Published:Updated:

வீட்டிலேயே கோச்சிங் சென்டர்; கைநிறைய வருவாய் ஈட்டலாம்! #BizWomen

வார இறுதி நாட்கள் மட்டும் வீட்டிலியே இருந்து வேலை செய்யும் வாய்ப்பினை கோச்சிங் வகுப்புகள் வழங்குகின்றன.

ஒரு நாடு முன்னேற வீடு முன்னேற வேண்டும். ஒரு குடும்பத்தில் ஆண்/கணவர் மட்டுமே வேலைக்குச் செல்லும் பட்சத்தில், மனைவி மற்றும் 2 குழந்தைகள் (என வைத்துக்கொள்வோம்), இவர்களுக்குத் தேவையான நிதி கணவர் பாக்கெட்டில் இருந்துதான் வர வேண்டியுள்ளது. பட்ஜெட்டுக்குப் பத்தாத சம்பளம் என்றால் சொல்லவும் வேண்டுமா, கஷ்டந்தான்! எனவேதான் இப்போதெல்லாம் மனைவியும் வேலைக்குச் செல்வது வாடிக்கையாகிவிட்டது...

சரி, தவறு என்பதெல்லாம் நம் தேவைகளைப் பொறுத்தே அமைகின்றன. ஒருவர் சம்பாத்தியம் போதுமென்றால் நல்லது! பற்றாக்குறையா? கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்று சுமையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இது தவிர வீடு, வாகனம், பிள்ளைகளின் உயர்கல்வி & திருமணம், ஓய்வுக்கால வாழ்க்கை என எதிர்கால நோக்கோடு கணக்குப் போட்டுப் பார்த்தால், இன்றைய சூழ்நிலையில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதே சாலச்சிறந்தது!

வீட்டிலேயே கோச்சிங் சென்டர்; கைநிறைய வருவாய் ஈட்டலாம்! #BizWomen

நம் நாட்டில், திருமணமானபின் பெண்கள் வேலைக்குச் செல்வது குறைந்துவிடுகிறது என்பதே கசப்பான உண்மை. படிப்பிலும் திறமையிலும் ஆண்களுக்குச் சளைக்காத பெண்களின் ஆற்றலை வீட்டைக் கவனித்துக்கொள்வதில் மட்டும் அடக்கிவிடுவது என்ன நியாயம்? இன்று ஐ.டி., ஆசிரியப் பணி, ஊடகவியல், சுயதொழில், வியாபாரம் எனப் பலதரப்பட்ட துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் குடும்பத்தையும் நிர்வகிக்கும் அன்னை/மனைவிகளாகவும் இருப்பது வரவேற்புக்குரியது. வீட்டினர்/கணவரின் ஆதரவு மற்றும் சரியான திட்டமிடுதல் இருந்தால் குடும்பத் தலைவர் & தலைவி இருவருமே வேலைக்குச் செல்லலாம்!

திருமணமான பெண்களும் 'பிசினஸ் உமென்' ஆகலாம்!

திருமணமான பல பெண்மணிகளுக்கு, வீட்டு வேலையோடு சேர்த்து வேலை/தொழிலில் ஈடுபடும்போது நேர மேலாண்மையில் பிரச்னை ஏற்படலாம். இதற்கு தீர்வு காணும் வகையில், வார இறுதி நாட்கள் மட்டும் வீட்டிலியே இருந்து வேலை செய்யும் வாய்ப்பினை கோச்சிங் வகுப்புகள் வழங்குகின்றன. Brain O Brain நிறுவனம், தமிழகத்தின் புகழ்பெற்ற குழந்தைகள் மூளைத்திறன் பயிற்சி மையமாகும். 4 முதல் 14 வயதான பிள்ளைகளுக்கு திறன் வளர்ச்சி பயிற்சி வகுப்புகளை நடத்திவரும் இவர்கள் அபாக்கஸ் பயிற்சி, நியூரோ லிங்விஸ்டிக் புரோக்ராம், மொழித்திறன் பயிற்சி, நியூரோபிக்ஸ், மெண்டல் ஜிம்னாஸ்டிக்ஸ், கிரியேட்டிவ் ஆர்ட் மற்றும் கதை எழுதும் பயிற்சி உள்ளிட்ட 14 வகையான மன வளப் பயிற்சிகளை வழங்குகின்றனர். 41 நாடுகளில், மொத்தம் 950-ற்கும் மேற்பட்ட பயிற்சி மையங்களை நடத்திவருகிறார்கள்.

பிரெயின் ஓ பிரெயின்-இல் பயிற்சி எடுத்துக்கொண்டு, பிரெயின் ஓ பிரெயின் கோச்சிங் சென்டர் ஒன்றை உங்கள் வீட்டிலேயே நீங்கள் ஆரம்பிக்கலாம். 10-20 பிள்ளைகள் உட்காரும் அளவுக்கு இடம் (வீட்டின் ஹால்/பிரத்தியேக அறை / மாடி) இருந்தால் போதும்! வார இறுதி நாட்களில் மட்டுமே வகுப்புகள் நடைபெறுவதனால், பிற நாட்களில் சிக்கலின்றி குடும்பப் பெண்கள் தங்கள் பணிகளில் ஈடுபடலாம். பிரெயின் ஓ பிரெயின் கோச்சிங் சென்டர் ஆரம்பிக்க ரூ. 75 ஆயிரம் ஆரம்ப முதலீடு தேவைப்படுகிறது, இன்று நடைமுறையில் இதைவிடக் குறைந்த அளவிலான முதலீட்டில் ஒரு தொழில் அல்லது பிரபலமான பிரான்சைசீயைத் துவங்குவது சாத்தியத்துக்கு அப்பாற்பட்டது. மேலும், திருமணம் ஆன பின்பு/குழந்தைகள் பிறந்த பின்பு, வேலையை விட்ட பல பெண்கள் பிரெயின் ஓ பிரெயின் கோச்சிங் சென்டரைத் தொடங்கி, மாதம் பல ஆயிரம் ரூபாய் வரை சுலபமான வருவாயை ஈட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டிலேயே கோச்சிங் சென்டர்; கைநிறைய வருவாய் ஈட்டலாம்! #BizWomen

திருமணத்துக்குப் பின் வேலைக்குச் செல்ல இயலாத படித்த பெண்கள், ஆசிரியை ஆக வேண்டும் என்கிற இலட்சியம் நிறைவேறாத பெண்மணிகளுக்கு இது சிக்கலில்லாத, சுலபமானதோர் அரிய வாய்ப்பாகும். இதுகுறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள கீழே உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்யவும். நேரில் சென்றும் உங்களின் அனைத்து சந்தேகங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டு தெளிவு பெறலாம், முகவரி: பிரெயின் ஓ பிரெயின் கிட்ஸ் அகாடெமி பிரைவட் லிமிடெட், 2வது மாடி, டெம்பிள் டவர், 672, அண்ணா சாலை, சென்னை - 600 035.

தொலைப்பேசி எண்: 044 2436 3555/4555,93800 76555

பொருளாதார விடுதலை அடைய விரும்பும் உங்களுக்கான சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் பெண்மணிகளே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு