Published:Updated:

எந்தச் சுத்திகரிப்பான் சிறந்தது? நிபுணர்கள் சொல்வதைக் கேளுங்க!

சுத்திகரிப்பான்
சுத்திகரிப்பான்

சுத்திகரிப்பானில் உள்ள ரசாயனங்களின் அடர்த்தி எந்தளவு அதிகமாக இருக்கிறதோ, அந்தளவு கிருமிகள் உடனுக்குடன் கொல்லப்படும்

கொரோனாவுக்கு முன் (கொ.மு), கொரோனாவுக்குப் பின் (கொ.பி.) எனக் காலத்தை இரண்டுவிதமாகப் பிரிக்கலாம்! எந்தவொரு விஷயத்தையும் சாதாரணமாக சுத்தம் செய்தால் போதும் என்பது கொ.மு.வில், ஆனால், கொ.பி. காலத்தில் சுத்தம் செய்வது என்பது ‘நோய்த்தொற்றுகளை நீக்குவது’ என்றாகிவிட்டது. சுத்தம் + நோய்க்கிருமிகள் நீக்கம், இரண்டையும் கொடுக்கக்கூடிய சிறப்பான சுத்திகரிப்பான்களை (Cleaners) தேர்ந்தெடுப்பது எப்படி? 40 ஆண்டுகளாக, உலகளாவிய ரசாயன விநியோகம் மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் ‘பொன் பியூர் கெமிக்கல்ஸ் நிறுவனம்’ தரும் சிறப்பான யோசனைகளைப் பார்க்கலாம் வாருங்கள்!

சுத்திகரிப்பான் - இந்த 4 விஷயங்களைக் கவனிக்கவும்:

* சுத்திகரிப்பானில் என்னென்ன ரசாயனங்கள் உள்ளன?

* அந்த ரசாயனங்களின் அடர்த்தி எவ்வளவு?

* எவ்வளவு நேரத்தில் கிருமிகளைக் கொல்லும்?

* மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதா?

சுத்திகரிப்பானில் உள்ள ரசாயனங்களின் அடர்த்தி எந்தளவு அதிகமாக இருக்கிறதோ, அந்தளவு கிருமிகள் உடனுக்குடன் கொல்லப்படும். இருப்பினும் ரசாயனங்களின் அதிக அடர்த்தி, மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. எனவே, மேற்கூறிய நான்கு விஷயங்களையும் கருத்தில்கொண்டு, மிகச்சரியான விகிதத்தில் சுத்திகரிப்பான்கள் தயாரிக்கப்பட வேண்டும்.

ரசாயனங்களைப் பயன்படுத்தும் முறை:

டைல்ஸ் பரப்பில் நன்றாக வேலை செய்யும் ஒரு ரசாயனம், உலோகம் அல்லது ரப்பர் போன்ற பரப்பில் வேறுவிதமாக வேலை செய்யலாம். உதாரணத்துக்கு, ‘ஹைப்போ’ எனப் பலராலும் அறியப்படும் சோடியம் ஹைப்போகுளோரைட் (Sodium Hypochlorite) எனும் வேதிப்பொருள், டைல்ஸில் உள்ள தொற்றுகளை அகற்றப் பயன்படுகிறது, ஆனால் இதே வேதிப்பொருள் உலோகங்களில் அரிப்பை ஏற்படுத்திவிடக்கூடும். எனவே, குளோரின், ஹைப்போ, ஆல்டிஹைடு, ஃபினால், குவாட்ஸ் போன்ற வேதிப்பொருள்கள் நிறைந்த சுத்திசுத்திகரிப்பான்களை அவற்றுக்கு ஏற்ற பரப்புகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

எந்தச் சுத்திகரிப்பான் சிறந்தது? நிபுணர்கள் சொல்வதைக் கேளுங்க!

தீங்கு விளைவிக்காத சுத்திகரிப்பான்களின் அவசியம்:

* எந்த இடத்தில் சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்துகிறோமோ அந்த இடத்தில் ஏற்படும் மாற்றம்.

* நம் சுவாச மண்டலம் மற்றும் சருமத்தில் அவை ஏற்படுத்தும் பாதிப்பு

* சுற்றுச்சூழலில் ஏற்படும் விளைவு

இந்த மூன்று விஷயங்களையும் கருத்தில்கொண்டு, தீங்கு விளைவிக்காத சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்தினால் அனைவருக்குமே நன்மை!

அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டுமா? : அடிக்கடி நாம் புழங்கும் இடம் மற்றும் பலர் தொடக்கூடிய இடங்கள் மற்றும் பரப்புகளைக் கண்டிப்பாக அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். இதற்காகவே பொன் பியூர் நிறுவனம், கிருமிகளை உடனுக்குடன் கொல்லும் இருவேறு கிருமிநாசினிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அனைத்துவிதமான சுத்திகரிப்பு தேவைகளுக்கும் – ‘ஊக்கி’

பொன் பியூர் நிறுவனம், சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்காத சுத்திகரிப்பான்களை ‘ஊக்கி’ பிராண்ட் மூலம் வழங்கிவருகிறது.

