Published:Updated:

'அருள்' இல்லை என்றால் வெற்றியும் மகிழ்ச்சியும் இல்லை! – குரு மித்ரேஷிவா

குரு மித்ரேஷிவா
குரு மித்ரேஷிவா

எந்த நொடி ‘பிறரின் நலனுக்காக நான் கொடுக்கிறேன்’ என முடிவெடுத்துவிட்டீர்களோ, அப்போதே ‘அருளாளர்’ என்னும் பிரபஞ்சத்தின் பிரத்தியேக பட்டியலில் சேர்ந்துவிடுவீர்கள்.

ஒரு ஊரில், இரண்டு நபர்களுக்கு பணம் சம்பாதித்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என ஆசை. இருவரும் புதிதாக தொழில் தொடங்குகிறார்கள். இதில் ஒருவரின் தொழில் மட்டும் அமோகமாக நடக்கிறது, மற்றொருவர் எவ்வளவு அறிவாகச் சிந்தித்து செயலாற்றினாலும் அவருக்கு மட்டும் தோல்வி மேல் தோல்வி! ஏன்?

சூட்சுமமான சில விஷயங்களை நாம் இங்கு தெரிந்துகொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. அதில் ஒன்றுதான் பிரபஞ்சத்தின் விதி. மனிதர்கள் வகுக்கும் விதிகள் அறிவு சார்ந்தவை. ஆனால் பிரபஞ்சத்தின் விதிக்கோ ‘அருள்’-தான் அடிப்படை, ஆங்கிலத்தில் இதை ‘Blessing’ என்று கூறுகிறோம்.

அறிவு 1%, அருள் 99%!

நீங்கள் உங்களின் அறிவை எவ்வளவு பயன்படுத்தினாலும் சரி, உங்களின் ‘அருள்’ என்ற அக்கவுண்டில் பேலன்ஸ் குறைகிறது என்றால் வாழ்வில் வெற்றியும் மகிழ்ச்சியும் குறையும் என்பதே பிரபஞ்ச விதி!

நீங்கள் திறமையான கார் ஓட்டுனர் என்றாலும் ரோட்டில் ஓடும் நூற்றுக்கணக்கான பிற வாகனங்களும் சரியாக ஓடினால்தான் நீங்கள் பத்திரமாக வீடு வந்து சேரமுடியும். இங்கே உங்களைக் காப்பாற்றுவது அருள்தான்! அறிவு 1%, அருள் 99%, இதுதான் பிரபஞ்சத்தின் சட்டம்.

அருள் குறைந்ததன் அடையாளம் என்ன?

சில வருடங்களுக்கு முன் சென்னையில் பெருவெள்ளம் வந்தபோது, பாதிக்கப்பட்டோருக்கு கைக்கொடுக்க, உலக மக்கள் எல்லாம் ஓடோடி வந்தனர். பெயர் தெரியாத, முகம் தெரியாத ஏதோவொரு வியாசர்பாடி அன்பருக்கு, வான்கூவர்-லிருந்து வந்து சேர்ந்தன நன்கொடைகள்! எதனாலே?

உயிர்கள் பெரிய அளவில் வாடும்போதெல்லாம், அதைச் சரி செய்ய வேண்டும் என்ற நம் இயற்கை உணர்வான அன்பு துடிக்கிறது. மனதின் அடியில் உறங்கிக்கிடந்த நேயம் உயிர்த்தெழுகிறது. உதவிகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. பூமியில் அருள் ஊற்றெடுக்கிறது!

பிரச்னை முடிந்தபின் அனைவரும், என் ஆரோக்கியம், என் சம்பாத்தியம், என் உறவுகள் எனச் சென்றுவிடுகிறோம். விளைவு, பூமியின் ஒத்திசைவு சீர்குலைந்து அடுத்த பிரச்னை ஆரம்பிக்கிறது!

இன்று பூமியில் ஏற்பட்டிருக்கும் மாபெரும் துன்பத்துக்குக் காரணம் ஏதோவொரு குட்டி வைரஸ் என நினைத்துவிட வேண்டாம். ‘அருள் குறைந்துவிட்டது’ எனப் பிரபஞ்சம் நமக்கு அறிவுறுத்தும் செய்திதான் அது.

அருளை அதிகரிக்கும் உபாயம்...

ஓர் உயிர் துன்பப்படும் வரை காத்திருக்காமல், அது என்றுமே ஆனந்தமாய் வாழ்ந்திட உங்களால் முடிந்தவற்றைச் செய்திடுங்கள். பொறுப்பை கையில் எடுங்கள். உங்களின் ‘அருள்’ சொத்து பன்மடங்கு பெருகும்!

