Published:Updated:

தொழிலில் பிரச்னையா...? வாங்க டாக்டர்கிட்ட போலாம்...!

Sponsored content

தொழிலிலும் பிரச்னை வரும்முன் நமது தொழிலைக் காத்துக்கொள்வதே புத்திசாலித்தனம் என்கிறார் 'Business Doctor' ரேஸ் குமரன்.

குமரன்
குமரன்

இவ்வுலகத்தில் நமக்கு கிடைத்திருக்கும் இந்த ஒரு வாழ்க்கையை வாழத்தான் தினம்தினம் எத்தனை போராட்டம்?மாதம் முழுக்க உழைத்தால் மட்டுமே அடுத்த மாதத்திற்கான செலவினைப் பார்க்க முடியும் என்கிற நிலைமை பல பேருக்கு... 'என்னங்க வாழ்க்கை இது? தொழில் செஞ்சு லைஃப்ல செட்டில் ஆகணும் சீக்கிரம்!' என்றும் பலர் யோசிப்பதில் தவறு எதுவுமில்லை. ஆனால், தொழில் செய்பவர்களது நிலைமையை என்றாவது நாம் யோசித்து பார்த்திருப்போமா? வெறும் பணம் இருந்தால் மட்டும் ஒரு தொழிலை வெற்றிகரமாக தொடங்கி நடத்திவிட முடியாது. அதுவும் இன்றைய உலக சூழ்நிலையில் தொழிலில் வளர்ச்சி காண்பது கடினமாக மாறிவிட்டது. அதையும் மீறி தொழிலில் சாதிப்பவர்களுக்கு மிகப்பெரிய சல்யூட்!

போட்டி, சவால், அரசியல், பொறாமை என பலவிதமான சிக்கல்கள் நிறைந்ததே தொழில். இதை அனைத்தையும் கடந்து வரும் தொழிலதிபர்களே வணிக வானில் கொடிகட்டிப் பறக்கின்றனர். ஆனால், இங்கு வெற்றிக் கொடியை நாட்டியவர்களைவிட, கொடி அறுந்து நடையைக் கட்டியவர்கள்தான் ஏராளம். இது அவர்களுக்கு மன உளைச்சலை கொடுப்பது மட்டுமின்றி, பண நெருக்கடியும் கொடுத்து அவர்களின் கழுத்தை நெருக்குகின்றது. இதனால் ஊரைவிட்டு ஓடிய தொழிலதிபர்களை நாம் பார்த்திருக்கிறோம். ஏன் சிலர் கடன் பிரச்னையால் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்குக் கூட சென்றுள்ளனர்.

தொழிலில் பிரச்னையா...? வாங்க டாக்டர்கிட்ட போலாம்...!

பிசினஸ்ஸை சரிசெய்யும் 'பிசினஸ் டாக்டர்'

நமக்கு உடம்பில் ஒரு சிறிய பிரச்னை என்றாலே, அது முற்றுவதற்கு முன்பாகவே மருத்துவரிடம் சென்று ஆலோசனைக் கேட்டு, நம்மை பாதுகாத்துக்கொள்கிறோம். அதேபோல் தொழிலிலும் பிரச்னை வரும்முன் நமது தொழிலைக் காத்துக்கொள்வதே புத்திசாலித்தனம் என்கிறார் 'Business Doctor' ரேஸ் குமரன். தொழிலில் ஏற்படக்கூடிய பின்னடைவுகளை முன்கூட்டியே தெரிந்துகொண்டு அவற்றைத் தவிர்ப்பது எவ்வாறு என்று கற்றுத்தருகிறார் இந்தப் பிசினஸ் டாக்டர்.

இது குறித்து ரேஸ் குமரன் கூறுகையில், "இன்றைய உலகில் பிரச்னை இல்லாமல் தொழில் இருப்பதில்லை. பொருளாதார நெருக்கடி, பணத்தையும் நேரத்தையும் அதிகளவு செலவிட்டாலும் தொழிலில் வளர்ச்சியின்மை, தொழிலைப் பராமரிப்பதில் சிரமம், தொழிலில் நண்பர்கள் பார்ட்னராக இருந்தாலும் பார்ட்னர்ஷிப்பில் இருந்து விலகும் அளவிற்கு அவர்கள் மீது வெறுப்பு ஏற்படும் நிலை, ஊழியர்களுக்கு எவ்வளவு செய்தாலும் அவர்களின் அதிருப்தி குறையாமை, தொழிலில் போட்டியாளர்கள் வலிமையாக இருப்பது என தொழில் முனைவோர்களுக்கு பலவகை பிரச்னைகள் இருக்கின்றன

பிரச்னை என்றால் ஜோதிடரிடம் ஓடுகின்றனர். அவர்களோ வாஸ்து சரியில்லை, சனி பிடிச்சிருக்கு என நம்மைக் குழப்புவார்கள். தொழிலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் அதனைக் கற்றுக்கொண்டு நுழைவதில்லை, அடிப்படை விஷயங்களை மட்டும் தெரிந்துகொண்டு வருபவர்களே ஏராளம். இதனால் தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்னை இதுதான் என இனம்காண்பது அவர்களுக்கு அரிதாகவுள்ளது, அந்தப் பிரச்னையை அறிந்துவிட்டால் பிசினஸ்ஸில் சாதித்துவிடலாம்.

தொழிலில் பிரச்னையா...? வாங்க டாக்டர்கிட்ட போலாம்...!

தொழில் பிரச்னையை அறிவு, அனுபவம், திறமை, அணுகுமுறை போன்றவற்றால் மட்டுமே தீர்க்க முடியும். இதனுடன் உங்கள் தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வைக் கொடுப்பதுதான் பிசினஸ் டாக்டரின் குறிக்கோள். எங்களால் நிச்சயம் உங்களது பிரச்னையைப் போக்க முடியும். அவ்வாறு உங்களது தொழில் தொடர்பான பிரச்னைக்கு எங்களால் தீர்வுதர முடியவில்லை என்றால் நீங்கள் கட்டிய பணம் திரும்ப தரப்படும்" என்கிறார் டாக்டர் ரேஸ் குமரன்.

பிசினஸ் டாக்டர் பற்றி...

டாக்டர் ரேஸ் குமரன், முதல் தலைமுறையைச் சேர்ந்த தொழில்முனைவர்களில் ஒருவர். பூஜ்ஜியத்தில் தொடங்கி தற்போது, 50 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழிலின் நிறுவனராகவுள்ளார். 7 தொழில்களைத் தொடங்கி, அதில் 5 தொழில்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். மேற்கண்ட தொழில் பிரச்னைகள் அனைத்தும், ரேஸ் குமரனும் சந்தித்துள்ளார். தற்போது ஊக்கமளிக்கும் பேச்சாளர், வாழ்க்கை பயிற்சியாளர், தொழில் பயிற்சியாளர் என பன்முகங்களைக் கொண்டிருக்கும் குமரன் வியாபார மேலாண்மையில் முனைவர் பட்டம் பெற்றவராவார்.இதுதவிர, சிறந்த தொழில்முனைவோருக்கான அப்துல் கலாம் விருது, பாபா சாஹிப் அஹ்மத் விருது மற்றும் பல சர்வதேச விருதுகளையும் குமரன் பெற்றுள்ளார்.

'உங்கள் தொழிலில் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளைப் பெற பிசினஸ் டாக்டர்' ரேஸ் குமரனை அணுகுங்கள். மேலும் விவரங்களுக்கு www.lifetimepositive.com, 9345016555.