Published:Updated:

டாக்டர் ஷாலினி எழுதிய 'அர்த்தமுள்ள அந்தரங்கம்' இ-புக் முற்றிலும் இலவசமாக!

அர்த்தமுள்ள அந்தரங்கம்
அர்த்தமுள்ள அந்தரங்கம்

அர்த்தமுள்ள அந்தரங்கம்: இனப்பெருக்கத்தை ஊக்குவிப்பதையே குறியாகக் கொண்டு செயல்படுபவை ஜீன்கள். ஜீன்கள், தன் உயிர் தேவைக்கு ஏற்றவாறு உயிரினங்களில் ஏற்படுத்திய பரிணாம மாற்றங்கள் பல, படர்வன, பறப்பன, ஊர்வன, பாலூட்டிகள்... போன்றவை இவற்றில் அடங்கும்

"மனித இனத்தின் அந்தரங்கத்தைப் பற்றி ஆதி முதல் அந்தம் வரை, அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராயப் போகிறோம். இதுவரை நீங்கள் பார்த்திராத, கேட்டிராத, நினைத்திராத பல திடுக்கிடும் உண்மைகளை உங்களுக்குத் தெளிவாக விளக்கவே இந்த 'அர்த்தமுள்ள அந்தரங்கம்'..." - இப்படி ஆரம்பிக்கிறார் டாக்டர் ஷாலினி.

"காமத்தின் முதலும், முக்கியமானதுமான வகை: இனவிருத்தி காமம் (Reproductive Sex) அதாவது, குழந்தை குட்டி வேண்டுமே என்று ஈடுபடும் உடல் உறவு; உறவு என்று ஏற்பட்டுவிட்டால், அதனை வெறும் 'யாரோ ஓர் ஆணும் பெண்ணும்' என்ற தெளிவற்ற நிலையிலிருந்து 'அவனும் அவளும் ஒரு ஜோடி' என்ற தெளிவான முடிவுக்குக் கொண்டுபோவதே இரண்டாம் வகையான 'ஜோடி சேர்க்கை காமம்' (Pair Formation Sex)...

மானுடர்கள் தங்கள் அந்தஸ்தை அதிகரிக்க தீவிரமாக ஈடுபடும் புணர்ச்சிதான், காமம் நம்பர் எட்டு: அந்தஸ்து காமம் (Status Sex)..." என பன்னிரெண்டு வகையான மனித காமத்தையும், அதனால் மனித இனத்தில் ஏற்பட்ட வாழ்வியல் ஏற்ற - இறக்கங்களையும் விரிவாக விளக்குகிறது, டாக்டர் ஷாலினி எழுதிய 'அர்த்தமுள்ள அந்தரங்கம்' புத்தகம். உங்களுக்காகவே இந்தப் புத்தகத்தை இ-புக் வடிவில் முற்றிலும் இலவசமாக வழங்குகிறோம். (இணைப்பும் விவரமும் கீழே...)

சிக்மண்ட் ஃபிராய்டு முன்வைத்த 'எடிபஸ் காம்ப்ளெக்ஸ்', 'இலெக்ட்ரா காம்ப்ளெக்ஸ்' விளக்கங்கள் முதல் 'பெண்களின் கவரும் நிலைகள்', 'எதிர்மறைக் கவர்ச்சி', 'புணர்ச்சி விதிகள்' வரை... காதல், காமம், உடல், மனம் குறித்த தெளிவான புரிதலைத் தருகிறது இந்தப் புத்தகம்.

சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமி மட்டும்தான் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற கோள்கள் எல்லாம் உயிர்ப்பு சக்தி அற்று மருகி நிற்க, பூமி மட்டும் உயிரினங்களைப் பிரசவித்து. தாய்மைக்குரிய பூரிப்போடு தழைத்துச் செழித்திருக்கிறது. அந்த உயிரினங்களில் தனித்துவமுடையதாக, மற்ற எல்லா உயிரினங்களுக்கும் தலைமை தாங்கக்கூடிய ஆற்றலும் அறிவும் பெற்றதாக இருப்பதுதான் மனித இனத்தின் சிறப்பு.

