Published:Updated:

"எட்டாம் வகுப்பிலேயே கவுன்சிலிங் கொண்டுவாருங்கள்!" - டாக்டர் தங்கம் மேகநாதன்

துறைசார்ந்த அறிவில் தேர்ந்தவர்களாகவும், வேலை நிமித்தமான கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்களாகவும் மாணவர்களைத் தயார்படுத்துவதே உயர்கல்வியின் அடிப்படை நோக்கம்.

மார்ச் 24, 2020 - யார் இந்தத் தேதியை அதிகமாக எதிர்பார்க்கிறார்களோ தெரியாது, கண்டிப்பாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் அதிகமாக எதிர்பார்த்துக் கிடக்கின்றனர், காரணம் அன்றுதான் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் கடைசி நாள். தேர்வுக்குப் பின் என்ன? ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், அடுத்து காலேஜ் எனும் கனவுகள் நிறைந்த உலகத்தில் நுழையப்போகிறோம் என்ற உற்சாகம். இந்த உற்சாகம் வாழ்நாள் முழுக்கத் தொடர மாணவர்கள் ஒன்று செய்ய வேண்டும், கொஞ்சமும் நேரம் தாழ்த்தாமல் 'காலேஜில் என்ன படிக்கப்போகிறோம்' என்பதை இப்போதே தீர்க்கமாய் தீர்மானித்துவிட வேண்டும்.

"இந்தியாவின் உயர்கல்வி கணக்கெடுப்பின்படி 2018-19 ஆம் ஆண்டில் 3.73 கோடி மாணவர்கள் பட்டதாரிகளாக ஆகியுள்ளனர். உயர்கல்வியில் ஆண்-பெண் கல்வி விகிதாச்சாரமும் சமநிலையை எட்டியுள்ளது. 1980-களோடு ஒப்பிடும்போது இது கணிசமான வளர்ச்சியாகும். இன்றைய அளவுக்கு பெண் கல்வி அன்று ஊக்கப்படுத்தப்படவில்லை, ஆண் கல்வியிலும் உயர்கல்வி என்பது ஒருசிலருக்கு மட்டுமே என்கிற போக்குதான். என்று தொழில்நுட்ப வளர்ச்சி இந்தியாவில் சாத்தியமானதோ, அன்றுமுதல் உயர்கல்விக்கான தேவையையும், முக்கியத்துவத்தையும் இந்தியர்கள் புரிந்துகொண்டனர். இந்தியா கல்விக்கொள்கையில் கொண்டுவந்த மாற்றங்களும் தனியார் கல்வி மையங்களின் எழுச்சியும் உயர்கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை நாம் காண கைக்கொடுத்துள்ளன. பட்டதாரிகளின் எண்ணிக்கை ஒருபக்கம் சாதகமாகத் தென்பட்டாலும், 'உயர்கல்வியின் நோக்கம் நிறைவேறியதா?' என நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டியது அவசியம்." என்கிறார் முனைவர் தங்கம் மேகநாதன், ராஜலக்ஷ்மி கல்விக் குழுமத்தின் தலைவர்.

டாக்டர் தங்கம் மேகநாதன்
டாக்டர் தங்கம் மேகநாதன்

உயர்கல்வியின் நோக்கம் இதுதான்...

""துறைசார்ந்த அறிவில் தேர்ந்தவர்களாகவும், வேலை நிமித்தமான கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்களாகவும் மாணவர்களைத் தயார்படுத்துவதே உயர்கல்வியின் அடிப்படை நோக்கம். 12ஆம் வகுப்பு வரை பல பாடங்களைப் படித்தாலும், கல்லூரியில் 'ஸ்பெஷலைஸ்டு கோர்ஸ்' எனப்படும் ஒரு குறிப்பிட்ட துறையின் பாடமே முதன்மையாக விளங்குகிறது. பிற்காலத்தில், இன்ஜினியர், டாக்டர், வக்கீல், சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் என ஒருவருக்கு அடையாளம் தரப்போவது இந்த ஸ்பெஷலைஸ்டு பாடத்திட்டங்களே. அதனால்தான் கல்லூரியில் என்ன படிக்கவிருக்கிறோம் என்பதில் மாணவர்களுக்குத் துளியும் சந்தேகம் இருக்கக்கூடாது."

