Published:Updated:

புதிய மொபைல் எண்ணை ஆதாருடன் எப்படி இணைப்பது? | Doubt of Common Man

மொபைல் மற்றும் ஆதார் எண் இணைப்பு
News
மொபைல் மற்றும் ஆதார் எண் இணைப்பு

மொபைல் எண்ணை மாற்றிய பிறகு அல்லது இணைத்த பிறகு நமது ஆதாருடன் மொபைல் எண் இணைந்திருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் ஆதாரில் மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி என்ற கேள்விக்கான கட்டுரையில் நிறைய வாசகர்கள், "புதிய எண்ணை இணைப்பது எப்படி? ஏற்கெனவே பதிவு செய்திருந்த மொபைல் எண் தொலைந்து விட்டால் என்ன செய்வது?" ஆகிய கேள்விகளை முன்வைத்திருந்தார்கள். ஆதார் மொபைல் எண் மாற்றம் தொடர்பான கேள்விகளுக்கான பதில்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
Doubt of common man
Doubt of common man

ஆதாருக்கு பதிவு செய்யும் போதே மொபைல் எண்ணைக் கொடுத்துப் பதிவு செய்து, அந்தக் குறிப்பிட்ட மொபைல் எண் தற்போது நம் கைவசம் இருந்தால் மட்டுமே ஆன்லைன் மூலம் மொபைல் எண்ணை மாற்ற முடியும். இல்லை எனில், நேரடியாக அருகில் இருக்கும் ஆதார் பதிவு மையத்திற்குச் சென்றுதான் மொபைல் எண்ணை மாற்ற முடியும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆதார் அட்டை
ஆதார் அட்டை

புதிதாக மொபைல் எண்ணைச் சேர்க்க அல்லது தொலைந்து போன மொபைல் எண்ணை மாற்றுவதற்கு முதலில் 'Aadhar Enrolment / Correction / Update Form' என்ற படிவத்தை தரவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ள வேண்டும் (படிவத்தைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்)

அதன் பின்னர் நமது பெயர், ஆதார் எண் மற்றும் மாற்ற வேண்டிய அல்லது இணைக்க வேண்டிய மொபைல் எண் ஆகிய தகவல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் பூர்த்தி செய்த படிவத்தை அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று அங்குள்ள அதிகாரியிடம் கொடுத்து, தகவல் மாற்றத்திற்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

Locate Enrolment Centre near
Locate Enrolment Centre near

அருகில் உள்ள ஆதார் மையத்தை தேட இங்கே கிளிக் செய்யவும். கிளிக் செய்து உள்ளே சென்றவுடன் Locate Enrolment Centre near you என்பதன் கீழ் இருக்கும் State, Pin Code, Search box ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றைக் கிளிக் செய்து, நமது மாநிலம், மாவட்டம் அல்லது பின்கோடு ஆகிய தகவல்களைக் கொடுத்து நமக்கு அருகில் இருக்கும் ஆதார் பதிவு மையங்களின் விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

ஆதார் பதிவு மையத்தில் நாம் படிவத்தைக் கொடுத்து செயல்முறைகள் அனைத்தும் முடிந்தவுடன் ஒப்புதல் சீட்டு ஒன்றை, படிவத்தைப் பெற்றுக் கொண்ட அதிகாரி கொடுப்பார். அந்த ஒப்புதல் சீட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களைக் கொண்டு நம்முடைய கோரிக்கை எந்த நிலையில் இருக்கிறது என்பதனை ஆதார் இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மொபைல் எண்ணை மாற்றிய பிறகு அல்லது இணைத்த பிறகு நமது ஆதாருடன் மொபைல் எண் இணைந்திருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். உறுதிசெய்வதற்கு UIDAI இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் உறுதி செய்யும் பக்கத்திற்குச் சென்று (அந்தப் பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்), நம்முடைய ஆதார் மற்றும் மொபைல் எண்ணைக் கொடுத்து இரண்டும் இணைந்திருக்கிறதா என உறுதி செய்து கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

Doubt of common man
Doubt of common man