Election bannerElection banner
Published:Updated:

கண்ணில் கேன்சர். பச்சைக் குழந்தை. பதறும் பெற்றோர்!

கெட்டோ
கெட்டோ

"கஷ்டம், பிறந்ததிலிருந்தே இது மட்டும்தான் எங்களின் 9 மாதக் குழந்தைக்குத் தெரியும்!

பிறந்து ஒரு மாதத்தில் அவள் கண்களில் அந்த வித்தியாசம் காணப்பட்டது. அதற்கான காரணம் தெரியவந்தபோது, அய்யோ! பச்சிளம்குழந்தைக்கு நேரக்கூடாத துன்பம் அது. எங்களுடைய வறுமைக்காக அவள் ஏன் கஷ்டப்பட வேண்டும்?" கதறுகிறார் தாய் நந்தினி.

தற்போதைய இக்கட்டான சூழ்நிலை அந்த ஏழைத்தம்பதியை கதிகலங்க வைத்துள்ளது. அவர்களின் பெண் குழந்தைக்கு வந்திருப்பது ரெட்டினோபிளாஸ்டோமா (Retinoblastoma) எனப்படும் கண் புற்றுநோய். இடது கண்ணில் இப்போது இருக்கும் அந்தப் புற்றுநோயைக் கவனிக்காமல் விட்டால் நாளடைவில் அது குழந்தையின் உயிரையே சூறையாடிவிடும் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, தீவிரமான பல சிகிச்சைகள் வழங்கப்பட்டு குழந்தையின் உடலில் பிற பாகங்களுக்குக் கேன்சர் பரவாத வண்ணம் காக்கப்பட்டு வருகிறது.

தங்களுக்குப் பெண் குழந்தை பிறந்ததும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தது அந்தக் குடும்பம். அந்தக் குடும்பத்தின் தலை வாரிசு அவள்தான். குழந்தையின் இடது கண்ணில் வெண் படலம் ஒன்று தோன்றியது, அத்துடன் அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சியெல்லாம் காற்றோடு கரைந்த கற்பூரமாய்ப் இல்லாமல் போனது.

இந்தக் கோவிட் நேரத்தில் பச்சைக் குழந்தையை ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிச் சென்றால், என்ன நேருமோ என்கிற பயத்தில் இருந்தனர் பெற்றோர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அந்த வெள்ளைப் படலம், பெரிதாகிக்கொண்டே போக ஒரு கட்டத்தில் மருத்துவமனைக்குச் சென்றே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டது. பரிசோதனைகள் முடிந்தபின்தான் சோதனையே ஆரம்பித்தது, குழந்தைக்கு மிகவும் தீவிரமான கேன்சர் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கண்ணில் கேன்சர். பச்சைக் குழந்தை. பதறும் பெற்றோர்!

ஒவ்வொரு நாளும் அந்த ஏழைப் பெற்றோருக்கு கொடூரமான கெட்ட கனவு போலத்தான் இருக்கிறது. அந்தச் சின்னஞ்சிறிய குடும்பத்தைச் சிதைத்து சின்னாபின்னம் ஆக்கிவிட்டது குழந்தையின் நோய்.

"குழந்தை வலியில் கதறி அழும்போது ஏன் இதயமே சுக்குநூறாய் உடைந்துபோகிறது. குழந்தையின் அழுகுரல் காதில் ஒலிக்கும்போதெல்லாம் நானெல்லாம் ஒரு நல்ல அப்பாவா என்று எனக்குள்ளேயே குற்ற உணர்ச்சி தோன்றுகிறது." என்று அழுது புலம்புகிறார் நந்தினியின் கணவர்.

டாக்டர்கள் சில பரிசோதனைகள் செய்த பின்னர், இந்த வியாதி 70% சரிசெய்யப்படக்கூடியது என்று கூறியுள்ளனர். அடுத்தபடியாக குழந்தைக்கு கீமோதெரப்பி ஆரம்பிக்கப்பட வேண்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக புற்றுநோய்க்குச் செய்யப்பட வேண்டிய டிரீட்மென்ட்டின் செலவு ரூ. 10 லட்சம் ( $ 13804), அதுதான் இப்போதைய தேவை!

உடனடியாக தங்களுக்குத் தெரிந்த நபர்களிடம் எல்லாம் கடன் வாங்க ஆரம்பித்தனர் குழந்தையின் பெற்றோர். இதற்கு முன்னரே பலமடங்கு அதிக வட்டிக்கு கடன் வாங்கியும், இருக்கும் கொஞ்சம் நஞ்சம் நகைகளையும் விற்றும்தான் நிலைமையை சமாளித்து வந்தனர். ஆனால் கோவிட் லாக்டவுன் நந்தினியின் டிரைவர் வேலைக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது, இப்போது வெறுங்கையை ஏந்தி நம்மிடம் உதவி கேட்டு நிற்கிறது அந்த ஏழைத் தம்பதி.

கண்ணில் கேன்சர். பச்சைக் குழந்தை. பதறும் பெற்றோர்!

அந்தப் பெற்றோரின் இப்போதைய தேவை, ஆசை, கனவு, லட்சியம், வாழ்க்கை எல்லாமே தங்களின் குழந்தையின் உயிரைக் காப்பாற்றி விட வேண்டும் என்பது மட்டும்தான். அவர்களுக்கு உங்களின் உதவி தேவை. நீங்கள் செய்யும் தாராளமான நிதி உதவி மூலம், குழந்தையின் உயிரை நிச்சயம் காப்பாற்றிவிடலாம்!

இப்போதே நிதி உதவி செய்ய, இங்கே கிளிக் செய்யவும்.

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை கெட்டோ-வின் விளம்பரதாரர் பகுதி என்பதால் கட்டுரையின் உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பாகாது. இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம் என்பதால் நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு