Published:Updated:

வாழ்வை வளமாக்கும் 'டைல்ஸ்' பிசினஸ்!

Sponsored content

முறைப்படுத்தப்பட்ட வியாபராமாக செய்யும்போது அமோக லாபம் தரக்கூடியதாக டைல்ஸ் வியாபாரம் விளங்குகிறது. இத்துறையில் தடம் பதித்துள்ள டைல்ஸ் நிறுவனங்களோடு பிரான்சைசீ (Franchisee) முறையில் பணியாற்றுவதும் கணிசமான லாபம் தரக்கூடியது

KAG Tiles
KAG Tiles

தரை, கூரை மற்றும் சுவர்களின் முக்கிய கட்டுமான அங்கமாகத் திகழ்பவை டைல்ஸ். உள்கட்டுமானம், வெளிக்கட்டுமானம் இரண்டுக்குமே அழகியலைச் சேர்ப்பதில் உதவுவன. பொருளாதாரச் சந்தை ஏறி இறங்கினாலும், கட்டுமானப் பொருள்களுக்கான சந்தை என்பது அதற்குரிய லாபத்தை எட்டத் தவறுவதில்லை எனலாம். இதில் டைல்ஸுக்கும் பங்குண்டு.

தற்போதைய மத்திய அரசு, 'அனைவருக்கும் வீடு' எனும் திட்டத்தை ஒட்டிப் பல கட்டுமானத் திட்டங்கள், மானியங்களை அறிவித்து வருகிறது. இது கட்டுமானப் பொருள் விற்பனையாளர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜி.எஸ்.டி. மற்றும் இ-வே பில் அறிமுகம் போன்றவற்றால் டைல்ஸ் துறை மேலும் பலனடையும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

KAG Tiles
KAG Tiles

இந்தியாவின் டைல்ஸ் தேவை

2019-ன் முடிவுக்குள் 8 சதவீத வளர்ச்சியையும், 2020க்குள் 13 சதவீத வளர்ச்சியையும் டைல்ஸ் சந்தை எட்டும் என்பது டைல்ஸ் தயாரிப்பாளர்கள் கூறும் கணக்கு. பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா மானியத் திட்டத்தின் அறிவிப்புக்குப் பிறகு தென்னிந்தியாவின் வீட்டுக் கட்டுமானத் திட்டங்களின் எண்ணிக்கை 44 சதவீதமாக உயர்ந்துள்ளது! இந்த எண்ணிக்கை அதிகரிப்பு கட்டுமானப் பொருள்களின் தேவையையும் அதிகரித்துள்ளது. இந்தியாவின் ஒரு வருட சராசரி டைல்ஸ் தேவை 750+ மில்லியன் சதுர மீட்டர்காளாகும். இவ்வளவு டைல்ஸை வைத்து மொத்தச் சென்னையையும் கூட மூடிவிடலாம்!

Franchisee வியாபார வாய்ப்புகள்!

முறைப்படுத்தப்பட்ட வியாபராமாக செய்யும்போது அமோக லாபம் தரக்கூடியதாக டைல்ஸ் வியாபாரம் விளங்குகிறது. இத்துறையில் தடம் பதித்துள்ள டைல்ஸ் நிறுவனங்களோடு பிரான்சைசீ (Franchisee) முறையில் பணியாற்றுவதும் கணிசமான லாபம் தரக்கூடியது. தென்னிந்தியாவின் நம்பர் 1 டைல்ஸ் நிறுவனமான 'KAG' இதுபோன்ற பிரான்சைசீ முறையைப் பின்பற்றிவருகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்ட சேனல் பார்ட்னர்கள் (Channel Partners) இதனால் பயனடைந்துள்ளனர். கட்டுமானப் பொருள்களை விற்பனை செய்துவரும் வியாபாரிகளுக்கு டைல்ஸ் வியாபாரம் எக்ஸ்ட்ரா லாபம் தரக்கூடிய உபதொழிலாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உழைப்பும், ஆர்வமும், தன் நம்பிக்கையும் கொண்ட யார் வேண்டுமானாலும் இந்தத் தொழிலைத் தொடங்கி வெற்றி பெறலாம். அதற்கு உண்டான முறையான பயிற்சி மற்றும் வழிகாட்டுதலை KAG வழங்குகிறது.

லாபம் எப்படி?

KAG-யின் சேனல் பார்ட்னர் ஆக இணைந்து, நாம் முதலீடு செய்யும் பணத்திற்கு உண்டான டைல்ஸ் கற்களை KAG வழங்கிவிடுகிறது. அதற்கு மேல் லாபத்தில் பங்கோ, மறைமுகக் கட்டணங்களையோ KAG பெறுவதில்லை. ஸ்டாக் வைக்கும் இடம் மற்றும் டைல்ஸ் ஷோ ரூம் நம் பொறுப்பாகும். குறுகிய காலத்தில் KAG வழங்கும் டைல்ஸ் ஸ்டாக்கை விற்றுவிட முடியும், காரணம் KAG டைல்ஸுக்கு தமிழகத்தில் இருக்கும் மார்க்கெட்! பிற நிறுவனங்களைக் காட்டிலும், 'லோ ரேஞ்', 'மிட் ரேஞ்' & 'பிரீமியம் ரேஞ்' (Low, Mid & High Range) என அனைத்து ரக டைல்களும் ஒரே பிராண்டில் அனைவரும் விரும்பி வாங்கும் தரத்தில் KAG-யில் கிடைக்கின்றன.

KAG Tiles
KAG Tiles

இந்தத் தொழிலில் 36% வரை முதலீட்டின் மீதான வருவாய் (ROI) ஈட்டமுடிகிறது. டைல்ஸ் ஸ்டாக் செய்யும் இடமும் ஷோரூமும் நம் சொந்த இடமாக இருக்கும் பட்சத்தில், வருடத்துக்குக் கிட்டத்தட்ட 50% வரை ROI பெறலாம்! ஓடியாடி அயர்வடையாது நேர்த்தியான வழியில் வருவாய் ஈட்டித் தரக் கூடியது இந்த டைல்ஸ் தொழில்!

டைல்ஸ் வியாபாரம் & பிரான்சைசீ குறித்து மேலும் தெரிந்துகொள்ள விருப்பமா? உங்கள் விவரங்களை இங்கே பதிய க்ளிக் செய்க...