Published:Updated:

கல்யாண வரன்களும்... பாதுகாப்பான மேட்ரிமோனியும்!

பிரீமியம் மெம்பெர்களுக்கும், பெண் வரன்களின் எண்கள் நேரடியாக கொடுக்கப்படுவதில்லை என்பதால் பெண்களின் தனிப்பட்ட விவரங்கள் பாதுகாக்கப்படுகின்றன

மேட்ரிமோனி
மேட்ரிமோனி

"பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்திட்டு இருக்கோம். ஏதாவது நல்ல வரன் இருந்தா சொல்லுங்க முடிச்சிடலாம்" என அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள், தெரிந்தவர்கள், உறவினர்கள் போன்றோரிடம் சொல்லிவைக்க மறப்பதில்லை பெற்றோர்கள். பெண்ணிற்கு மட்டுமல்ல பையனுக்கும் இதே நிலைமைதான். திருமண வயதை எட்டுவதற்கு முன்பே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேட ஆரம்பித்துவிடுவார்கள். அதுவும் இந்த இருபத்தி ஐந்து வயதை எட்டியவர்களின் நிலைமை தினமும் திண்டாட்டமாகத்தான் இருக்கும், குறிப்பாக பெண்களுக்கு!

திருமண வயதில் ஒருவர் இருந்தால்போதும், 'அடுத்து உனக்குதான்!' என்று சொல்லி சொல்லியே உசுப்பேற்றுவார்கள். இது தவிர, வீட்டில் ஜாதகம் பார்க்கும் படலங்களும் ஒருபக்கம் நடந்தேறும்! அடுத்து பெண் அல்லது பையன் வீட்டிற்கு கொடுக்க நல்ல ஃபோட்டோ வேண்டும் என்பார்கள். செல்ஃபி, மொபைலில் ஃபோட்டோஷூட் என புகைப்படங்களை எளிதில் கிளிக் செய்து அனுப்பிவிடும் காலம் இது. என்றாலும் ஆண்களைவிட பெண்களுக்கு புகைப்படங்களை பிறருக்கு பகிர்வது என்பது சற்று தயக்கத்தையே உருவாக்கும். தனது புகைப்படம் வரன் பார்க்கும் அத்தனை நபருக்கும் சென்றடையும் என்ற எண்ணமே அவர்களுக்கு தயக்கத்தையும் சங்கடத்தையும் கொடுத்துவிடும். இம்மாதிரியான சூழ்நிலைகள் அனைத்தையும்விட பொண்ணு பார்க்கும் நிகழ்வுதான் செம்ம இன்டரஸ்டிங் (கூட வருபவர்களுக்கு!).

கல்யாண வரன்களும்... பாதுகாப்பான மேட்ரிமோனியும்!

மேட்ரிமோனியை நாடலாமா?

வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகத்தில் துணையைத் தேடுவது அவ்வளவு கடினமான விஷயமில்லை. ஏனெனில் மேட்ரிமோனி தளங்கள் இருக்கவே இருக்கின்றன. எனினும் மேட்ரிமோனிகளை நம்புவதில் சிலருக்கு தயக்கம் இருக்கலாம். தவறான தகவல்கள் கொண்ட புரொஃபைல்கள் புழங்க வாய்ப்புள்ளதே! மக்களின் இந்த அச்சத்தை உடைக்கும் வகையில், அவர்களின் பாதுகாப்பிற்கு முதலில் உத்தரவாதம் அளிக்கிறது 'தமிழ் மேட்ரிமோனி'. குறிப்பாக பெண்களின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறையுடன் செயல்படுகிறது.

தமிழ் மேட்ரிமோனி :

திருமண வரன் தகவல் அளிப்பதில் முன்னிலை வகிக்கும், சென்னையைச் சேர்ந்த 'பாரத் மேட்ரிமோனி' நிறுவனத்தின் ஓர் அங்கம்தான் 'தமிழ் மேட்ரிமோனி'. அண்மையில் பாரத் மேட்ரிமோனியின் விளம்பரத் தூதராக இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. லேட்டஸ்ட் தமிழ் மேட்ரிமோனி விளம்பரத்தில், ஒரு பெண் எதிர்பார்க்கும் வாழ்க்கைத் துணை எவ்வாறு இருக்க வேண்டுமென்கிற உதாரணமாக திகழ்ந்திருப்பார். (அதில் காட்டப்படும் தோனியைப் போலவே பொதுவாக உறவில் சம உரிமை கொடுக்க வேண்டும் என நினைப்பவர், தன்னைப் புரிந்துகொள்பவர், பொறுப்புகளை பகிர்ந்துகொள்பவர் போன்ற பண்புகள் நிறைந்த துணையாக இருக்க வேண்டுமென்பதே பெண்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்!)

பெண்களும் ஆண்களும் தமிழ் மேட்ரிமோனியில் நம்பிக்கையுடன் தங்களின் தகவல்களைப் பதிவு செய்யலாம். ஏனெனில் உங்களின் புகைப்படங்கள் வாட்டர்மார்க்குடனும், தனிப்பட்ட விவரங்கள் என்க்ரிப்ட் செய்யப்பட்டும் பாதுகாக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் உங்களது புகைப்படத்தை விருப்பம்போல் மறைத்து வைக்கலாம் அல்லது விரும்பிய புரொஃபைலுக்கு மட்டும் தெரியப்படுத்தலாம். இதேபோல் உங்களின் செல்போன் நம்பரை மறைத்து வைக்க முடியும். உங்களுக்கு விருப்பம் தெரிவித்த புரொஃபைலுக்கு நம்பரை தெரியப்படுத்தும் வசதியும் தமிழ் மேட்ரிமோனி தளத்தில் உள்ளது.

கல்யாண வரன்களும்... பாதுகாப்பான மேட்ரிமோனியும்!

பெண்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்தும் கொடுத்து, தமிழ் மேட்ரிமோனி செக்கியூர் கன்னெக்ட் (SecureConnect) என்னும் அம்சத்தை உருவாக்கியுள்ளது. இதனால் பிரீமியம் மெம்பெர்-ஆக இருக்கும் ஆண்கள் புரொஃபைலில் இருந்து மட்டுமே அழைப்புகள் வரும். பிரீமியம் மெம்பெர்களுக்கும், பெண் வரன்களின் எண்கள் நேரடியாக கொடுக்கப்படுவதில்லை என்பதால் பெண்களின் தனிப்பட்ட விவரங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இவ்வகை சேவையை தமிழ் மேட்ரிமோனியே முதன்முறையாக வழங்குகிறது.

தமிழ் மேட்ரிமோனியில் புரொஃபைலை பதிவு செய்கையில், புரொஃபைலை சரிபார்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சுயவிவரங்கள் சரிப்பார்க்கப்பட்ட புரொஃபைலுக்கு நான்கு டிரஸ்ட் பேட்ஜ்கள் வழங்கப்படும். அதில் மிகமுக்கியமானது புரொஃபைல் பேட்ஜ். புரொஃபைல் ஃபோட்டோ இருந்தாலும் செல்ஃபி புகைப்படத்தினால் மற்றொரு முறை புரொஃபைலை உறுதி செய்கிறது தமிழ் மேட்ரிமோனி. இதில் வெளிநாட்டில் இருக்கும் NRI-களின் GPS மூலம் அவர்களின் இருப்பிடம் உறுதி செய்யப்படுகிறது. இதனுடன் சரிபார்க்கப்படும் ஐடென்டிட்டி, ப்ரொஃபஷனல் மற்றும் சோசியல் பேட்ஜ்கள் மூலம் மக்கள் மத்தியில் நிச்சயம் நம்பகத்தன்மை ஏற்படும், அதுவே அவர்கள் எங்களை நம்புவதற்கான சூழலை உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் தமிழ் மேட்ரிமோனிக்கு சொந்தமான Matrimony.com தலைமை நிர்வாக அதிகாரி முருகவேல் ஜானகிராமன்.

வாழ்க்கைத் துணையை நம்பிக்கையுடன் தேர்ந்தெடுத்து வாழ்நாள் முழுக்க மகிழ்வான வாழ்வைப் பெறுக! மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கைக் க்ளிக் செய்து உங்களின் விவரங்களைப் பதிவு செய்திடுங்கள்! https://www.vikatan.com/special/tamil-matrimony