Published:Updated:

இன்ஜினியரிங் மீளும்! ஆசிரியர்கள் மெனக்கெட வேண்டும்... - முனைவர் கே. வாசுதேவன்

பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரி
பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரி

ஒவ்வொரு மாணவரின் ஆர்வம் மற்றும் பின்புலத்தை வகுப்பாசிரியர் தெரிந்துகொள்ள வேண்டும். மாணவர்களின் பெற்றோரோடு கலந்துரையாடி மாணவரின் நலத்துக்கு ஏற்ற செயல்பாடுகளைப் பரிந்துரைக்க வேண்டும்

'அனைத்துக்கும் ஒரு நேரமுண்டு. அதுபோல், இன்ஜினியரிங்கும் மீண்டு வரும்' என்பதே கல்வியாளர், முனைவர் கே. வாசுதேவன் அவர்கள் கூறும் நம்பிக்கை வார்த்தைகள். பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளை நிர்மாணித்து வரும் 'பிரின்ஸ்' கல்விக் குழுமத்தின் தலைவர் கே. வாசுதேவன் கல்வித்துறையில் 45 ஆண்டுகால அனுபவம் மிக்கவர். பள்ளிகள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? இன்ஜினியரிங்கில் ஆர்வம் குறைந்து வரக்காரணம் என்ன? வருங்காலத்தில் இன்ஜினியரிங்கில் வாய்ப்புகள் எப்படி? இன்னும் பல தகவல்களையும் ஆலோசனைகளையும் வழங்குகிறார்.

ஆரம்பம்...

"1960 - 70களில் மாணவர் காங்கிரஸில் பணிபுரிந்து வந்ததால் எனக்கு காமராஜருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவருடைய நவசக்தி பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த எனக்கு காமராஜரின் மறைவுக்குப் பிறகு சென்னைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து முனைவர் பட்டம் பெற்றேன். பின்னர் பள்ளிக் கல்வித்துறையில் காலூன்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. 1978ஆம் ஆண்டு 'பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியை நங்கநல்லூர் பகுதியில் துவங்கினோம், தொடர்ந்து 1980ஆம் ஆண்டு மடிப்பாக்கத்தில் இன்னுமொரு பள்ளியை நிறுவினோம்."

"கற்பித்தலில் நாம் எடுத்த நடவடிக்கைகள் பிரின்ஸ் பள்ளிகளுக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளதை அறிந்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பிரின்ஸில் சேர்க்க ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள். தமிழ்வழிக் கல்வியை ஆதரிக்க மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு அருகிலேயே, அரசு உதவியுடன் இயங்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியையும் நடத்தி வருகிறோம்."

கவனிக்கப்பட வேண்டியவர்கள் ஆசிரியர்களே!

"ஆசிரியர்களின் திறமையும், ஒவ்வொரு மாணவனும் சிறந்தவனாக உயரவேண்டும் என்ற அவர்களின் ஆர்வமுமே ஒரு பள்ளியை சிறந்துவிளங்கச் செய்கிறது. போட்டி, அட்மிஷன், சமூகத்தில் நல்ல பெயர் - இந்தக் காரணங்களால் தனியார் பள்ளிகள் பல புதிய நடவடிக்கைகளை எடுத்து, சிறப்பான கல்வியை வழங்க முயற்சி செய்கின்றன. சிறந்த ஆசிரியர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்த எண்ணுகின்றன. ஆனால் அரசுப் பள்ளியில், ஆசிரியர்களுக்கு இந்த நெருக்கடி இருப்பதில்லை."

பிரின்ஸ் டாக்டர் கே. வாசுதேவன் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் & டெக்னாலஜி, மேடவாக்கம்
பிரின்ஸ் டாக்டர் கே. வாசுதேவன் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் & டெக்னாலஜி, மேடவாக்கம்

"அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்கள் பலதரப்பட்ட குடும்பப் பின்னணியில் இருந்து வரக்கூடும். மாணவர்களை நல்வழிப்படுத்தி, பாடமும் கற்றுக்கொடுக்க அரசு ஆசிரியர்கள் கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் எடுக்கிறார்களா என்பதைத் தலைமை ஆசிரியர் கவனிக்கவேண்டியது அவசியம். பிரின்ஸ் பள்ளிகளில் இந்த நடைமுறை சிரத்தையுடன் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் ஆசிரியர்களுக்கு அவர்களின் முக்கியத்துவம் என்ன என்பது நன்கு புலப்படுகிறது."

இதைச் செய்தால் பள்ளிக் கல்வித்துறை மேலும் சிறக்கும்...

"ஒவ்வொரு மாணவரின் ஆர்வம் மற்றும் பின்புலத்தை வகுப்பாசிரியர் தெரிந்துகொள்ள வேண்டும். மாணவர்களின் பெற்றோரோடு கலந்துரையாடி மாணவரின் நலத்துக்கு ஏற்ற செயல்பாடுகளைப் பரிந்துரைக்க வேண்டும். சிறுவயதிலிருந்தே மாணவரின் ஒழுக்கநலனில் கவனம் செலுத்தப்படவேண்டியதும் அவசியம்."

