Published:Updated:

இன்ஜினியரிங் - படிப்பல்ல வாழ்க்கை! #SAEEE-2020

சத்யபாமா
சத்யபாமா

ஒரு கணினித் திரைக்குள் உலகையே கொண்டுவர ஓர் இன்ஜினியரால் மட்டுமே முடியும். அத்தகைய இன்ஜினியரை உருவாக்கத் தேவைப்படும் நவீன பாடப் பிரிவுகளை கொண்டதாக அமைந்திருக்கிறது சத்யபாமா

நம்மைக் கடந்து செல்லும் 10 பேரில் 8 பேர் இன்ஜினியரிங் படித்தவர்களாக இருப்பார்கள். ஒவ்வோர் ஆண்டும் இரண்டரை லட்சம் மாணவர்கள் இன்ஜினியரிங் முடிக்கின்றனர். பொறிஞர்கள் மிகுந்துவிட்ட இந்தக் காலத்தில், இன்ஜினியரிங் சேர விரும்பும் மாணவரைப் பார்த்து நம் மனதில் எழும் முதல் கேள்வி: இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்காதாமே? என்பதுதான்!

உலகளவில் 2020ம் ஆண்டில் பணியாளர்களின் தேவை 2 பில்லியனாக இருக்கும் என்கிறது 'நாஸ்காம்' அமைப்பு. ஆதலால், வேலைக்கான தகுதியை வளர்த்துக்கொண்டாலே போதும் அனைத்து பொறியியல் பட்டதாரிகளுக்கும் வேலை உறுதி! அதற்குமுன், எங்கே, எப்படி, என்ன இன்ஜினியரிங் கோர்ஸ் படிக்கப்போகிறோம் என்பதைத் தீர்க்கமாக யோசித்து தீர்மானித்துவிடுவது நல்லது!

சத்யபாமா
சத்யபாமா

சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகம்...

ஒரு கணினித் திரைக்குள் உலகையே கொண்டுவர ஓர் இன்ஜினியரால் மட்டுமே முடியும். அத்தகைய இன்ஜினியரை உருவாக்கத் தேவைப்படும் நவீன பாடப் பிரிவுகளை கொண்டதாக அமைந்திருக்கிறது சத்யபாமா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனம்.

1987ம் ஆண்டு டாக்டர் ஜேப்பியார் அவர்களால் சத்யபாமா பொறியியல் கல்லூரி நிறுவப்பட்டது. தற்போது 27 இளநிலைப் பட்டங்களையும், 41 முதுநிலைப் பட்டங்களையும் வழங்குகிறது சத்யபாமா. இதனால் B.E/B.Tech/B.Arch/B.Des போன்ற தொழில்நுட்ப படிப்புகள் முதல் கலை, அறிவியல், சட்டம், நர்சிங், ஃபார்மா வரையிலான பட்டப்படிப்புகளை இங்கு மேற்கொள்ள முடியும். நவீன ஆய்வகங்கள், மல்டிமீடியா வசதிகளுடன் கூடிய நூலகம், இணையம் மற்றும் பிற பொது வசதிகள் உள்ளிட்ட சிறந்த உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது இக்கல்வி நிறுவனம். NIRF ரேங்கிங்கில் இந்தியாவின் டாப் 50 பல்கலைக்கழகங்களில் தொடர்ந்து கடந்த நான்கு ஆண்டுககளாக இடம்பிடித்து வருகிறது. உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி கூடம், மாணவர்களுக்கான ஊக்கத்தொகை, பசுமையான சூழல், நிலையான வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு பெயர்பெற்று விளங்குகிறது சத்யபாமா.

சத்யபாமா
சத்யபாமா

SAEEE தேர்வு!

"இன்றைய படிப்பு, நாளைய முன்னேற்றம்" என்ற தாரக மந்திரத்துடன் செயல்பட்டு வரும் சத்யபாமா, வருகிற கல்வியாண்டில் பொறியியல் கல்விக்கான ஆன்லைன் நுழைவுத் தேர்வின் (SAEEE) தேதிகளை அறிவித்துள்ளது. 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 14 முதல் 19 வரை தேர்வு நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்களை www.sathyabama.ac.in இணையதளம் மூலம் இப்போதே பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

நுழைவுத் தேர்வுக்கான கூடுதல் விவரங்களைப் பெற அணுகவும் : Toll Free Number - 1800 425 1770

அடுத்த கட்டுரைக்கு