Published:Updated:

அசல் 'டீப் ஃபேக்ஸ்' அச்சம் முதல் 'கீழடி' பின்புலம் வரை #VikatanTop10

சமீபத்திய அப்டேட்களில் மிகுந்த கவனம் ஈர்த்த 10 பதிவுகளின் தொகுப்பு.

#VikatanTop10

1
deepfake

குற்றவாளிகள் தப்பிக்கலாம்... நிரபராதிகள் சிக்கலாம்! - அச்சுறுத்தும் #DeepFakes தொழில்நுட்பம்

> ஒருவரின் ஒப்புதல் இல்லாமல் அவரை ஆபாசமாகச் சித்திரிக்கும் தொழில்நுட்பங்களை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்று தெரியவில்லை. இந்தியா போன்ற சமூகச் சூழல்களில் இது இன்னும் சிக்கலாகத்தான் இருக்கப்போகிறது. 'இமேஜ் பிராசஸிங்'கில் இருக்கும் செயற்கை நுண்ணறிவின் பாய்ச்சல் பல முக்கிய ஆபத்துகளையும் சவால்களையும் நம்முன் வைக்கிறது. அதில் முக்கியமானது `டீப் ஃபேக்ஸ்' (deep fakes). செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் அச்சு அசல் உண்மை போலவே தோற்றமளிக்கும் போலிப்படங்கள் மற்றும் வீடியோக்களே 'டீப் ஃபேக்ஸ்' > குற்றவாளிகள் தப்பிக்கலாம்... நிரபராதிகள் சிக்கலாம்! - அச்சுறுத்தும் #DeepFakes தொழில்நுட்பம் > விரிவான செய்திக் கட்டுரைக்கு க்ளிக் செய்க

2
நந்தினி

நீதிமன்றத்தில் மதுபானம் பற்றிப் பேசியதால் நந்தினியைச் சிறைக்கு அனுப்பியது சரியா?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி பி.ஜே.பி தேசியச் செயலாளர் எச்.ராஜாவரை பல்வேறு அரசியல் தலைவர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளிலெல்லாம், அவர்களைக் கைது செய்தது போன்ற தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதில்லை என்னும்போது, நந்தினியை வேண்டுமென்றே பழிவாங்கும் வகையிலும், அரசுக்கு எதிரான அவரின் போராட்டங்களை ஒடுக்கும் நோக்கத்துடனும் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நந்தினியின் உறவினர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டி வருகிறார்கள். > நீதிமன்றத்தில் மதுபானம் பற்றிப் பேசியதால் நந்தினியைச் சிறைக்கு அனுப்பியது சரியா? > முழுமையான செய்திக் கட்டுரைக்கு க்ளிக் செய்க

3
நஸ்ரத் ஜஹான்

குங்குமம் சர்ச்சை... யார் இந்த நஸ்ரத் ஜஹான்..?

> ஓர் இஸ்லாமியப் பெண், சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றிபெறுகிறார். ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த தன் காதலரை அவர் மணம் முடிக்கிறார். நாடாளுமன்றத்தில் எம்.பி ஆக பதவியேற்கும்போது, பொட்டு, வகிடு நிறைய குங்குமம் என்று வந்திருந்த அவரின் தோற்றத்துக்கு நாடே எதிர்வினையாற்றுகிறது. சோஷியல் மீடியா அவரை ட்ரால் மெட்டீரியல் ஆக்குகிறது. கைகளில் மெஹந்தி, வளையல்கள், நெற்றியில் பொட்டு, குங்குமம் எனப் புதுமணப்பெண் பொலிவுடன் பதவியேற்றுக்கொள்ள, நஸ்ரத் மீது 'குங்குமம்' சர்ச்சை தொடங்கியது. > மிஸ் கல்கத்தா, நடிகை, எம்.பி, குங்குமம் சர்ச்சை... யார் இந்த நஸ்ரத் ஜஹான்..? > முழுமையான செய்திக் கட்டுரைக்கு க்ளிக் செய்க

4
விஜய் சங்கர்

உண்மையில் விஜய் சங்கருக்குக் காயம்தானா?

> காயம் குணமடையாததால் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து விஜய் சங்கர் வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் இணைய இருப்பதாகவும் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. ஷிகர் தவானுக்குக் காயம் ஏற்பட்டபோது, ஸ்கேன் ரிப்போர்ட் முடிவுகள் வர மூன்று நாள்கள் ஆகும் எனத் தெரிவித்திருந்த பி.சி.சி.ஐ, விஜய் சங்கர் விஷயத்தில் அவசரம் காட்டுவது கிரிக்கெட் ரசிகர்களிடையே சந்தேகத்தை அதிகரித்துள்ளது > உண்மையில் விஜய் சங்கருக்குக் காயம்தானா? > முழுமையான செய்திக்கு க்ளிக் செய்க

5
சதுரங்க வேட்டை

திருச்சியில் சிக்கிய `சதுரங்க வேட்டை' நிதி நிறுவனம்!

> செந்தூர் ஃபின்கார்ப் நிறுவனத்தின் மோசடியான செயல்பாடு குறித்து நாணயம் விகடன் இதழில் முதன்முதலில் செய்தி வெளியானது. செய்தி வெளியான பின்பு, தனது முதலீட்டாளர்களை சமாதானப்படுத்துவதற்காக மேலும் பல பொய்த்தகவல்களை அந்நிறுவனம் பரப்பியது. அதுகுறித்தும் விழிப்புணர்வுச் செய்திகள் வெளியிட்டிருந்தோம். அதன் எதிரொலியாக அந்நிறுவனம் குறித்து முதலீட்டாளர்கள் புகாரளித்ததால் தற்போது காவல்துறையின் பிடியில் சிக்கியுள்ளது. > திருச்சியில் சிக்கிய `சதுரங்க வேட்டை' நிதி நிறுவனம்! > முழுமையான செய்திக்கு க்ளிக் செய்க

6
பிள்ளை வளர்ப்பு

உங்கள் பிள்ளை வளர்ப்பு சரிதானா?! இந்த 11 கேள்விகளில் இருக்கிறது விடை

> குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் இன்று கடைப்பிடிக்கும் விஷயங்கள்தான், நாளை அவர்களின் எதிர்காலத்திலும் எதிரொலிக்கும். எனவே அந்தப் பிழைகளை அறிந்துகொண்டு உடனடியாகத் தம்மை திருத்திக்கொள்வது அவசியம். அப்படிப்பட்ட தவறுகள் உங்களிடமும் இருக்கிறதா, அந்தப் பெற்றோர்களில் நீங்களும் ஒருவரா எனத் தெரிந்துகொள்ளவே இந்த Quiz. இந்த 11 கேள்விகளையும் உங்களிடமே கேட்டுக்கொள்வதன் மூலம், உங்களின் பிள்ளை வளர்ப்பு சரியா தவறா என்பதை நீங்களே தெரிந்துகொள்ளலாம். > உங்கள் பிள்ளை வளர்ப்பு சரிதானா?! இந்த 11 கேள்விகளில் இருக்கிறது விடை #VikatanQuiz > முழுமையாகத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க

7
விரால் ஆச்சார்யா

முடிவுக்கு வருகிறதா ரிசர்வ் வங்கி - மத்திய அரசு மோதல்?

இதழிலிருந்து... > விரால் ஆச்சார்யாவின் ராஜினாமாவை பங்குச் சந்தைகள் பெரிய விஷயமாகப் பார்க்கவில்லை. அவர் ராஜினாமா செய்த அன்று, சென்செக்ஸ் 311 புள்ளிகள் உயர்ந்தது.அடுத்து வட்டி விகிதக் குறைப்புக்கான வாய்ப்பிருக்கும் என்பதால், அது அதிகக் கடன் பெற்றுள்ள பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு நன்மை அளிக்கும் என்று சிலர் நினைத்ததன் விளைவுதான் பங்குச் சந்தையின் ஏற்றத்துக்குக் காரணம். எந்தவொரு எதிர்ப்பும் இல்லாமல் இனி வட்டி விகிதங்கள் வேகமாகக் குறைக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. விரால் ஆச்சார்யா ராஜினாமா செய்ததன் மூலம் ரிசர்வ் வங்கியின் தன்னாட்சிக்கு நடந்த போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. இது நமது எதிர்காலத்துக்கு நல்லதல்ல. நீண்ட கால நோக்கில் இந்தியாவிற்குக் கண்டிப்பாக பல ஆச்சார்யாக்கள் அவசியம் தேவை. > விரால் ஆச்சார்யா ராஜினாமா... முடிவுக்கு வருகிறதா ரிசர்வ் வங்கி - மத்திய அரசு மோதல்? > முழுமையான சிறப்புக் கட்டுரைக்கு க்ளிக் செய்க

8

தல Vs தளபதி

ஃப்ளாஷ்பேக் > கங்குலிக்குப் பிறகு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கேப்டனாக இருந்தவர் தோனி. 'நான் பல கேப்டன்களின் கீழ் விளையாடி இருக்கிறேன். அதில் தோனிதான் சிறந்தவர்' என, சச்சின் டெண்டுல்கராலேயே புகழப்பட்டவர் தோனி. அந்த அளவுக்குத் தலைமைப் பண்புகள் நிறைந்த தோனிக்கு, மாற்றாக முன்வைக்கப்படும் கோலியிடம் வேகமும் துடிப்பும் மட்டுமே இருக்கின்றன... - இது நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய விகடன் கட்டுரை. தற்போது களத்தில் தோனியும் கோலியும் எப்படி இருக்கிறார்கள் என்பதை கண்முன்னே பார்க்கிறீர்கள். அன்று, இந்த 'இருவர்' குறித்த பார்வை எப்படி இருந்ததை என்பதை அறிய > தல Vs தளபதி > முழுமையான சிறப்புக் கட்டுரைக்கு க்ளிக் செய்க

9

யூடியூப் டாப்

10

ஃபேஸ்புக் ஹிட்

வைரல் வீடியோ: பொள்ளாச்சி, திருப்பூர் இடையே பேருந்து பின்பகுதி 4 டயருக்கு பதில் 2 டயர்களுடன் இயங்கும் வீடியோ...