Published:Updated:

டிசைனிங் துறையில் அபார வாய்ப்புகள்! வேலை + தொழில்முனைவு...

டாட்
டாட்

இன்று எல்லா துறையிலும் செயற்கை அறிவு வந்துவிட்டது அல்லது துரிதமாக வந்துகொண்டிருக்கிறது. கிரியேட்டிவிட்டி அல்லது படைப்புத்திறன் என்பது அறிவைத் தாண்டிய திறமை சார்ந்தது.

குழந்தைகளின் திறமைகளைப் பார்த்துப் பெருமைகொள்ளும் இந்தியப் பெற்றோர்கள், அதே திறமை மீது நம்பிக்கை வைத்து அதுசார்ந்த துறையில் தங்கள் பிள்ளைகளைப் பணியாற்ற விடுவதில்லை. வேலை, மாதச் சம்பளம், மன நிம்மதி - இதுதான் பெரும்பான்மையான இந்தியர்களின் தாரக மந்திரமாக இருக்கிறது.

ஓவியம் வரையும் திறமை, கையில் கிடைத்த பொருள்களை வைத்து

வித்தியாசமான பொருள்களை வடிவமைக்கும் திறமை, பிரச்சனைகளை வித்தியாசமாகக் கையாளும் திறமை - இவையெல்லாம் உங்கள் குழந்தையிடம் தென்பட்டாலோ அல்லது அதுகுறித்த ஆர்வம் இருந்தாலோ, உங்கள் குழந்தைக்கு நிச்சயமாக 'வடிவமைப்பு' எனப்படும் டிசைனிங் துறையில் பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது என அடித்துக் கூறுகிறார் கல்வியாளர் மற்றும் சென்னையின் முதல் டிசைன் கல்லூரியான டாட் ஸ்கூல் ஆப் டிசைனிங்-கின் நிறுவனரான ஏ. ஆர். ஆர். ராமநாதன்.

'கிரியேட்டிவிட்டி'க்கு என்றுமே வாய்ப்பு குறையாது!

டிசைனிங் துறையில் அபார வாய்ப்புகள்! வேலை + தொழில்முனைவு...

இன்று எல்லா துறையிலும் செயற்கை அறிவு வந்துவிட்டது அல்லது துரிதமாக வந்துகொண்டிருக்கிறது. கிரியேட்டிவிட்டி அல்லது படைப்புத்திறன் என்பது அறிவைத் தாண்டிய திறமை சார்ந்தது. செயற்கை அறிவால் என்றுமே மனிதனின் படைப்புத் திறனுக்கு ஈடுகொடுக்க முடியாது. அதனால்தான் டிசைனிங் துறை எந்தக்காலத்திலும் வாய்ப்புகளை அள்ளித்தரும் துறையாக விளங்குகிறது.

டிசைனிங் துறை - என்னென்ன படிக்கலாம்?

டிசைனிங் துறையை நான்கு முக்கிய பிரிவுகளாக பிரிக்கலாம்.

1. கம்யூனிகேஷன் டிசைனிங்

2. இன்டீரியர் டிசைனிங்

3. ஃபேஷன் டிசைனிங்

4. இண்டஸ்ட்ரியல் டிசைனிங்

இத்துறைகளில் ஒரு மாணவர் படிக்கும் நான்கு வருட பி. டெஸ் (B.Des.) டெக்னிக்கல் பட்டப்படிப்பு இன்ஜினியரிங்கிற்கு இணையானதாகும், ஆனால் பொறியியலைக் காட்டிலும் வேலைவாய்ப்பு மற்றும் சொந்தத் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற வாய்ப்புகள் இதில் அதிகம். ஃபிரீலான்ஸிங் எனப்படும் தனித்தொழில் முனைவோராக நல்லதொரு வழியாக இப்படிப்புகள் விளங்குகின்றன.

டிசைனிங் துறையில் அபார வாய்ப்புகள்! வேலை + தொழில்முனைவு...

