Published:Updated:

தகுதியுள்ள மாணவருக்கு உதவுவோம்!

லிஃப்ட் ஆப்பரேட்டராக இருந்தாலும் தனது மூத்த மகனை மருத்துவப் படிப்புக்கு ஆயத்தப்படுத்திய ஆறுமுகம், இரண்டாவது மகனின் கனவை நிறைவேற்றி வைக்க முடியாததை நினைத்து தவித்துவருகிறார்.

உதவி
உதவி

ஆழ்மனதில் புதைந்திருக்கும் எண்ணங்களே கனவுகளுக்கு காரணமாக அமைகின்றன. ஜெயகணேஷுக்கும் ஒரு எண்ணமுண்டு, அதுவே அவரின் கனவும்கூட! விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயகணேஷ் குமார், டாக்டர் ஆவதே அவரின் பெருங்கனவு. கணேஷின் தந்தை ஆறுமுகம், கீழப்பட்டி கிராமத்தின் அருகேயுள்ள கல்லூரி ஒன்றில் லிஃப்ட் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.

வறுமையின் பிடியில் இருந்தாலும் தனது மூன்று மகன்களும் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள வேண்டும் என உத்வேகம் அளித்து வருகிறார் தந்தை ஆறுமுகம். மூத்த மகனான சிவ சுப்ரமணியம், இந்தாண்டுதான் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்தார். தற்போது மருத்துவ மேற்படிப்புக்கான NEET தேர்வுக்குத் தன்னைத் தயார்படுத்தி வருகிறார். கடைசி மகன் சிவ சக்தி பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இவரும் மருத்துவப் படிப்பின்மீதே ஆர்வம் கொண்டுள்ளார்.

தகுதியுள்ள மாணவருக்கு உதவுவோம்!

ஆறுமுகத்தின் இரண்டாவது மகனான ஜெயகணேஷ், பத்தாம் வகுப்பில் 485 மற்றும் 12ம் வகுப்பில் 1124 மதிப்பெண் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 470 மதிப்பெண் பெற்றிருக்கிறார். படிப்பில் அவரது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தினாலும், கட் ஆஃப் மதிப்பெண்படி அவருக்கு அண்ணாமலை ('தனியார்') பல்கலைக்கழகத்திலேயே மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைத்துள்ளது. இதனால் ஆண்டுக்கு ரூ. 4 லட்சத்தை மருத்துவப் படிப்பிற்கான கட்டணமாக செலுத்தவேண்டியுள்ளது.

லிஃப்ட் ஆப்பரேட்டராக இருந்தாலும் தனது மூத்த மகனை மருத்துவப் படிப்புக்கு ஆயத்தப்படுத்திய ஆறுமுகம், இரண்டாவது மகனின் கனவை நிறைவேற்றி வைக்க முடியாததை நினைத்து தவித்துவருகிறார். ஒரு மகனின் கல்விக்கனவை நிறைவேற்றிவிட்டு மற்றொரு மகனின் கல்விக்கு கைக்கொடுக்க முடியாமல் தவிக்கும் இந்தத் தந்தையின் நிலைமை வேதனைக்குரியது. ஜெயகணேஷின் கனவு நிராசையாகிவிடக்கூடாது என்றும், மருத்துவப் படிப்பு எனும் உன்னதமான படிப்பை பயிலும் வாய்ப்பு எளிதில் யாருக்கும் அமைந்துவிடுவதில்லை என்கிற எண்ணத்திலும், நிதி திரட்டும் இணையதள நிறுவனமான 'Edudharma' கணேஷுக்கு உதவிபுரிய முன்வந்துள்ளது.

'ஒரு வருடத்திற்கு முன்பு புதுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயியின் மகன் துரையரசன் மதுரை மருத்துவக் கல்லூரியில் பயில உதவி செய்து உங்களின் ஆதரவைக் கொடுத்தீர்கள். அதேபோல், மருத்துவப் படிப்பு பயில முற்றிலும் தகுதியுள்ள ஜெயகணேஷுக்கும் உங்களின் ஆதரவைக் கொடுத்து மருத்துவம் என்னும் அவரின் லட்சியக்கனவை நிறைவேற்றி உதவுங்கள்' என 'Edudharma' வேண்டுகோள் விடுக்கிறது.

ஜெயகணேஷுக்கு உதவ விரும்பும் அத்தனை நல்லுள்ளங்களும் https://www.edudharma.com/fundraiser/help-lift-operator-son-to-become-a-doctor எனும் லிங்கிற்குச் சென்று இப்போதே உதவலாம்! உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் இச்செய்தியை பகிர்ந்து உதவி செய்யலாம். தங்களின் சிறிய பங்களிப்பும் நிச்சயம் ஜெயகணேஷின் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

தகுதியுள்ள மாணவருக்கு உதவுவோம்!

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Edudharma-வின் விளம்பரதாரர் பகுதியாகும். எனவே, இதில் கூறப்பட்டுள்ள செய்திகளின் உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பாகாது. இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம் என்பதால், நன்கொடை செய்வதற்கு முன்னர் இச்செய்தியின் உண்மைத்தன்மையை சுயாதீனமாக ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுமாறு வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.