Published:Updated:

தன்னைத் தானே மணம் செய்து கொள்ளப்போகும் குஜராத் பெண்; இந்தியாவின் முதல் `சுய திருமணம்'!

ஷாமா பிந்து

24 வயதான ஷாமா பிந்து தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். அவர் கூறும் காரணம், உங்களை ஆச்சரியப்பட வைக்கலாம்.

தன்னைத் தானே மணம் செய்து கொள்ளப்போகும் குஜராத் பெண்; இந்தியாவின் முதல் `சுய திருமணம்'!

24 வயதான ஷாமா பிந்து தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். அவர் கூறும் காரணம், உங்களை ஆச்சரியப்பட வைக்கலாம்.

Published:Updated:
ஷாமா பிந்து

ஷாமா பிந்துக்கு வயது 24. குஜராத்தைச் சேர்ந்த இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். ஜூன் 11 ஷாமாவுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. திருமணம் நடைபெறும் இடம், தேதி, நேரம் எல்லாமும் சரி. ஷாமா யாரைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பதில் ஆச்சரியமே இருக்கிறது. அதற்கான பதில், தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார் ஷாமா.

ஸோலோகாமி (Solo gamy) என்றழைக்கப்படும் சுய திருமணம் நடைபெறுவது இதுவே இந்தியாவில் முதன்முறை. அக்னி சுற்றி வருவது தொடங்கி நெற்றியில் திலகம் வைத்து கொள்வது வரை எல்லா சடங்குகளும் இந்தத் திருமணத்தில் உண்டு.

சுய காதலின் வெளிப்பாடாக தான் இந்த முடிவுக்கு வந்ததாக பிந்து தெரிவிக்கிறார். ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், "நான் ஒருபோதும் திருமணம் செய்துக்கொள்ள விரும்பியதில்லை. ஆனால் மணமகளாக இருப்பது பிடிக்கும். அதனால் என்னை நானே திருமணம் செய்துகொள்ள விரும்பினேன்"

ஷாமா பிந்து
ஷாமா பிந்து

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும், "ஸோலோ காமி பற்றித் தேடினேன். நம் நாட்டில் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. சுய காதலுக்கு முன்னுதாரணமாக நான்தான் இருக்கப் போகிறேன் என நினைக்கிறேன். சுய திருமணம் என்பது உங்களுக்கு நீங்கள் இருப்பதையும் உங்கள் மீது அளவற்ற அன்பு செலுத்துவதையும் உறுதி செய்யும் கமிட்மென்ட். பொதுவாக நாம் யாரைக் காதலிக்கிறோமோ அவர்களை மணந்து கொள்ளலாம். நான் என்னைக் காதலிக்கிறேன். அதனால் இந்த திருமணம். பெண் பிரதானம் என்பதையும் இதன் வழியாக உணர்த்த விரும்புகிறேன்"

பிந்துவின் பெற்றோர் அவரது முடிவுக்கு ஆதரவாக இருக்கின்றனராம். திருமணத்துக்கு பிறகு இரண்டு வாரங்கள் கோவாவுக்கு ஹனி-மூன் செல்லவிருக்கிறார் பிந்து.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism