Published:Updated:

குழந்தை உயிர்ப்பிழைக்க உடனடியாக சிகிச்சை தேவை!

மெஹனாஸ்
மெஹனாஸ்

கொடூரமான பரிசு ஒன்று வந்துசேரும் என்று அப்போது யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்! பிறந்தநாள் அன்று வந்த சோதனை முடிவு, குழந்தைக்கு பி-செல் தலசீமியா மேஜர் (B-Cell Thalassemia Major) நோய் இருப்பதை உறுதி செய்தது.

அன்று குட்டி 'மெஹனாஸ்'-க்கு 4வது பிறந்தநாள். சந்தோஷமாய் ஆரம்பித்த கொண்டாட்டம் எல்லாம் சோகத்தில் முடிந்தது. அன்றோடு பறிபோன மன நிம்மதி என்றுதான் கிடைக்குமோ என்று கலங்கி நிற்கின்றனர் குழந்தையின் குடும்பத்தினர்.

6 வருடங்களுக்கு முன்பு (2014), அஷ்ரப்நிஸா மற்றும் முகமது தம்பதியினர் தங்களின் முதல் குழந்தையைப் பெற்றெடுத்தனர். ஒன்பது மாத காத்திருப்பின் பயனாக அழகிய பெண் குழந்தை பிறந்தது. அவளுக்கு மெஹனாஸ் என்று பெயர் சூட்டினர்.

"இரண்டு தலைமுறைகளாக எங்கள் குடும்பத்தில் பெண் குழந்தைகளே பிறக்கவில்லை. மெஹனாஸ் பிறந்ததை உண்மையிலேயே கடவுளின் வரமாகத்தான் எங்களின் ஒட்டுமொத்த குடும்பமும் நினைத்தது. அவளை நல்ல முறையில் வளர்ப்பது குறித்து நானும் என் கணவரும் கண்ட கனவுகள் ஏராளம்!"

இரண்டு வருடங்கள் அமைதியாக நகர்ந்தன... மெஹனாஸைக் கண்ணுக்குள் வைத்து வளர்த்து வந்தார் அஷ்ரப்நிஸா, தன் அன்புக் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள ஓடி ஓடி உழைத்துக்கொண்டிருந்தார் முகமது. இந்த நிலையில், மீண்டும் அந்தத் தம்பதிக்கு ஓர் பெண் குழந்தை பிறந்தது. அவளுக்கு நசீரா என்று பெயரிட்டனர். இரண்டு மகள்கள் மூலம் வாழ்வின் மொத்த சந்தோஷமும் தங்களுக்குக் கிடைத்துவிட்டதாய் எண்ணியது அந்த அழகிய குடும்பம்.

குழந்தை உயிர்ப்பிழைக்க உடனடியாக சிகிச்சை தேவை!

எப்போதும்போல ஒருநாள், மெஹனாஸைச் செக் அப் செய்ய குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வந்திருந்தனர். குழந்தையின் சருமம் மஞ்சள் ஏறி இருந்ததால், அவளுக்கு மஞ்சள் காமாலை இருக்குமோ என்று மருத்துவர் சந்தேகப்பட்டார். ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது.

ஒருபுறம் மெஹனாஸின் 4வது பிறந்தநாளைக் கொண்டாடும் மும்முரத்தில் இருந்தனர் பெற்றோர். கொடூரமான பரிசு ஒன்று வந்துசேரும் என்று அப்போது யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்! பிறந்தநாள் அன்று வந்த சோதனை முடிவு, குழந்தைக்கு பி-செல் தலசீமியா மேஜர் (B-Cell Thalassemia Major) நோய் இருப்பதை உறுதி செய்தது.

"சோதனை முடிவை சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை! எங்கள் மெஹனாஸ் கொஞ்சம் கொஞ்சமாக இறந்துகொண்டிருக்கிறாளாம், நான்கே வயதில் இதெல்லாம் எப்படி சாத்தியம்? அன்றைய நாளில் இருந்து மாதாமாதம் ரத்தமாற்றம் செய்ய அவளை மருத்துவமனைக்கு அழைத்து வருகிறோம். என் வாழ்நாளிலேயே நான் வெறுப்பது இந்தப் பயணத்தைதான். கையில் ஊசி போட நர்ஸ்கள் நரம்பைத் தேடுவார்கள், அந்தளவுக்கு பிஞ்சுக் குழந்தை அது. ஒவ்வொரு முறை அவள் வலியால் கதறி அழும்போதும், எனக்குள்ளே எழும் குற்ற உணர்ச்சி, என் குழந்தைக்கு என்னால் உதவ முடியவில்லையே என்ற வலி என்னை கொன்றெடுத்துவிடும்!"

குழந்தை உயிர்ப்பிழைக்க உடனடியாக சிகிச்சை தேவை!

அஷ்ரப்நிஸாவும் முகமதும் இரண்டு வருடங்களாக இந்த வேதனையை அனுபவித்து வருகின்றனர். வலியால் குழந்தை துடிக்கும்போதும், ரத்தம் ஏற்றும்போது கைகளைத் தடவிக்கொடுத்தும் குழந்தையை சமாதானம் செய்கிறார்கள். தன்னுடைய தலைமுடி ஏன் இப்போதெல்லாம் நிறைய கொட்டுகிறது என்று மெஹனாஸ் கேட்கும்போது, அவர்களிடம் பதில் ஏதுமில்லை...

மெஹனாஸ் உயிர்ப்பிழைத்துவிட்டால் போதும். அதற்குத் தேவை போன் மேரோ மாற்று சிகிச்சை (Bone Marrow Transplant). துரதிர்ஷ்டவசமாக, அச்சிகிச்சைக்கு ஆகும் கட்டணம் ரூ. 25 லட்சம்! வருடக்கணக்கில் உழைத்தாலும் இவ்வளவு பணத்தை அந்த ஏழைத் தம்பதியால் புரட்ட முடியாது!

"இருக்கும் துன்பம் போதாது என்று கொரொனோவினால் என் கணவர் வேலையில்லாமல் இருக்கிறார். வயதான தாத்தா பாட்டியிடம், எங்களின் இரண்டாவது மகளை விட்டுவிட்டு மெஹனாஸின் சிகிச்சைக்காக வந்துள்ளோம். என் செல்ல மகள் மெஹனாஸையும் எங்கள் குடும்பத்தையும் அந்த அல்லாதான் காப்பாற்ற வேண்டும். என்னால் முடிந்ததெல்லாம் இறைவனிடம் மன்றாடி வேண்டுவது மட்டும்தான்..." என்கிறார் அஷ்ரப்நிஸா.

குழந்தையின் உயிரைக் காப்பாற்ற போன் மேரோ மாற்று சிகிச்சை மட்டுமே இப்போது வழியாக இருக்கிறது. மெஹனாஸின் போராட்டத்தில் நீங்களும் கொஞ்சம் கைக்கொடுத்து உதவ வேண்டுகிறோம். உங்களால் என்ன கொடுக்க முடியுமோ, அதைக் கொடுத்து உதவுங்கள். ஒவ்வொரு ரூபாயும் முக்கியம்தான். நன்கொடையாக வரும் மொத்தப்பணமும் குழந்தையின் சிகிச்சைக்கு சென்றடையும்.

சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை இந்நோய் குறித்து சான்று வழங்கியுள்ளனர். சிகிச்சை மற்றும் அது தொடர்பான கட்டணம் குறித்து அறிய, இந்த நிதித் திரட்டலை ஏற்பாடு செய்தவரையோ அல்லது மருத்துவமனையையோ தொடர்புகொள்ளலாம்.

உதவி செய்ய விரும்புவோர், இந்த லிங்கைக் கிளிக் செய்யவும்.

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை கெட்டோ-வின் விளம்பரதாரர் பகுதி என்பதால் கட்டுரையின் உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பாகாது. இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம் என்பதால் நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அடுத்த கட்டுரைக்கு