Published:Updated:

அனைவருக்கும் வீடு! 'கிரெடாய் ஃபேர் புரோ 2020'

கிரெடாய் ஃபேர் புரோ
கிரெடாய் ஃபேர் புரோ

ரியல் எஸ்டேட் ஆலோசனைகளை அள்ளிக் கொடுத்து, நமது சந்தேகங்களை தெளிவிக்க பல நிபுணர்களும் கண்காட்சிக்கு வருகை தரவுள்ளனர்.

வருடக்கணக்காக சொந்த வீடு வாங்கும் திட்டம், அதற்கான சேமிப்பு... என வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் சொந்த வீட்டைப் பற்றி மனதில் கனவு கோட்டையை கட்டிவருபவர்களா நீங்கள்?... கிரெடாய் (CREDAI) நடத்தும் வீட்டு விற்பனை கண்காட்சியில் கலந்துகொண்டு, உங்களின் கனவு வீட்டை வாங்கும் வாய்ப்பை பெற்றிடுங்கள்!

அனைவருக்கும் வீடு!  'கிரெடாய் ஃபேர் புரோ 2020'

'கிரெடாய் ஃபேர் புரோ', வீட்டு விற்பனை கண்காட்சிக்கு, இந்த வருடம் 13-வது வயதாகும். ஆண்டுதோறும் நடந்துவரும் இந்நிகழ்ச்சி, இந்தாண்டு 'நந்தம்பாக்கம், சென்னை ட்ரேட் சென்டர்'-இல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 21, 22, மற்றும் 23 ஆம் தேதிகளில் 'கிரெடாய் ஃபேர் புரோ 2020' கண்காட்சி நடக்க இருக்கிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் செயல்பட்டு வரும், 80+ பில்டர்களின் 250-க்கும் மேற்பட்ட வீட்டுக் கட்டுமானத் திட்டங்கள், கிரெடாய் ஃபேர் புரோ கண்காட்சியில் இடம்பெறுகின்றன. இத்திட்டங்களில் அடங்கும் 25,000-க்கும் மேற்பட்ட ஃபிளாட்களில் இருந்து, நீங்கள் விரும்பும் அம்சங்கள்கொண்ட, உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற வீட்டை தேர்வு செய்துகொள்ளலாம்.

சட்டரீதியான ஆலோசனை, வாஸ்து, சொத்து சம்பந்தப்பட்ட சேவைகள், வங்கிக் கடன்கள் என ரியல் எஸ்டேட் சம்பந்தமான அனைத்துத் துறை குறித்த புரிதல்களைப் பெற இந்தக் கண்காட்சி உதவியாக இருக்கும். வீட்டுத் திட்டங்களில், பலதரப்பட்ட தேர்வுகள் உங்களின் பார்வைக்கு வைக்கப்படுவதால், மனத்துக்குப் பிடித்த வீடுகளைத் தேர்வு செய்ய முடியும்.

அனைவருக்கும் வீடு!  'கிரெடாய் ஃபேர் புரோ 2020'

ரியல் எஸ்டேட் ஆலோசனைகளை அள்ளிக் கொடுத்து, நமது சந்தேகங்களை தெளிவிக்க பல நிபுணர்களும் கண்காட்சிக்கு வருகை தரவுள்ளனர். சிறந்த பில்டர்கள் இக்கண்காட்சியில் இடம்பெற உள்ளதால் தரமான வீட்டைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம். கிரெடாய் ஃபேர் புரோ 2020-வில் 1500 பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஐபி பாஸ் உள்ளவர்கள் எக்ஸ்போ-வின் அனைத்து ஸ்டால்கள் மற்றும் நிபுணர்களை பிரத்யேகமாக அணுக முடியும்.

வி.ஐ.பி. பாஸை பெற படிவத்தை பூர்த்தி செய்ய...

அடுத்த கட்டுரைக்கு