Published:Updated:

இத்தாலியத் தேனீக்களும் தமிழ்நாட்டின் அற்புதமான முருங்கைத் தேனும்!

தேன்
தேன்

கடந்த 18 வருடங்களாக வெற்றிகரமாக முருங்கைத் தேனையும் தும்பைத் தேனையும் உற்பத்தி செய்து எந்தவித ரசாயனக் கலப்புமின்றி மக்களுக்கு விற்பனை செய்து வருகிறார்.

தேன் இயற்கையாக மனிதனுக்குக் கிடைக்கக்கூடிய உணவுகளில் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. நமது பாரம்பரிய மருத்துவத்தின் அதிமுக்கிய அம்சமாக இருக்கும் தேன் பல மருத்துவ குணங்களைக் கொண்டது. சித்த மருத்துவத்தில் பல மருந்துகளுக்கு அடிப்படை மூலப் பொருளாகவும் தேன் விளங்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, ஞாபக சக்திக்கு, எடையை சமநிலையில் வைத்தல், சருமத்திற்கு ஊட்டச்சத்து, காயத்தை குணப்படுத்த, ஈறு நோய்க்கான மருந்து எனப் பலவிதமான பயன்களைத் தேன் நமக்கு அளிக்கிறது. அத்துடன் குழந்தைகளின் பேச்சாற்றலை அதிகரிக்கவும் தேன் உதவுகின்றது.

முருங்கைப்பூ, தும்பைப்பூ, குறிஞ்சிப்பூ, வேப்பம்பூ, சூரியகாந்தி, மாம் பூ, புளியம்பூ, மிளகாய்ப்பூ நெருஞ்சிப்பூ போன்ற பூக்களில் இருந்தும், பல வகையான காட்டு மரங்களின் பூக்களிலிருந்தும் தேன் சேகரிக்கப்படுகின்றது. இந்த மலர்களில் இருந்து தேனீக்கள் தேனை உறிஞ்சி வந்து அவற்றின் அடைகளில் சேகரித்து வைக்கும். ஒவ்வொரு வகையான பூவிலிருந்து கிடைக்கும் தேனுக்கு அதற்குரிய மருத்துவ குணம் உண்டு. அதுபோல் ஒவ்வொரு தேனுக்கும் தனித்துவமான மனமும் சுவையும் உண்டு. நம் நாட்டுத் தேனீக்களைப் பொறுத்தவரையில் அவை அனைத்து வகையான பூக்களில் இருந்து தேனை உறிஞ்சி வந்து அடைகளில் சேமிக்கின்றன. எனவே அவை உற்பத்தி செய்யும் தேன் பல மலர்த்தேன் (Multi Floral Honey) ஆகும்.

இத்தாலியத் தேனீக்களும் தமிழ்நாட்டின் அற்புதமான முருங்கைத் தேனும்!

தேனீக்களில் ஒருவகையான இத்தாலியத் தேனீக்களுக்கு மலர் விசுவாசம் அதிகம். குறிப்பிட்ட வகை மலர்களிலிருந்து தேன் சேகரிக்க ஆரம்பித்தால், அந்த மலர்கள் பூத்து முடியும்வரை அந்தக் குறிப்பிட்ட வகை மலர்களிலிருந்து மட்டுமே தேனை உறிஞ்சி வந்து அடைகளில் சேமிக்கும். எனவே இத்தாலியத் தேனீக்களால் உருவாக்கப்படும் தேன் ஓரின மலர்த்தேன் (Uni Floral Honey) ஆகும்.

அன்னை தேனீ பண்ணை

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டாரங்களில் அதிக அளவில் முருங்கை பயிரிடப்படுகிறது. அதுபோல் மேய்ச்சல் நிலங்களில் அதிகளவு தும்பைப் பூக்கள் மலர்கின்றன. முருங்கைப் பூவில் சுரக்கும் முருங்கைத் தேன், தும்பைப் பூவில் சுரக்கும் தும்பைத் தேன் மிகுந்த மணமும் சுவையும் கொண்டதுடன், மருத்துவ குணமும் கொண்டவை.

இத்தாலியத் தேனீக்களும் தமிழ்நாட்டின் அற்புதமான முருங்கைத் தேனும்!

அன்னை தேனீ பண்ணை (Annai Bee Farms) நிறுவனத்தின் தலைவர் என். தண்டாயுதபாணி அவர்களுக்கு இந்தப் பூக்களிலிருந்து முருங்கைத் தேன் மற்றும் தும்பைத் தேனை சேகரிக்க வேண்டும் என்ற ஆவல் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அதற்குரிய தொழில் நுட்பங்களை அறிந்துகொள்ள கோயம்புத்தூரின் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தை அணுகினார். பூச்சியியல் துறை பேராசிரியர் முத்துராமன், அமெரிக்காவைச் சேர்ந்த தேனீ வளர்ப்பு நிபுணர் வைட் மாங்கம் ஆகியோரிடம் இத்தாலியத் தேனீ வளர்ப்பு தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டார். இந்தப் பயிற்சியின் அங்கமாக கேரளாவின் சிட்டாரிக்கல் என்ற ஊரில் இருந்த இத்தாலியத் தேனீ பண்ணைக்கு அழைத்துச் சென்று சிறப்பு பயிற்சி வழங்கினார்கள். அங்கிருந்து தண்டாயுதபாணி 50 இத்தாலியத் தேனீப் பெட்டிகளை வாங்கி வந்து அன்னை தேனீ பண்ணையை ஆரம்பித்தார்.

கடந்த 18 வருடங்களாக வெற்றிகரமாக முருங்கைத் தேனையும் தும்பைத் தேனையும் உற்பத்தி செய்து எந்தவித ரசாயனக் கலப்புமின்றி மக்களுக்கு விற்பனை செய்து வருகிறார். கரூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் இவ்விரண்டு வகைத் தேன்களும் மிகவும் பிரபலம். தற்போது அன்னை தேனீ பண்ணை ஆனது 1000-க்கும் மேற்பட்ட இத்தாலியத் தேனீ பெட்டிகளுடன் திறம்பட இயங்கி வருகின்றது.

இவ்வகைத் தேன்களைத் தவிர பருவ காலங்களுக்கு ஏற்ப மாந்தேன், புளியந்தேன், மிளகாய்த்தேன், கொத்தமல்லித்தேன் ஆகிய ஓரின மலர்த்தேனையும், பலவகை மலர்களில் இருந்து சேகரிக்கப்படும் பல மலர்த் தேனையும் Annai Bee Farms நிறுவனம் உற்பத்தி செய்து கலப்படமின்றி மக்களுக்கு வழங்கி வருகிறது. ரோஜா இதழ்களுடன் தேன் சேர்த்து தயாரிக்கப்படும் குல்கந்து மற்றும் நெல்லிக்காயுடன் தேன் சேர்த்து தயாரிக்கப்படும் தேன் நெல்லி ஆகியவையும் உயர்ந்த தரத்தில் தயாரிக்கப்படுகின்றன. அன்னை தேனீ பண்ணையில் இருந்து உள்ளூருக்கு மட்டுமல்ல தற்போது மலேசிய நாட்டிற்கும் தேன் வகைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தேனீ பண்ணை அமைக்க விரும்பும் சுய உதவிக் குழு மற்றும் தொழில் முனைவோர்களுக்கு இங்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்படுகிறது. தேனீ வளர்ப்பு மற்றும் இது தொடர்பான சேவைகளில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினைத் தரக் காத்திருக்கிறது அன்னை தேனீ பண்ணை!

விகடன் வாசகர்களுக்கு 10% தள்ளுபடியில் தேன் வகைகளை வழங்குகிறது அன்னை தேனீ பண்ணை. பலவிதமான இயற்கையான தேன் வகைகளை தரமாகவும் சுத்தமாகவும் வாங்க, அணுகவும் : 82206 30725 / 96296 63529.

அன்னை தேனீ பண்ணை -

Facebook: http://facebook.com/profile.php?id=100032156745640 | மலேசியா ஜீனோம் ஆய்வக அறிக்கை : >>>>>>

download
அடுத்த கட்டுரைக்கு