப் பார்த்து பார்த்து அரைக்கப்படும் தில்லை'ஸ் மசாலாக்களை சூப்பர் மார்க்கெட்ஸ், சிக்கன் & மீன் விற்பனை நிலையங்கள் மட்டுமின்றி தில்லைஸின் ஆன்லைன் தளத்திலும், பிற ஆன்லைன் வர்த்தகர்களிடமும் பெறலாம்.

'சட்டென' ருசித்து மகிழ... #Thillais_Masala

100 வருட பாரம்பர்யம்!

விருதுநகரின் VPSA பரமசிவ நாடார் நிறுவனக் குழுவிற்குச் சொந்தமான 'ThillaisMasala' பிராண்ட், கடந்த பத்து வருடங்களாக செயலாற்றிவருகிறது. கூட்டுக் குடும்பத்தின் கைவண்ணத்தால் உருவாக்கப்பட்ட பரமசிவ நாடார் நிறுவனத்தை தற்போது அக்குடும்பத்தின் 5-வது தலைமுறையினர் நடத்திவருகின்றனர். காய்ந்த மிளகாய் மற்றும் வத்தல் வகைகளை ஏற்றுமதி செய்யும் முறையை தமிழகத்துக்குக் கொண்டுவந்த முன்னோடி நிறுவனம் என்கிற பெருமையை பரமசிவ நாடார் நிறுவனம் பெற்றுள்ளது. அமெரிக்கா, சீனா, மலேசியா, வியட்நாம், ஐரோப்பிய நாடுகள், சிங்கப்பூர் போன்ற பல நாடுகளுக்கு, மிளகாய், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் போன்றவற்றை வாழையடிவாழையாக ஏற்றுமதி செய்து தங்களின் பாரம்பர்யத்தைத் தொடர்ந்துவருகின்றனர்.

'இனிமையான உணவுகளே, இனிமையான குடும்பத்தை உருவாக்குகின்றது' எனும் தில்லை'ஸ் மசாலாவோடு வாழ்வை இனிதாக்குங்கள்!