Published:Updated:

விகடன் மற்றும் GBR மெட்டல்ஸ் வழங்கும் உங்கள் வீடு, உங்கள் கதை! அனுபவங்களின் சங்கமம்...

GBR மெட்டல்ஸ்
GBR மெட்டல்ஸ்

வீடு கட்டிய உங்களின் அனுபவம் எத்தகையது? தலைமுறை தலைமுறையாய் ஒரே வீட்டில் வசிக்கிறீர்களா? வீட்டால் நீங்கள் பெற்றது என்ன?

பள்ளியில் மாணவராக இருப்போம், அலுவலகத்தில் ஊழியராக... பொது இடங்களில் பொதுவான மனிதராக... ஆனால் வீட்டில் மட்டுமே நாம் நாமாக இருப்போம். வீட்டுக்கு ஒரு விலாசமுண்டு, அதுதான் நமக்கான அடையாளமும்கூட. வீடு என்னமோ நான்கு சுவர், ஒரு கூரைதான், ஆனால் அதனோடு நமக்கு இருக்கும் பந்தம் - 'அதையெல்லாம் அனுபவிக்கணும், ஆராயக்கூடாது!' சொல்லப்போனால் அதையெல்லாம் ஆராயவே முடியாது!

பால் காய்ச்சிய நாள், கணபதி ஹோமப் புகை, விழாக்கால கொண்டாட்டம், கல்யாணக் கலகலப்பு, புதுத் தம்பதிகள் வைத்த வலது கால், முதலிரவின் கூச்சம், முதல் குழந்தையின் வரவு, அது தவழ்ந்தெழுந்த தருணம், சுவரில் காட்டிய கலைநயம்... என எல்லாவற்றுக்குமான சாட்சிதான் வீடு! கவனித்துப் பாருங்கள்... ஒவ்வொரு வீடும் ஒரு கதை சொல்லும். சில வீடுகள் 'நல்வரவு' சொல்லி வரவேற்கும், சில 'நாய்கள் ஜாக்கிரதை' எனக் குரைக்கும், சில கதவுகள் திறந்தே இருக்கும், சில கேட்டுகள் என்றுமே திறக்காது! வருடம் முழுக்க, கட்டியும் கட்டாமலும் நிற்கும் அந்த ஒரு வீட்டைக் கடந்து வந்ததுண்டா? விடையில்லாத விடுகதைப் போலத்தான் அதுவும்...

தலைமுறைகளைத் தாங்கும் பந்தம்!

ஒரு வீடானது தலைமுறைகளைத் தாண்டி நிற்க வேண்டும். பாட்டி-தாத்தா, அம்மா-அப்பா, பேத்தி-பேரன் என அனைவருக்குமான, அனைத்து தலைமுறைகளையும் பார்க்கப்போகும் வீடாக அது இருக்க வேண்டும்! காலம் கடந்து நிற்கும் பூர்வீக வீட்டின் சுவரில் மாட்டியிருக்கும் புகைப்படங்கள் பேசும் கதைகள் போல, வீட்டில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் அவர்கள் காலம் காலமாக வாழும் வீடு பற்றிச் சொல்ல ஒரு கதை இருக்கும்.

விகடன் மற்றும் GBR மெட்டல்ஸ் வழங்கும் உங்கள் வீடு, உங்கள் கதை! அனுபவங்களின் சங்கமம்...

நேற்று: தனக்கென வீடு கட்ட/வாங்க நினைத்ததை விட தங்களின் பிள்ளைகளுக்காக, அவர்களின் பிள்ளைகளுக்காக என தலைமுறையாய் தலைமுறையாய் தம் சந்ததியினர் வாழ சிறப்பானதொரு வீடு வேண்டும் என நினைத்தவர்கள் நம் முந்தைய தலைமுறை. நம் தாத்தா பாட்டியும், பெற்றோரும் தரமான வீட்டைக் கட்ட எடுத்துக்கொண்ட பெருமுயற்சிகளை இன்றைய தலைமுறை நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். நாட்டின் வரலாறு போல வீட்டின் வரலாறு கூட முக்கியம்தான்!

இன்று: இன்றைய தலைமுறையான நமக்குத் தொழில்நுட்பத்தின் உதவி உள்ளது. வல்லுனர்களின் ஆலோசனையோடு, தரமான கட்டுமானப் பொருள்கள் மற்றும் நவீன சாதனங்களைக் கொண்டு மிகச்சிறப்பான வீட்டை நம்மால் கட்டிமுடிக்க முடியும். உலகின் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படும் வடிவமைப்பு மற்றும் அழகியல் நயத்தை நம் வீட்டிலும் கொண்டுவர முடியும். நமது நாளைய தலைமுறையினர் வாழ நிம்மதியான, எதிர்கால சந்ததிகள் வியக்கும் வண்ணம் அழகான ஆத்மார்த்தமான வீட்டைக் கட்ட முடியும் என்பதே நம் காலத்தைய சிறப்பு.

சரி, உங்கள் வீட்டின் கதை என்ன?

வீடு கட்டியவரா? : உங்கள் வீட்டுக்கும் ஒரு கதை இருக்கும்... உங்கள் வீட்டின் பெயர் என்ன? உங்கள் வீட்டில் உங்களுக்குப் பிடித்த விஷயம் என்ன? எந்த வருடம் வீடு கட்டினீர்கள்? தலைமுறைகளைத் தாண்டி நிற்கும் உங்கள் வீட்டின் சிறப்பம்சம் என்ன? வீடு கட்டிய உங்களின் அனுபவம் எத்தகையது? தலைமுறை தலைமுறையாய் ஒரே வீட்டில் வசிக்கிறீர்களா? வீட்டால் நீங்கள் பெற்றது என்ன?

விகடன் மற்றும் GBR மெட்டல்ஸ் வழங்கும் உங்கள் வீடு, உங்கள் கதை! அனுபவங்களின் சங்கமம்...

வீடு உங்கள் எதிர்காலக் கனவா?: வீடு வாங்க/கட்ட நினைக்கிறீர்களா? உங்களின் எதிர்கால சந்ததியினருக்கும் சேர்த்து எப்படிப்பட்ட உறுதியான வீட்டைக் வாங்கக் / கட்டத் திட்டமிட்டிருக்கிறீர்கள்? எந்தெந்த அம்சங்கள் உங்கள் வீட்டில் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள்?

உங்களின் வீட்டோடு நீங்கள் கொண்டுள்ள உறவை, உங்கள் மனதை விட்டு அகலாத அனுபவங்களை, நிலைத்து நிற்கப்போகும் உங்கள் வீட்டைப் பற்றி, "தலைமுறைகளைத் தாங்கும் பந்தம்" எனும் தலைப்பில் சுருக்கமாக எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

உங்கள் குடும்பத்தினரோடு உங்கள் வீட்டையும் சேர்த்து படம் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள், சிறந்த படைப்புகள் விகடன் தளங்களில் படத்துடன் வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்படும் சிறப்பான படைப்புகளுக்கு சிறப்புப் பரிசுகள் காத்திருக்கின்றன! விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்க... https://www.vikatan.com/special/gbr-metals

அடுத்த கட்டுரைக்கு