கம்யூனிகேஷன் டிசைனிங் வாய்ப்புகள்:

பிலிம் அண்ட் மீடியா மேக்கிங், அனிமேஷன், கிராஃபிக் டிசைனிங் போன்றவை கம்யூனிகேஷன் டிசைனிங்கில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. பிஎஸ்சி விஸ்காமைவிட, 'பி. டெஸ் கம்யூனிகேஷன்'-ல் (B.Des Communication) டெக்னிக்கல் பாடங்களுக்கான முக்கியத்துவம் அதிகமாக அளிக்கப்படுகிறது.

கம்யூனிகேஷன் டிசைனிங் படிப்பதற்கு நவீன தொழில்நுட்ப வசதிகள் அடங்கிய கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் லாப், கிரீன் ரூம், டப்பிங் ஸ்டுடியோ, தியேட்டர் போன்றவை தேவைப்படுகின்றன. இவையனைத்தும் சென்னை டாட் ஸ்கூல் ஆஃப் டிசைனிங்கில் இருக்கின்றன.

பி. டெஸ் கம்யூனிகேஷன் சார்ந்த வேலைகள்: கிராபிக் டிசைனர், யு ஐ/ யு எக்ஸ் (UI / UX) டிசைனர், விளம்பரப் பிரிவு, புகைப்பட ஊடகவியலாளர், டிஜிட்டல் இமேஜிங் டெக்னீசியன், கலை வடிவமைப்பாளர், அனிமேஷன் டிசைனர் மற்றும் இன்ஃபர்மேஷன் டிசைனர்.

இன்டீரியர் டிசைனிங் வாய்ப்புகள்:

ஆர்க்கிடெக்சர், வடிவமைப்பு மற்றும் புராஜெக்ட் மேனேஜ்மென்ட் - இம்மூன்றையும் இணைப்பது இன்டீரியர் டிசைனிங்.

வீடு, அலுவலகம்,‌ உணவகங்கள், நட்சத்திர விடுதிகள், ஷாப்பிங் மால் போன்ற பலவகையான இடங்களில் தேவையான பல்வகை உள்கட்டமைப்பு வசதிகளை அழகியலுடன் வடிவமைக்க வேண்டியது இன்டீரியர் டிசைனரின் கடமையாகும்.

டிசைனிங் துறையில் அபார வாய்ப்புகள்! வேலை + தொழில்முனைவு...

குறிப்பாக ஃபர்னிச்சர் டிசைனிங், மாடுலர் கிச்சன் ஆகியவற்றுக்கு இப்போது அதிக தேவை இருக்கிறது. பி. ஆர்க் படிப்பதை விட 'பி. டெஸ். இன்டீரியர் டிசைனிங்' படிப்பதன் மூலம் வடிவமைப்பு குறித்த செயல்முறை விஷயங்களைச் சிறந்த முறையில் அறிந்துகொள்ள முடிகிறது.

ஃபேஷன் டிசைனிங் வாய்ப்புகள்:

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொழில் துறையாக விளங்குகிறது ஜவுளித்துறை.

பொதுவான ஆடை வடிவமைப்பு, இசை, நடனம், திரைப்படங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் தேவையான பிரத்யேக ஆடை வடிவமைப்பு, அணிகலன் வடிவமைப்பு முதலியவற்றை 'பி. டெஸ் ஃபேஷன் டிசைனிங்'கில் படிக்கலாம்.

தமிழக மாணவர்களுக்கு ஃபேஷன் துறை பற்றிய விழிப்புணர்வு மிக மிகக் குறைவாக உள்ளது, இது வருத்தத்தை அளிக்கும் விஷயமாகும். இளைஞர்கள் அதிகமுள்ள இந்தியாவில் ஃபேஷன் டிசைனர்களின் தேவை அதிகம்.