* வீடு மற்றும் ஆலைகளுக்குத் தேவையான சுத்திகரிப்பான்கள்

* நோய்த்தொற்றுகளை அண்டவிடாமல் செய்யும் தொற்றுநீக்கி

* சானிடைசர்

என அனைத்துவிதமான சுத்திகரிப்பு பொருள்களும் ஊக்கி பிராண்டில் கிடைப்பதால், நம் சுத்திகரிப்புத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகின்றன.

ஊக்கி தயாரிப்புகள்:

* தரை மற்றும் பரப்புகளை சுத்தம் செய்யும் ஆன்டி பாக்டீரியல் கிளீனர்

* ஹேண்ட் சானிடைசர்

* கடினமான கறைகளை அகற்றும் ஸ்ப்ரே கிளீனர்

* டாய்லெட் பவுல் கிளீனர்

* கணினி, டிவி, போன் திரைகளைச் சுத்திகரிக்கும் ஸ்க்ரீன் கிளீனர்

* கண் கண்ணாடிகளைத் துடைக்க லென்ஸ் கிளீனர்

என அனைத்துவிதமான வீட்டுத் தேவைகளுக்கும் தனித்தனியாக கிடைக்கும் ஊக்கி சுத்திகரிப்பான்கள் நம் வேலையைச் சுலபமாக்குகின்றன.

தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் மற்றும் ஆல்கலைன் ரசாயனங்களை சுத்திகரிப்பான்களாகப் பயன்படுத்தி, நாம் வாழும் இடத்துக்கும், சருமத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீமை விளைவிக்க வேண்டுமா? கேடு விளைவிக்காத, சருமத்துக்கு தீங்கு செய்யாத, மக்கக்கூடிய பொருள்களினால் ஆனவை ஊக்கி தயாரிப்புகள் என்பதை நினைவில்கொள்வோம்! சுய தூய்மை மற்றும் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய இவ்வேளையில், நியாயமான விலையில் கிடைக்கும் ஊக்கி தயாரிப்புகள் மூலம் சிறந்த பாதுகாப்பைப் பெறலாம்!

சமூகத்துக்கு திருப்பித் தரும் பணியில் பொன் பியூர்!

இந்தியா, இலங்கை, வங்காளதேசம், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தடம் பதித்து, இன்று உலக ரசாயனத் தேவையைப் பூர்த்தி செய்துவரும் நிறுவனமாக கிளை விரித்து மாபெரும் சாம்ராஜ்ஜியமாக வளர்ச்சியடைந்துள்ளது தமிழகத்தின் ‘பொன் பியூர் கெமிக்கல்’ நிறுவனம். பொன் பியூர் கெமிக்கல் நிறுவனர் மற்றும் நிர்வாக இருக்குனர் எம். பொன்னுசாமி அவர்களின் தொழில்கொள்கை, நிறுவன வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் என்பது அவரை அறிந்த பலரின் கருத்தாகும்!

எந்தச் சுத்திகரிப்பான் சிறந்தது? நிபுணர்கள் சொல்வதைக் கேளுங்க!

பொன் பியூர் சாரிட்டீஸ் மூலம் பல ஏழைக் குடும்பங்களுக்கு உதவி, அரசுப் பள்ளிகளுக்கு தேவையான கட்டுமான வசதிகள், படிப்பில் மிளிரும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை போன்ற பல நற்காரியங்களைச் செய்துவருகிறது பொன் பியூர். ஈரோடு மாவட்டம் கொக்கராயன்பேட்டை கிராமப் பள்ளி மற்றும் செங்குன்றம் அருகிலுள்ள அல்மாட்டி எனும் ஊரில் உள்ள உயர்நிலைப் பள்ளியைத் தத்தெடுத்து உதவிவருகிறது பொன் பியூர்.

என்.ஏ.பி.எல். (NABL) அங்கீகாரம் பெற்ற தங்களின் சொந்த லாப் மூலம் ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பில் மிளிரும் பொன் பியூர், ஊக்கி போன்ற பல உன்னதமான தயாரிப்புகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

விகடன் வாசகர்களுக்கு சிறப்புச் சலுகை காத்திருக்கிறது! இந்த லிங்கைக் https://www.vikatan.com/special/pure-chemical க்ளிக் செய்து விவரங்களைக் கொடுங்கள். தரமான ஊக்கி தயாரிப்புகளை தள்ளுபடி விலையில் பெற்று, நம் பாதுகாப்பைப் பேணுவோம் வாருங்கள்!

அடுத்த கட்டுரைக்கு