"தங்களின் எதிர்காலத்துக்கான தீர்வு

வேலைக்குச் செல்வது மட்டுமே

என்கிற எண்ணத்தை மாணவர்கள்

தற்போது மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளனர். "

தற்கால நடைமுறைக்கு மாறவேண்டும்

"இணையம் உலகை இணைத்துவிட்ட இந்தக் காலகட்டத்தில் உலகத்தின் எந்தப் பாகத்துக்கும் சென்று பணிபுரியும் அளவுக்கு நம்மை நாம் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். ராஜலக்ஷ்மி கல்விக் குழுமத்தின் கீழ் இயங்கும் ராஜலக்ஷ்மி பொறியியல் கல்லூரி, ராஜலக்ஷ்மி இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி மற்றும் ராஜலக்ஷ்மி ஸ்கூல் ஆப் பிசினஸ் உள்ளிட்ட அனைத்து கல்விக்கூடங்களிலும் மாணவரின் ஆர்வத்தைப் புரிந்து அவருக்கு ஏற்ற புராஜெக்டை வழங்குதல், புராஜெக்டின் முடிவைப்பற்றி சக மாணவர்களுடன் கலந்துரையாட அனுமதித்தல், மாணவர்களோடு இணைந்து ஆசிரியரும் வேலை செய்தல்/பயிலுதல், புதிய யோசனைகளைப் பற்றி வகுப்புகளில் கலந்துரையாடச் செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன."

"எட்டாம் வகுப்பிலேயே கவுன்சிலிங் கொண்டுவாருங்கள்!" - டாக்டர் தங்கம் மேகநாதன்

"மேலும், மாணவர்களைச் சிறந்த பணியாளர்களாக மட்டும் உருவாக்காமல், தற்கால நடைமுறைக்கு ஏற்ப அவர்களின் புதிய யோசனைகளை ஊக்குவித்து, அவற்றைத் தொழில்களாக மாற்றும் தொழில்முனைவு அமைப்பையும் ராஜலக்ஷ்மி குழுமம் உருவாக்கியுள்ளது. இதனால் தங்களின் எதிர்காலத்துக்கான தீர்வு வேலைக்குச் செல்வது மட்டுமே என்ற எண்ணத்தை மாணவர்கள் தற்போது மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளனர். உலகளவில் இணையம்சார்ந்த வர்த்தகத்தில் போட்டியிடக்கூடிய மாணவர்களை உருவாக்க வேண்டியது நம் கடமை."

பள்ளியில் தொடங்க வேண்டும் பயிற்சியை...

காலம் தாழ்த்தாமல் எட்டாம் வகுப்பிலேயே மாணவ மாணவியரின் ஆர்வத்தைத் தெரிந்துகொண்டு அவர்கள் மனதில் குறிப்பிட்ட உயர்கல்விக்கான கனவை வளர்க்க வேண்டும். இது வெறும் ஊக்கமாக மட்டும் இருந்துவிடாமல், பலதரப்பட்ட உயர்கல்வி மற்றும் பணிகள் குறித்த அடிப்படைத் தகவல்களை எட்டாம் வகுப்பிலேயே எளிமையான கவுன்சிலிங்காக பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் வழங்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியும் இதனை முன்வந்து செய்தால் மாணவரின் திறமை, கனவு மற்றும் அவரின் குடும்பப் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப, உயர்படிப்புத் திட்டத்தை முன்கூட்டியே வகுத்து வளமான பாதையில் பயணிக்க முடியும்! உலகளவில் இந்தியா எழுச்சி பெற இந்தச் சிறிய முயற்சி மிகப்பெரும் பலனைத் தரும் என்பதில் சந்தேகமில்லை!" என்கிறார் முனைவர் தங்கம் மேகநாதன்.

பல பள்ளிகளுக்குச் சென்று பொறியியலில் உள்ள வாய்ப்புகள் பற்றி இளம் மாணவர்களுக்கு எடுத்துக்கூறும் முயற்சிகளை ராஜலக்ஷ்மி கல்விக் குழுமம் எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது. ராஜலக்ஷ்மி கல்விக்குழுமம் வழங்கும் உயர்கல்வி பாடப்பிரிவுகள் பற்றி அறிய: www.ritchennai.org | https://www.rajalakshmi.org/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு