Published:Updated:

நிர்மலா பட்ஜெட் முதல் `பிரியாணி' ஆன்லைன் மோசடி வரை

#VikatanTop10

சமீபத்திய அப்டேட்களில் மிகுந்த கவனம் ஈர்த்த 10 பதிவுகளின் தொகுப்பு.

1
மத்திய பட்ஜெட் 2019

மத்திய பட்ஜெட் 2019 - முக்கிய அம்சங்கள்

`வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு பான் அல்லது ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தலாம். வங்கிகளிலிருந்து ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும் பட்சத்தில் அதற்கு இரண்டு சதவிகிதம் வரி விதிக்கப்படும். வருமான வரித்துறையின் செயல்பாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன; ஆண்டுக்கு ஐந்து லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது; ரூ.2 கோடி முதல் 5 கோடி வரையிலான தனிநபர் வருவாய் மீதான வருமான வரி 3 சதவிகிதமாக இருக்கும், ரூ.5 கோடிக்கும் மேற்பட்ட வருவாய் மீதான வரி 7 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. <பெட்ரோல், டீசல் மீது புதிய வரி; மின்சார வாகனங்களுக்கு சலுகை! மத்திய பட்ஜெட் 2019 முக்கிய அம்சங்கள் > முழுமையான செய்திக்கு க்ளிக் செய்க

2
மத்திய பட்ஜெட் 2019

எந்தெந்தப் பொருள்கள் விலை குறையும், கூடும்?!

பட்ஜெட்டில் புதிய வரிவிதிப்பு விகிதங்கள் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார். இதனால், பெட்ரோல், டீசல், தங்க நகைகள் உள்ளிட்ட பல பொருள்கள் விலை உயரும். அதேபோல், மின்சார வாகனங்கள், மின்சாதனங்கள் உள்ளிட்டவை விலை குறையும். தங்கம் மற்றும் ஆபரணக் கற்கள் மீதான சுங்க வரி 10 சதவிகிதத்திலிருந்து 12.5 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், அவற்றின் விலை அதிகரிக்கும். > பட்ஜெட் 2019 - எந்தெந்தப் பொருள்கள் விலை குறையும், கூடும்?! > முழுமையான செய்திக்கு க்ளிக் செய்க

3
வைகோ

தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு ஓர் ஆண்டு சிறை

"இந்த வழக்கில் உங்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கிறேன்'' என்றும், ''பத்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்'' என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார். தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் தனக்கான அபராதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தினார் வைகோ. மேலும், தீர்ப்பை நிறுத்திவைக்கக் கோரியும் ஜாமீன் வழங்கக் கோரியும் வைகோ மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து, மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக, ஒரு மாதம் தீர்ப்பை நிறுத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார். > `உங்களுக்கு தண்டனை அளிக்க உள்ளேன்; உடனே அறிவியுங்கள்!'- தீர்ப்புக்கு முன்பு நீதிபதி - வைகோ உரையாடல் > முழுமையான செய்திக்கு க்ளிக் செய்க.

4
உதயநிதி

உதயநிதி ஸ்டாலினின் தகுதி என்ன?

உதயநிதி ஸ்டாலினின் நோக்கம் கடந்த ஐந்தாண்டுகளில் மாறியிருப்பது, மிகப்பெரும் விமர்சனத்திற்கு உட்பட்டது இல்லை. ஆனால்,

'குடும்ப அரசியல் செய்கிறார்கள்' என ஏற்கெனவே தி.மு.கவின் மீது இருக்கும் முத்திரை மீண்டும் வலுப்பெறும் ஒரு சம்பவமாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது. மிசா காலத்தில் சிறை சென்றதிலிருந்து, தற்போதுவரை ஸ்டாலினின் அரசியல் களப்பயணம் மிக நீண்டது. தற்போதும் அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆகையால், இயல்பாகவே அவர் தற்போது வகிக்கும் இடத்திற்குத் தகுதியானவராக மாறுகிறார். ஆனால், உதயநிதி...?! > "நல்ல நடிகனாக வருவதே என் நோக்கம்!'' 5 ஆண்டுகளுக்கு முன் உதயநிதி சொன்னதும் வாரிசு அரசியலும்! > முழுமையான அரசியல் அலசல் கட்டுரைக்கு க்ளிக் செய்க

5
காமெடித் திருடர்கள்

இவர்கள் காமெடித் திருடர்கள்!

நடிகர் வடிவேல், `தலைநகரம்' படத்தில் நானும் ரவுடிதான் ஜெயிலுக்குப் போறேன் என்று சொல்லுவதைப் போல காட்சி இடம்பிடித்திருக்கும். அதுபோல 2002-ம் ஆண்டில் நடந்த சம்பவம் உட்பட போலீஸாரிடம் சிக்கும் ஒவ்வொரு திருடருக்குப் பின்னால் ஒரு கதை இருக்கும். அதில் நடிகர் வடிவேல் பாணியில் சிக்கிய காமெடி திருடர்களின் பின்னணிதான் இந்தச் செய்தி > சொன்னால் நம்ப மாட்டீங்க..! - வடிவேல் பாணியில் இவர்கள் காமெடித் திருடர்கள் > முழுமையான செய்திக் கட்டுரைக்கு க்ளிக் செய்க

6
லாஸ்லியா

லாஸ்லியாவின் பெர்சனல் பக்கங்கள்!

சமீபத்திய தமிழக வைரல் லாஸ்லியா தான். ஒரு ரியாலிட்டி ஷோவின் அறிமுக நாளில் இலங்கைத் தமிழ் மாடுலேசனில் 'வணக்கம்...' சொல்லி செய்தி வாசிக்கத் தொடங்கினார் லாஸ்லியா. அவர் செய்தியை வாசித்து முடிப்பதற்குள்ளாகவே குபுகுபுவென முளைத்துவிட்டன லாஸ்லியா ஆர்மிக்கள். 'தமிழ்ப் பசங்க ஓவியா, பிரியா வாரியர்னு கேரளப் புள்ளைகளைத் தான் கொண்டாடுவாங்கப்பா...' என்று காலம்காலமாக குத்தம் சொல்லிவரும் சமூகத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த இலங்கைத் தமிழச்சிக்கு ஹார்ட்டீன்களைத் தெறிக்கவிடுகிறார்கள் தமிழக இளைஞர்கள். லாஸ்லியாவும் சளைத்தவரில்லை. 'காணும் பார்த்தது' என்று கண்களால் கொஞ்சுவது... வேக்கப் சாங்கிற்கு உற்சாகமாக நடனமாடுவது என இதயங்களைக் கொள்ளையடிக்கும் எல்லா வித்தைகளையும் செவ்வனே செய்துவருகிறார். ஸ்ரீலங்கா சின்னக்குயில் லாஸ்லியாவின் பெர்சனல் பக்கங்கள் இதோ..! > 'முட்டக்குஞ்சு' லாஸ்லியா... சம்திங் சம்திங் பெர்சனல்ஸ்! > முழுமையான கட்டுரைக்கு க்ளிக் செய்க

7
ஆன்லைன் மோசடி

'ஒரு பிரியாணிக்காக ரூ.40,076 இழப்பு' - ஆன்லைன் மோசடி

ஆன்லைனில் பிரியாணியை ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்த சென்னை மாணவியின் செல்போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ்.களால் அதிர்ச்சியடைந்ததோடு, 40,076 ரூபாயை இழந்துள்ளார். சமீபத்தில் இதுபோன்ற ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து பேசுவதைப் போல பேசும் மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் உங்களின் ஏ.டி.எம்., டெபிட், கிரெடிட் கார்டுகளின் நம்பர்கள், ரகசிய எண்கள், சிவிவி நம்பர்கள் ஆகியவற்றை நைசாகக் கேட்டறிந்து கைவரிசை காட்டிவருகின்றனர். மேலும், ஆன் லைன் பரிவர்த்தனையின்போது ஓடிபி எண்களை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பலர் ஏமாந்துவிடுகின்றனர். > `ஒரு பிரியாணி விலை ரூ.40,076!'- ஆன்லைனில் ஏமாந்த சென்னை கல்லூரி மாணவி > விரிவான செய்திக்கு க்ளிக் செய்க

8
விஜய்

விகடன் ஃப்ளாஷ்பேக்: அரசியல் வெடிக்கிறார் விஜய்

முதல்ல எம்.ஜிஆர், அடுத்து ஜெயலலிதா மேடம், அப்புறம் கேப்டன்... அவங்களை மாதிரியேதான் அடுத்து இப்போ எனக்கும் நடக்குதா?'' என்று தமிழ்நாட்டு அரசியல் சரித்திரத்தை மென்மையான வார்த்தைகளால் உச்சரிக்கும் விஜய் முகத்தில் தெரிவது புன்னகை அல்ல... பூகம்பம்! இதுவரை எந்தக் கேள்வி கேட்டாலும் பரீட்சை பேப்பரில், 'இரண்டு வரிகளுக்கு மிகாமல் பதில் அளிக்கவும்’ பாணியில் பதில் அளித்து வந்த விஜய், முதன்முறையாக அரசியல் காரம் கலந்து தன்னுடைய அடிமனசில் அழுந்திக்கிடந்த உண்மைகளைப் போட்டு உடைத்தார்! > விகடன் ஃப்ளாஷ்பேக் > ''எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த்... இப்போது நான்!'' - அரசியல் வெடிக்கிறார் விஜய் > முழுமையான பேட்டிக்கு க்ளிக் செய்க

9
தண்ணீர்

ஃபேஸ்புக் வைரல்: 'டயாலிசிஸுக்குத் தண்ணீர் இல்லை'

10

யூடியூப் வீடியோ > பட்ஜெட் 2019: சாமானியனுக்கு என்ன பலன்?