"தலைமை கல்வித்துறை அதிகாரி மற்றும் மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகளின் நேரமெல்லாம் நிர்வாகப் பொறுப்புகளிலேயே கழிகிறது. இதனால் பள்ளிகளை ஆய்வு செய்ய தனி அதிகாரிகளையும், நிர்வாகத்திற்கு தனி அதிகாரிகளையும் அரசு நியமிக்க வேண்டும்."

முனைவர் கே. வாசுதேவன்
முனைவர் கே. வாசுதேவன்

இன்ஜினியரிங் மீண்டுவரும்!

"பத்து வருடங்களுக்கு முன்பு இன்ஜினியரிங் படிப்பில் சேர ஆர்வம்காட்டிய மாணவர்கள் தற்போது கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். இதுவொரு சுழற்சியே தவிர, இன்ஜினியரிங் படிப்புகளில் வாய்ப்புகள் குறைவு என்பதும், அது படித்தால் வேலை கிடைக்காது என்பதும் தவறான கருத்து. படிப்பில் ஆர்வம்கொண்ட மாணவர் எங்கும் முன்னேறிச் செல்வார் என்பதே உண்மை..."

"இன்றைய காலத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) சம்பந்தப்பட்ட பொறியியல் படிப்புக்கு நிறுவனங்களிடையே மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது, காரணம் செயற்கை நுண்ணறிவே எதிர்காலம் என்ற நோக்கம் நிலவுகிறது. இதுபோன்ற எதிர்காலத் தேவைகளை மனதில் வைத்து பொறியியல் படிப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு மாணவர்களுக்குத் தகுந்த ஆலோசனை வழங்கப்பட வேண்டியது அவசியம். இதற்கு ஆன்லைன் கவுன்சிலிங்கைவிட, நேரடி கவுன்சிலிங்தான் சிறந்தது என்பது என் கருத்தாகும்."

"பொறியியல் பற்றிய புரிதலை பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்த பலதரப்பட்ட விழிப்புணர்வு/பிரச்சார நடவடிக்கைகளை அரசு கல்வித்துறை கையிலெடுக்க வேண்டும். இதனால் பொறியியல் குறித்து மாணவர்களுக்கு தெளிவு ஏற்படும், அவர்களின் அச்சமும் குறையும்."

"பொறியியல் படிப்பில் தேசிய அளவில் அனைவருக்கும் ஒரேமாதிரியான தரமான பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும் எனக் கல்வித்துறை மெனக்கெடுவது சரியென்றாலும், எதார்த்தம் வேறுவிதமாகவுள்ளது. கிராமப்புற/தமிழ் வழிக்கல்வியில் பயின்ற மாணவர்களுக்கு இன்ஜினியரிங்கின் முதல் இரண்டு வருடங்கள் சிரமமாகவே இருக்கும், இதுவே நாம் அனுபவத்தில் காணும் உண்மை. அண்ணா பல்கலைக்கழகம் பரீட்சைத் தாள் திருத்துவதில் மிகுந்த கெடுபிடி காட்டுவதால் இந்த மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அரியர்ஸ் இருந்தால் மாணவருக்கு வேலை கிடைப்பது சிரமம்தான். இதைச் சரிசெய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்!"

 பிரின்ஸ் டாக்டர் கே. வாசுதேவன் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் & டெக்னாலஜி, மேடவாக்கம்
பிரின்ஸ் டாக்டர் கே. வாசுதேவன் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் & டெக்னாலஜி, மேடவாக்கம்

"பன்னிரண்டாம் வகுப்பில் 35 - 45% மதிப்பெண்எடுத்து, இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கப்படும் மாணவர்கள் ஒருவகை. பள்ளியளவில் சிறப்பான கல்வியும்/கோச்சிங்கும் பெற்ற மாணவர்கள் இன்னொரு வகை. இவ்விரு சாராரும் பொறியியலில் ஒன்றாய் படிக்கும்போது பள்ளிகளில் அதிக விழுக்காடு பெற்ற மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறுகிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதற்கு இதுவே காரணம். மாணவர்களின் தரத்தைப் பிரித்து அதற்கேற்ப தேர்வு முறையையும் மாற்றியமைக்க வேண்டும். சுயநிதி கல்லூரிகளிலும் / டீம்டு யுனிவர்சிட்டிகளிலும் சேர்கின்ற மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு அவர்களுடைய தேர்வு முறையின் எளிமைத்தன்மை மிகப்பெரிய காரணமாகும், அதனால் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு முறையில் மாற்றத்தை உருவாக்க வேண்டும்."

"மேற்கூறியவற்றைக் கடைப்பிடித்தால், பள்ளிக் கல்வியையும், பொறியியல் படிப்பையும் சீர்திருத்தலாம். மாணவர்களும் இன்ஜினியரிங்கில் மிளிரலாம்!"

பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரி மற்றும் பிரின்ஸ் டாக்டர் கே. வாசுதேவன் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் & டெக்னாலஜி, மேடவாக்கம் - இக்கல்லூரிகளின் பாடத்திட்டங்கள் குறித்து மேலும் அறிய: http://princedrkvasudevan.com/ | http://www.psvpec.in/

அடுத்த கட்டுரைக்கு