Published:Updated:

பிஞ்சுக் குழந்தைக்கு கேன்சர்; உயிர்ப்பிச்சை கேட்கும் தாய்.

மிதுன்
மிதுன்

5 வருட கடும் உழைப்பில் சேர்த்த அந்தக் காசுதான் பிரசவத்தின் போது மருத்துவ செலவுகளுக்கு ரொம்பப் பெரிய உதவியாக இருந்துச்சு. ஆனா, அப்போ தெரியாது இதைவிட பல மடங்கு தொகை இனிமேல்தான் தேவைப்படப்போதுன்னு.

எனக்கு குழந்தைகள் என்றாலே கொள்ளைப் பிரியம். எங்கு குழந்தைகள் இருந்தாலும் ஓடிப்போய் அவங்களோட விளையாடுவேன், குழந்தைகளோட கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பும், அந்தத் தூய்மையும் யாருக்குதான் பிடிக்காது?

எனக்கும் சிவானந்துக்கும் கல்யாணம் ஆன பிறகு, எங்களுக்கு பிறக்கப் போற குழந்தையை எப்படியெல்லாம் வளர்க்கணும்னு நிறைய கனவுகளோடு காத்திருந்தேன். ஆனால் அந்தக் கனவு அவ்வளவு சுலபமா நிறைவேறல... எங்களோட முதல் குழந்தைக்காக 5 வருடங்கள் காத்திருந்தோம்!

எங்களோட குழந்தைக்கு ஒரு நல்ல வாழ்க்கையைக் கொடுக்கணும்னு எல்லா பெற்றோர் மாறியும் நாங்களும் ஆசைப்பட்டோம். குழ்ந்தை பிறக்க இருந்த இந்த 5 வருஷத்தில் வயித்தையும் வாயையும் கட்டி எங்களால முடிஞ்ச அளவு பணம் சேமிச்சு வைச்சிருந்தோம்.

5 வருட கடும் உழைப்பில் சேர்த்த அந்தக் காசுதான் பிரசவத்தின் போது மருத்துவ செலவுகளுக்கு ரொம்பப் பெரிய உதவியாக இருந்துச்சு.

ஆனா, அப்போ தெரியாது இதைவிட பல மடங்கு தொகை இனிமேல்தான் தேவைப்படப்போதுன்னு...

பிஞ்சுக் குழந்தைக்கு கேன்சர்; உயிர்ப்பிச்சை கேட்கும் தாய்.

எங்களோட பாப்பா 'மிதுன்' பிறந்த நாள்தான் என் வாழ்நாளின் மிகச் சிறந்த நாள். இதுக்குத்தானே இவ்வளவு வருஷமா தவமிருந்தோம்! குழந்தையைக் கையில் வாங்கி, அது கையை காலை அசைக்கிறத பார்க்கும்போது வரும் ஆனந்தம், ஒரு தாயாக நான் அடைஞ்ச சந்தோஷம், அதை வார்த்தைகள்ல எனக்கு சொல்லத் தெரியல...

மிதுனின் முதல் பிறந்தநாள் வரைக்கும் எல்லாமே நல்லாதான் போய்ட்டு இருந்துச்சு. திடீர்னு ஒருநாள், குழந்தையோட உடம்புல ஒரு தடிப்பு இருந்ததைக் கவனிச்சோம்... அது என்ன பிரச்னைனு எங்களுக்குப் புரியல, 2 நாள் பொறுத்திருந்து பார்த்தோம்.

போன வருஷம், லாக் டவுன் போட்ட பிறகு என் கணவருக்கு வேலை போயிருச்சு. கடந்த ஒரு வருஷமா வேலை தேடி ரொம்பவே கஷ்டப்பட்டார், ஆனாலும் வேலை கிடைச்ச பாடில்லை...

நாங்க வைச்சிருந்த சேமிப்பும் கொஞ்சம் கொஞ்சமா கரைஞ்சுது. குழந்தையை அப்பாகிட்ட விட்டுட்டு நான் வேலைக்கு போக ஆரம்பிச்சேன். ஆனா நான் வாங்குற கூலி எங்க வயித்துக்கே பத்தாது...

அந்த நிலைமைலதான் மிதுன் உடம்புல அந்தப் பிரச்னை வந்தது... டாக்டர்கிட்ட போனோம், பரிசோதனையில் குழந்தைக்கு கேன்சர் இருக்குன்னு சொல்லிட்டாங்க...

பிஞ்சுக் குழந்தைக்கு கேன்சர்; உயிர்ப்பிச்சை கேட்கும் தாய்.

என் வாழ்க்கையே சரிஞ்சு போன மாதிரி இருந்துச்சு. இப்போதான் ஒரு வயசு ஆன குழந்தை அது, கேன்சர்ல கொஞ்சம் கொஞ்சமா செத்துகிட்டு இருக்குன்னு சொன்னா ஒரு தாயால எப்படி தாங்கிக்க முடியும்?

கையில் இருந்த கொஞ்சம் நஞ்சம் காசு, வீட்டில் எதையெல்லாம் விற்க முடியுமோ அதையெல்லாம் விற்று சிகிச்சைக்கு வேண்டிய காசை ஏற்பாடு செய்ய முயற்சி செஞ்சோம்.

ஜனவரி 21, 2021-ல் மிதுனுக்கு ஒரு ஆப்பரேஷன் செஞ்சாங்க. ஆனால் அது போதாதாம். இன்னுமொரு ஆப்பரேஷன் பாக்கி இருக்காம், மேலும் கீமோதெரப்பி சிகிச்சை கொடுத்தா மட்டும்தான் குழந்தையைக் காப்பாத்த முடியுமாம்!

மொத்த சிகிச்சைக்கும் 8 லட்ச ரூபாய் ($ 10660) தேவைப்படுது.

எங்களுக்கு தெரிஞ்ச எல்லா நண்பர்கள், உறவுகள்கிட்டேயும் கடன் வாங்கியும் எங்களால அவ்வளவு பெரிய தொகையைப் புரட்ட முடியல...

எங்களோட குழந்தை அந்தக் கொடூர நோயால தினம் தினம் தவிக்கிறத பார்க்க சகிக்கல... அந்தப் பிஞ்சு உடம்பு அவ்வளவு பெரிய நோயைத் தாங்க முடியாம துடிக்குது.

உங்களுடைய உதவி இப்போ எங்களுக்குத் தேவை. நீங்க மனசு வெச்சா எங்களோட குழந்தையைக் காப்பாற்ற முடியும். உங்களால முடிஞ்ச பண உதவியைச் செய்ங்க, எங்களோட பிஞ்சுக் குழந்தைக்கு தயவு செஞ்சு உயிர் பிச்சை போடுங்க...

உங்களுடைய உதவியைச் செய்ய இந்த லிங்கைக் கிளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு