Published:Updated:

ஆட்டோ டிரைவர் மகனின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்!

Doctor
Doctor

தமிழ்நாட்டிலிருந்து நாங்கள் சுமார் 62 கோடி நிதி திரட்டியுள்ளோம், அதில் சுமார் 56 கோடி மருத்துவ அவசரநிலைகளுக்கு மட்டுமே திரட்டப்பட்டது

''உலகளவில் 'கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை' எனும் மருத்துவ முறையால் உயிர் பிழைத்தவர்கள் இன்று ஏராளம். இந்தியாவிலும் இச்சிகிச்சை பிரபலமடைந்து வந்தாலும், இதுகுறித்த விழிப்புணர்வு நம்மிடையே குறைந்தே காணப்படுகிறது'' என்கிறார் 1500-க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ள கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் கார்த்திக் மதிவாணன். இந்தியா முழுக்க கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு வாங்கப்படும் கட்டணம் எளிய மக்களால் எளிதில் புரட்ட முடியாததாக உள்ளது. இதை மாற்றி அனைத்துவிதமான பொருளாதார நிலையில் இருக்கும் மக்களுக்கும் இந்தச் சிகிச்சை சென்றடைய வேண்டும் எனப் பல நடவடிக்கைகளை எடுத்து வருபவர் டாக்டர் கார்த்திக்.

''மது அருந்தாதவர்களையும், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களையும்கூட கல்லீரல் நோய் பாதிக்கிறது, இதை Non Alcoholic Fatty Liver Disease (NAFLD) என்கிறோம். இதற்கும், Liver Cirrhosis எனப்படும் முற்றிய நிலை கல்லீரல் பாதிப்புக்கும் 'கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை' கண்கண்ட பலனளிப்பதை இச்சிகிச்சையை எடுத்துக்கொண்டவர்களின் மூலம் அறிய முடிகிறது" என்கிறார் டாக்டர் கார்த்திக். செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 'இன்ஸ்டிட்யூட் ஆஃப் லிவர் சயின்ஸ்' அமைப்பை நிறுவியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோ டிரைவர் மகனின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்!

உயிர்களைக் காப்பாற்ற முடியும்...

“இறுதிக்கட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பலரின் உயிரைக் காப்பாற்றி அவர்களுக்கு புனர்ஜென்மத்தைக் கொடுத்த பெருமை இந்தச் சிகிச்சையை சேரும். லட்ச கணக்கில் கல்லீரல் நோயாளிகள் இருக்கும் நம் நாட்டில், ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கில் மட்டுமே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. உயிரைக் காப்பாற்றும் இந்தச் சிகிச்சை முறையைக் குறித்து அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுவது அவசியம். மேலும், எளிய மக்களும் இந்தச் சிகிச்சையை எடுத்துக்கொண்டு பயன் பெற முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவது நம் கடமையாகும். மிலாப் போன்ற கூட்டு நிதி திரட்டு தளம், பொருளாதார உதவியைக் கேட்பதை எளிமைப்படுத்தியுள்ளது" எனும் டாக்டர் கார்த்திக் மதிவாணனின் வழிகாட்டல் மற்றும் மிலாபின் உதவியால் இக்கட்டான நிலையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட எளிய குடும்பத்தைச் சேர்ந்த 3 இளைஞர்களுக்கு கடந்த வருடம் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

இளம் கிரிக்கெட் வீரர்...

16 வயதான சுஷீகரனுக்கு கிரிக்கெட் வீரர் ஆகவேண்டும் என்பது கனவு. சுஷீகரன், திருவள்ளூர் அண்டர் 14 அணிக்கான தேர்வுக்குச் செல்லும்போது வாந்தி எடுத்து மயக்கமுற்றார். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவருக்கு 'வில்ஸன்ஸ் நோய்' (Wilson's Disease) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அரிய வகை மரபியல் நோயான வில்ஸன்ஸ்-ஆல் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் இருந்து செப்புத் துகள்களை அகற்றும் வேலையை கல்லீரல் நிறுத்திவிடுகிறது. இந்த நோய் உள்ளவர்கள் தண்ணீர் அல்லது நீர்ம உணவுகளைக் கொஞ்சமே எடுத்துக்கொள்ள வேண்டும், மீறினால் சிறுநீர் கழிக்கும்போது ரண வேதனை ஏற்படும்...

மதிவதன் மற்றும் நவீனின் கதை...

ஆட்டோ டிரைவர் அம்பிகாபதியின் மகன் மதிவதன், வயது 14. கடந்த வருட ஜூன் மாதம் மதிவதனின் கல்லீரல் முழுவதுமாக செயலிழந்தது. "முதலில் மஞ்சள் காமாலை என நினைத்து அரசு மருத்துவனையில் மதிவதனுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. திடீரென ஒருநாள் நினைவிழந்து கோமாவுக்குச் சென்றுவிட்டான். நிலைமை மிக மோசமானதால் அங்கிருந்த மருத்துவர் ஒருவரின் ஆலோசனையில் டாக்டர் கார்த்திக் மதிவாணனைத் தொடர்புகொண்டோம். என்னுடைய கல்லீரல் மதிவதனுக்குப் பொருந்திப்போக, டாக்டர் கார்த்திக் தலைமையில் சென்னையில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. நான் ஒரு சாதாரண ஆட்டோ டிரைவர் என்பதால் பெரிய செலவு ஏதும் இல்லாமல் ஆபரேஷனை நடத்திக்கொடுத்தனர். என் மகன் உயிர் பிழைத்து நடமாட உதவிசெய்த டாக்டர் கார்த்திக் மற்றும் அவரின் மருத்துவ குழுவுக்கு எங்களின் நன்றி" எனக் கண் கலங்குகிறார் மதியின் அப்பா அம்பிகாபதி.

கும்பகோணத்தைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய நவீனுக்கு, அம்மாவும் அண்ணனும்தான் சொந்தம். கணவர் இறந்துவிட்டதால் டெய்லரிங் வேலை பார்த்து சிரமமான சூழ்நிலையில் பிள்ளைகளை வளர்ந்து வந்தார் தாய் மகேஷ்வரி. "ஒருநாள் காலை நிறுத்தாமல் வாந்தி எடுத்து மயங்கிச் சரிந்தான் நவீன். ரேஷன் அரிசிச் சோறு சாப்பிட்டதுதான் காரணம் என முதலில் நினைத்தேன். திருச்சியில் ஒரு மருத்துவமனையில் சேர்த்தபோது, நவீனின் கல்லீரல் 100% பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. நவீனின் அண்ணன் அருணின் நண்பர்கள் மூலம் டாக்டர் கார்த்திக்கைத் தொடர்புகொண்டு, நவீனைச் சென்னைக்கு அழைத்துவந்தோம். சோதனை செய்துபார்த்ததில் அருணின் கல்லீரல் நவீனோடு ஒத்துப்போவது தெரியவந்தது. உடனடியாக அண்ணனிடம் இருந்து பகுதி கல்லீரலை எடுத்து நவீனுக்கு வைத்து கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையை முடித்தனர் மருத்துவர்கள். இன்று நவீன் மீண்டும் டிப்ளோமா வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார். டாக்டர் கார்த்திக் மற்றும் சிகிச்சைக்கு நிதி தந்து உதவிய அனைவருக்கும் நன்றி" என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் மகேஷ்வரி.

ஆட்டோ டிரைவர் மகனின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்!

பொதுமக்களுக்கு நன்றிகள்!

“கடந்த சில ஆண்டுகளில், கல்லீரல் மாற்று சிகிச்சைக்காக நிதி திரட்டும் மக்களின் எண்ணிக்கையில் தெளிவான உயர்வு காணப்படுகிறது. சிகிச்சையளிக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு உள்ளது என்பதற்கு இது ஒரு குறிகாட்டியாக இருக்கலாம், சிலருக்கு ஆன்லைன் நிதி திரட்டும் தளம் இல்லாமல் சிகிச்சை முற்றிலும் சாத்தியமற்றதாக இருந்திருக்கும். தமிழ்நாட்டிலிருந்து நாங்கள் சுமார் 62 கோடி நிதி திரட்டியுள்ளோம், அதில் சுமார் 56 கோடி மருத்துவ அவசரநிலைகளுக்கு மட்டுமே திரட்டப்பட்டது. ஆன்லைன் நிதிதிரட்ட உங்களுக்குத் தேவையானது ஒரு ஸ்மார்ட்போன் மட்டுமே, மேலும் நீங்கள் வாட்ஸ் அப்பைப் பயன்படுத்தலாம் அல்லது ஆன்லைனில் பணம் செலுத்துவது எப்படி என்று தெரிந்தால், நீங்கள் டிஜிட்டல் நிதிதிரட்டலின் ஒரு பகுதியாகவும் இருக்கலாம்.

டாக்டர் கார்த்திக் போன்ற மகத்தான மருத்துவர்களின் உதவியுடன், இந்தச் சிகிச்சை தேவைப்படும் அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்ற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்கிறார் மிலாப் தலைவரும் இணை நிறுவனருமான அனோஜ் விஸ்வநாதன்.

"நீண்ட நெடிய பயணத்தில் இதுவொரு துவக்கம்தான். நல்லவர்களின் துணை இருந்தால் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை மூலம், கல்லீரல் நோயால் இறப்பவர்கள் இல்லாத இந்தியாவை உருவாக்கிடலாம்!" என நம்பிக்கை மிளிரும் கண்களுடன் கூறுகிறார் டாக்டர் கார்த்திக் மதிவாணன்.

சிகிச்சை குறித்த விவரங்களுக்கு

Dr.கார்த்திக் மதிவாணன், Chettinad Super Speciality Hospitals, Chennai. Email: drmkarthik@gmail.com

அப்பாயிண்ட்மெண்ட் பெற: +91 9597815952

ஆன்லைன் நிதி திரட்டல் பற்றிய மேலும் தகவல்களுக்கு milaap.org அணுகவும் அல்லது

(+91) 9916174848 வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை விளம்பரதாரர் பகுதி என்பதால், இதில் கூறப்பட்டுள்ள செய்திகளின் உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பாகாது

அடுத்த கட்டுரைக்கு