திறமை மற்றும் ஆர்வமுள்ள ஃபேஷன் டிசைனர்கள் சொந்த பொட்டிக் அல்லது டெய்லரிங் யூனிட் வைத்து சிறப்பாக சம்பாதிக்கலாம். நம் வடிவமைப்பில் உருவாகும் ஆடை அணிகலன்களை பிறர் உடுத்தி சிறந்த கருத்துக்களைக் கொடுப்பதால், மனதுக்கு உற்சாகம் தரக்கூடிய ஒரு துறையாக ஃபேஷன் டிசைனிங் இருக்கிறது.

இன்டஸ்ட்ரியல் டிசைன் வாய்ப்புகள்:

உங்களுக்குப் பிடித்த விளையாட்டுப் பொருள்கள் செய்வதையே வாழ்நாள் முழுக்க வேலையாக செய்வது எவ்வளவு சந்தோஷமான விஷயம்!

ஆம், குழந்தைகளுக்கான புதுமையான விளையாட்டு உபகரணங்கள் வடிவமைப்பு, கேமிங், 3டி டிசைனிங், ஆட்டோமொபைல் டிசைனிங், செராமிக் மற்றும் கண்ணாடி வடிவமைப்பு, வீட்டு உபகரணங்கள் வடிவமைப்பு எனப் பலதரப்பட்ட பொருள்களை வடிவமைப்பவர்கள் இன்டஸ்ட்ரியல் டிசைனர்ஸ். காலத்துக்கேற்ற சவால்களை உணர்ந்து அவற்றுக்குப் புதுமையான விடையைத் தங்களின் வடிவமைப்புகள் மூலம் தருபவர்கள் இவர்கள்.

மாணவர்களின் திறனை அறிந்திட உதவும் 'கிரியேட்டிவ் க்வோஷன்ட் டெஸ்ட் (Creative Quotient Test)':

டிசைனிங் துறையில் அபார வாய்ப்புகள்! வேலை + தொழில்முனைவு...

+2 முடித்த மாணவர்களின் படைப்புத் திறன் (Creativity) மற்றும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறனை (Problem Solving skills) சோதனை செய்து அவர்களுக்கேற்ற டிசைனிங் படிப்பு எது என்பதை அறிய, டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன், கிரியேட்டிவ் க்வோஷன்ட் டெஸ்ட்டை நடத்தி வருகிறது.

+2 படித்த மாணவர் எவரும் இந்தச் சோதனையில் இலவசமாக கலந்துகொள்ளலாம். இதன் முடிவுகள் மற்றும் மாணவரின் ஆர்வத்தைப் பொறுத்து அவருக்கான டிசைனிங் குறித்த ஆலோசனையை வழங்கக் காத்திருக்கிறது டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன்.

வடிவமைப்பு குறித்த பாடங்களுக்கு தேவையான நவீன வசதிகள் கொண்டுள்ளது டாட் ஸ்கூல். இந்தக் கல்லூரியின் வடிவமைப்பு மூலமே டிசைனிங் குறித்த பாடங்களை மாணவர்களால் செயல்முறையாக உணர்ந்துகொள்ள முடியும் என்கிறார் இதன் நிறுவனர் ராமநாதன். டிசைனிங்கில் பல வருட அனுபவம் கொண்ட நிபுணர்கள் பலர் நேரடியாக மாணவர்களுக்கு பாடம் எடுப்பது டாட் ஸ்கூல்-ன் முக்கிய சிறப்பம்சமாகும். இக்கல்லூரி அழகப்பா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகும். டாட் ஸ்கூல் வழங்கும் பாடங்கள் குறித்து அறிய: www.dotsod.in

வடிவமைப்பு படிப்போம், வளமான எதிர்காலத்தை வடிவமைப்போம்!

மாணவர்கள் கிரியேட்டிவ் க்வோஷன்ட் டெஸ்ட்டில் பங்கேற்க கீழ்க்கண்ட விவரங்களை வழங்கவும்.

அடுத்த கட்டுரைக்கு