Published:Updated:

`தன் உரிமையாளர் இறந்த சில நிமிடங்களில் உயிரைவிட்ட நாய்!’ - நெகிழ்ச்சி சம்பவம்

கலிலுல்லா.ச

`எப்போதும் அவனுடனே தூங்கிக்கிடக்கும்; சகமனிதனைப்போலத்தான் அந்த நாயை அவன் பாவித்தான். இறுதியில்...’

Stuart
Stuart ( mirror )

ஸ்டூவர்ட் ஹட்சிசன் (25)-க்கு, 2011-ம் ஆண்டு மூளையில் டியூமர் இருப்பது கண்டறியப்பட்டது. 8 வருடமாக அவர் போராடிவந்தார். ஆனால், அவரது போராட்டம் இறுதியில் மரணத்தில் முடிந்தது. கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி உயிரிழந்துவிட்டார் ஸ்டூவர்ட். `அவர் இறந்த 15 நிமிடத்திலேயே வேதனை தாங்க முடியாமல், வளர்த்த நாய் நீரோவும் தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டது’ என்கிறார் ஸ்டூவர்ட்டின் தாய்.

Stuart
Stuart
mirror

``மூன்று நாய்களை வளர்த்தான் ஸ்டூவர்ட். இருந்தபோதிலும் நீரோதான் அவனுக்கு நெருக்கமான நாய். சக மனிதனைப்போல அதைப் பாவித்தான். எப்போதும் நீரோ அவனுடனே இருக்கும்” என்கிறார் தாய் ஃபியோனா. கடந்த ஜனவரி மாதம் டேனியல் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார் ஸ்டூவர்ட். காலம் வித்தியாசமானது அது நாம் நினைக்காததை நிகழ்த்தக்கூடியது.

``தன் கணவர் மற்றும் நாயின் இழப்பை ஈடுகட்ட முடியாமல் மனமுடைந்துகிடக்கிறார். மருத்துவமனையில் இருந்த ஸ்டூவர்டை கடந்த 4 வாரங்களுக்கு முன் வீட்டுக்கு அழைத்துவந்து பார்த்துக்கொண்டோம். காரணம் `பிறந்த இடத்தில் தான் இறக்க வேண்டும் என அவன் எண்ணினான்.

Stuart with dog
Stuart with dog
mirror

அவன் வீட்டிலிருக்கும்போது, அவனை நல்லபடியாக பார்த்துக்கொண்டோம். நாங்கள் எதிர்நோக்கித்தான் இருந்தோம்; ஆனாலும், இதை எங்களால் ஏற்க முடியவில்லை” என்று கண்ணீர் சிந்துகிறார் அவரின் தாய். கடந்த மே மாதம் ஸ்டூவர்ட்டுக்கு கையில் வலி இருந்தது. செக்-அப்புக்குச் சென்றவரிடம், `எதுவும் பிரச்னையில்லை’ என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால், ஜூன்மாதத்தில் அவர் கைமுழுவதும் அந்த வலி பரவியது. உடனே ஸ்கேன் எடுத்தபோது அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. மூளையிலிருந்த கேன்சர், எலும்புகளில் பரவியிருந்தது கண்டறியப்பட்டது. அப்போது மரணத்தின் அருகிலிருந்தார் ஸ்டூவர்ட்,``வீட்டில் அவர் இருந்த நாள்களில் நீரோக்கும் அவருக்குமான நெருக்கும் அதிகமாக இருந்தது. இறுதியில் ஆகஸ்ட் 11-ம் தேதி மதியம் 1.15 மணிக்கு ஸ்டூவர்ட் உயிர் பிரிய, அடுத்த 15 நிமிடங்களில் நீரோவும் இறந்துவிட்டது” என்கிறார் அவரின் தாய்.

Stuart  and nero
Stuart and nero
mirror

ஸ்டூவர்ட் இறந்ததும், நாய் நீரோவின் உடலில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அது இறந்துவிட்டது. பிரிவைத் தாங்க முடியாத நிலை மனிதர்களுக்கு மட்டுமல்ல; பிற உயிரினங்களுக்கும் உண்டு!