அமிர்தமாக இருந்தாலும் உங்களின் இரைப்பையின் அளவுதான் பருக முடியும் அல்லவா? நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க தேவையான அளவு செல்வத்தை வைத்துக்கொண்டு, மீதியை உதவி தேவைப்படும் சரியான நபர்களுக்கு மகிழ்ச்சியுடன் பகிருங்கள். இதுவே தர்மம்.

நீங்கள் தர்மம் செய்யும்போது, பிரபஞ்சத்தின் விதி சுவாரசியாமான ஒரு விஷயத்தைச் செய்கிறது. எந்த நொடி ‘பிறரின் நலனுக்காக நான் கொடுக்கிறேன்’ என முடிவெடுத்துவிட்டீர்களோ, அப்போதே ‘அருளாளர்’ என்னும் பிரபஞ்சத்தின் பிரத்தியேக பட்டியலில் சேர்ந்துவிடுவீர்கள்.

பிறர் நலனுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால், உங்களுக்கு பத்து கோடி ரூபாயைத் திருப்பித் தர வேண்டும் என்பது பிரபஞ்சத்தின் விதியாகும். பிரபஞ்சம் செய்ய வேண்டிய வேலையை நீங்கள் செய்வதால், உங்களின் வாழ்வை மகிழ்ச்சியாக மாற்ற வேண்டியது இப்போது பிரபஞ்சத்தின் பொறுப்பாகிவிடுகிறது!

'அருள்' இல்லை என்றால் வெற்றியும் மகிழ்ச்சியும் இல்லை! – குரு மித்ரேஷிவா

எளிய வழியில் அருள் பெறலாம் - ‘மித்ரா’

இந்திய மண்ணின் ஞானத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் முனைப்புடன் 'குரு மித்ரேஷிவா' அவர்களால் தொடங்கப்பட்ட இயக்கம், கோவை ‘தக்ஷிணா பவுண்டேஷன்’. அனைவருக்கும் அருள் கிடைத்திட, தற்போது ‘மித்ரா’ எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

மித்ரா', அதாவது நண்பன் எனப்படும் இத்திட்டம் மூலம் கொரோனாவால் வேலை/வாழ்வாதாரம் இழந்து வாடும் ஒரு குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான தரமான உணவுப் பொருள்களை நீங்கள் வழங்கிட முடியும்! ரூ.2500 மட்டும் செலுத்துவது மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய், உள்ளிட்ட அனைத்து மளிகைப் பொருள்களும் உதவி தேவைப்படும் ஒரு குடும்பத்துக்குச் சென்றடையும்.

உங்கள் பகிர்தல், உரியவரைச் சென்றடைவதை உறுதி செய்யும் 'டிராக்கிங் (Tracking) வசதியும் உண்டு. நீங்கள் எந்தக் குடும்பத்துடன் உங்கள் செல்வத்தைப் பகிர்கிறீர்களோ, அவர்களின் தொலைபேசி எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் உங்களுக்கு வழங்கப்படும்.

வேறு எவ்வாறு தர்மம் செய்யலாம்?

1) சமூக வலைத்தளங்களில் மித்ரா' திட்டம் குறித்து பரப்புரை செய்யலாம்

2) மளிகைப் பொருள்களை சேமிக்க இடம் வழங்கலாம்

3) போக்குவரத்து உதவி

4) மொத்த நன்கொடை

5) தன்னார்வளர்களாக வேலை செய்தல் இவ்வாறு மித்ரா' மூலம் உங்கள் வளங்களைப் பகிர்ந்து நீங்களும் 'அருள் பெற்றவராக' மாறலாம்!

மித்ரா-வின் மாபெரும் அறிமுக விழா சென்னையில் டிசம்பர் 20 அன்று காலை 10.24 மணிக்கு நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியின் நேரலையை https://www.youtube.com/ulchemyprogram யூடியூப் சேனலில் காணலாம்.

www.mithra.life மூலம் இப்போதே உங்கள் செல்வத்தைப் பிறருடன் பகிர்ந்திடுங்கள். ‘Mithra’ மொபைல் ஆப் மூலமும் பகிரலாம்!

பெரிய அளவிலான நன்கொடைகளை நேரடியாக வழங்க ஆர்வமுள்ளவர்கள், அணுகவும்: 0422-40 40 430

அளவின்றி பகிர்வோம், ‘அருள்’ எலாம் பெறுவோம்!

அடுத்த கட்டுரைக்கு