இந்த ஆற்றலையும் அறிவையும் மனிதனுக்கு அவன் நினைத்த மாத்திரத்திலேயே இயற்கை வழங்கிவிடவில்லை. DNA என்ற புரதச் சுருளில் தோன்றிய உயிரின் தொடக்கம், மனிதன் என்ற உன்னத நிலை வரை பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது. அப்படிப்பட்ட உயிரைத் தாங்கி இருக்கும் உயிரினங்களின் தலையான பணியே இனப்பெருக்கம்தான்.

'அர்த்தமுள்ள அந்தரங்கம்' இ-புக் இலவசமாக இங்கே > https://vikatanapp.page.link/Antharangam

அர்த்தமுள்ள அந்தரங்கம்
அர்த்தமுள்ள அந்தரங்கம்

இனப்பெருக்கத்தை ஊக்குவிப்பதையே குறியாகக் கொண்டு செயல்படுபவை ஜீன்கள். ஜீன்கள், தன் உயிர் தேவைக்கு ஏற்றவாறு உயிரினங்களில் ஏற்படுத்திய பரிணாம மாற்றங்கள் பல, படர்வன, பறப்பன, ஊர்வன, பாலூட்டிகள்... போன்றவை இவற்றில் அடங்கும். பாலூட்டிகளின் முதிர்ந்த பரிணாமம்தான் மனித இனம்.

இந்தப் பரிணாமங்களுக்கும், உயிரினங்களின் வாழ்வியல் மாற்றங்களுக்கும் அடிப்படையாக ஜீன்கள் கையில் எடுத்திருக்கும் யுக்திதான் காமம்.

'காமமா!' என அதிர்ச்சியடைந்தாலும், 'ஆமாம்!' என ஒத்துக்கொள்ள வேண்டிய பல அறிவியல் உண்மைகள் இருக்கின்றன. காமம் என்ற ஒன்று இல்லாவிட்டால் இனப்பெருக்கம் இருந்திருக்காது. உயிர்களும் தழைத்திருக்காது.

ஆக, வாழ்வியல் தேவைக்கான முக்கிய அம்சமாகக் காமம் இருக்கிறது. ஆனால், காம உணர்வில் வக்கிரம் நுழைகிறபோதுதான் அது உயிருக்கு எமனாக முடிகிறது. அதற்கும் உளநலவியல் ரீதியான அறிவியல் காரணங்கள் பல இருக்கின்றன.

பன்னிரெண்டு வகையான மனித காமத்தையும், அதனால் மனித இனத்தில் ஏற்பட்ட வாழ்வியல் ஏற்ற - இறக்கங்களையும் 'அர்த்தமுள்ள அந்தரங்கம்' என்ற இந்தப் புத்தகத்தில் விரிவாக விளக்கி இருக்கிறார் டாக்டர் ஷாலினி.

மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்தப் புத்தகம் இப்போது இ-புக் வடிவில் உங்களுக்காக முற்றிலும் இலவசமாக வழங்குகிறோம். இதற்காக, நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான்:

உங்களது மொபைலில் Vikatan App-ஐ டவுன்லோடு செய்து, ரெஜிஸ்டர் பண்ணினால் போதும், இந்த இ-புத்தகத்தை முழுமையாக வாசிக்கலாம். அத்துடன், புதிதாக விகடன் App-ஐ டவுன்லோடு செய்து தங்களைப் பதிவு செய்துகொள்பவர்கள் விகடன் இதழ்கள் அனைத்தையும் 30 நாள்களுக்கு இலவசமாக வாசிக்கலாம். மேலும், விகடன் இதழ்களின் கடந்த 15 ஆண்டு கால பொக்கிஷப் பகுதிகளிலும் வலம் வரலாம்.

'அர்த்தமுள்ள அந்தரங்கம்' இ-புக் இலவசமாக இங்கே > https://vikatanapp.page.link/Antharangam

அடுத்த கட்டுரைக்கு