Published:Updated:

மூலநோய் ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள எளிய வழிகள்! #உலகமூலநோய்தினம்

மிக முக்கியமாக ஒரு நாளைக்கு சராசரி 3 முதல் 4 லிட்டர் அளவு தண்ணீர் அருந்துதல் போன்றவற்றால் நமது உடலை மூலத்திலிருந்து காக்கலாம்.

மூலநோய்
மூலநோய்

இன்று(20.11.2019) உலக மூல நோய் தினம். மூலநோய் இன்றைக்குப் பரவலாகி வரும் ஒரு நோய். மலச்சிக்கல் மனிதனுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இதில் முதன்மையானது மூலநோய். பொதுவாக, இயந்திரம் சீராக இயங்க லூப்ரிகன்ட் மிகவும் அவசியம். தேவையான அளவு லூப்ரிகன்ட் இல்லையென்றால், மிகவும் வறட்சியாக இயங்க ஆரம்பிக்கும். இதைப்போல்தான் நமது உடலும். இதன் விளைவாக மலச்சிக்கல், மூலநோய் போன்ற பாதிப்புகள் உண்டாகும். மூலம் இவருக்குத்தான், இந்த வயதுடையவருக்குத்தான் வரும் என்றில்லை. சரியான உணவுப் பழக்கவழக்கம், சரிவிகித உணவுகளை உட்கொள்ளாமல் இருக்கும் அனைவருக்கும் மூல நோய் வர வாய்ப்புகள் அதிகம் உண்டு.

மூலநோய் பாதிப்பு இருந்தாலும், பலர் அதை வெளியில் சொல்வதற்குக் கூச்சப்படுவார்கள். மருத்துவர்களைச் சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்வதற்குத் தயங்குவார்கள். அதனாலேயே பாதிப்பு இன்னும் அதிகமாகி, அறுவைசிகிச்சை செய்யும் அளவுக்குக் கொண்டு போய்விடும்.

மூல நோய்க்கான சிறப்பு லேசர் சிகிச்சை, தடுக்கும் வழிகள் பற்றி வேலூர், இந்திரா நர்சிங் ஹோம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கர் கூறுகையில்,

''காரமான உணவுகள் உட்கொள்ளுதல், நேரம் தவறி உணவு உட்கொள்ளுதல், தூக்கமின்மை, நார் சத்து உள்ள உணவுகளை எடுக்காததால், அதிக நேரம் உட்கார்ந்திருத்தல், தொலைதூர பயணம், பரோட்டா, வெளியில் உண்ணும் எண்ணெயில் பொறித்த உணவுப் பொருட்கள் போன்றவற்றால் மலச்சிக்கல் ஏற்படும். இப்போது மக்கள் எல்லாருமே துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளுவதால் பெரும்பாலான மக்கள் தற்போது இந்நோயினால் அவதிப்படுகிறார்கள். இதற்கு தலைசிறந்த சிகிச்சை முறை லேசர் சிகிச்சையாகும்.''

மூலநோய் ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள எளிய வழிகள்! #உலகமூலநோய்தினம்

மூலம்

''மூலம் என்பது ஆசன வாயில் ரத்தநாளம் வீங்கி ஏற்படும் கட்டி. இதனால் ஆசன வாயில் வலி மற்றும் ரத்தக்கசிவு ஏற்படும். மலம் கழிக்கும்போது மூலம் வெளியே வரும். இது உண்டாவதற்கான முக்கியக் காரணங்கள் மலச்சிக்கல், அதிகமான காரம் உண்ணுதல், வெளி உணவு அருந்துதல், தொலைதூர பிரயாணம்''

ஆசன வாயில் வெடிப்பு

''ஆசன வெடிப்பு, ஆசன வாயில் பின்பகுதியில் ஏற்படும் வெடிப்பாகும். இதனால் மலம் கழிக்கும் போது எரிச்சல், வலி மற்றும் ரத்தக்கசிவு ஏற்படும்.''

பவுத்திரம்

''பவுத்திரம், ஆசனவாய் பக்கத்தில் கட்டிபோல வந்து உடைந்து சீழ் மற்றும் ரத்தம் வெளியேறும். இது திரும்ப, திரும்ப ஏற்படும். இதனால் பாதிக்கப்பட்டோருக்கு கட்டியில் இருந்து சீழ் மற்றும் வலி ஏற்படும்.''

பைலோனைடல் சைனஸ்

''பைலோனைடல் சைனஸ் (றிவீறீஷீஸீவீபீணீறீ sவீஸீus) என்பது ஆசனவாய் மேல்புறம் முதுகுத்தண்டு முடியும் இடத்தில் ஒரு சிறு கட்டிபோல் உருவாகி சீழ் மற்றும் ரத்தம் வெளியேறி அடிக்கடி உடைந்து புண்ணாகி பின்பு ஆறிவிடும்.''

மூலநோய் ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள எளிய வழிகள்! #உலகமூலநோய்தினம்

லேசர் சிகிச்சை முறை

''மூலம், ஆசன வாய் வெடிப்பு, பவுத்திரம் மற்றும் பைலோனைடல் சைனஸ் போன்ற நோய்களுக்கும் எங்கள் மருத்துமனையில் இத்தாலி நாட்டின் லேசர் முறையில் அதிநவீன சிகிச்சை செய்யப்பட்டு. திரும்ப வராமல் தடுக்கிறோம். மூலத்திற்கு சிகிச்சை செய்யாமல் இருந்தால் மலச் சிக்கல், ரத்தப்போக்கு அதிகமாக உடம்பில் இருக்கும். ரத்தம் குறைந்து விடுவதால் உடல் சோர்வு, மூச்சு வாங்குதல் மற்றும் இதய கோளாறுகள் வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.''

நோய் வராமல் இருக்க நாம் செய்ய வேண்டியது

நேரத்திற்கு சாப்பிடுதல், வெளியில் சாப்பிடுவதைத் தவிர்த்தல், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளுதல், கீரை, மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுப் பொருட்களை உண்ணுதல் மற்றும் மிக முக்கியமாக ஒரு நாளைக்கு சராசரி 3 முதல் 4 லிட்டர் அளவு தண்ணீர் அருந்துதல் போன்றவற்றால் நமது உடலை மூலத்திலிருந்து காக்கலாம்.

மேற்சொல்லப்பட்ட வழி முறைகளை பின்பற்றினால் இந்த வகையான நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

வேலூர், கிருஷ்ணகிரி, பெங்களூர், விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி, திருப்பத்தூர், ராணிப் பேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்திரா நர்சிங் ஹோமில் சிகிச்சை பெற்று பூரண திருப்தியுடன் நலம் பெற்று திரும்புகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு: 98423 24425, 98423 42525.