Election bannerElection banner
Published:Updated:

'ரெட்டக் குழந்தையில ஒன்னு சாகக்கெடக்குது! காப்பாத்துங்க' #SaveTwins

கெட்டோ
கெட்டோ

ஒரு குழந்தையின் நிலைமை சற்று தேறி வந்துள்ளது என்றாலும் மற்றொரு குழந்தையின் நிலைமை மோசமாகிக் கொண்டே வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பிஞ்சு உடல்கள் தானாக சுவாசிக்கக் கூட முடியாத நிலையில் உள்ளன, தற்போது வென்டிலேட்டர்தான் குழந்தைகளைக் காப்பாற்றி வருகிறது.

"எத்தனையோ வருஷம் காத்துக்கெடந்து கடைசியா நாங்களும் பெற்றோர் ஆகப்போறோம்!" என்ற மகிழ்ச்சி கலைவாணிக்கும், அவர் கணவருக்கும். தங்கள் வாழ்வை முழுமையாக்கப் போகும் குழந்தையைக் கைகளில் வாங்கும் அந்தத் தருணத்துக்காக காத்துக்கிடந்தது அந்தத் தம்பதி. வாழ்க்கை திடீரென்று இரட்டிப்பு சந்தோஷத்தை அவர்களுக்குக் கொடுத்தது. இரட்டைக் குழந்தைகள் பிறக்கப்போகின்றன என்று தெரிந்த அந்தத் தருணம் உலகத்திலேயே மகிழ்ச்சியான மனிதர்கள் அவர்கள்தான்!

ஆம். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. சொன்னபடி அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன, ஆனால் குறைப் பிரசவத்தில்... "இப்போ ரெண்டு குழந்தையும் உயிருக்குப் போராடிகிட்டு இருக்கு" என்று கலங்கிய கண்களுடன் தெரிவிக்கிறார் தாய் கலைவாணி.

கலைவாணியும் அவரது கணவரும் எத்தனையோ ஆண்டுகளாக தங்களுக்கு ஒரு குழந்தை பிறந்திடாதா என்று ஏங்கித் திரியும் ஜீவன்கள். குழந்தையே பிறக்காமல் போயிருந்தால்கூட இவ்வளவு துயரத்தை இந்த அப்பாவிகள் உணர்ந்திருக்க மாட்டார்கள், ஆனால் இப்போது ஒன்றுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தும் அவற்றைப் பறிகொடுத்து விடுவோமோ என்று கதறி நிற்கிறார்கள்.

'ரெட்டக் குழந்தையில ஒன்னு சாகக்கெடக்குது! காப்பாத்துங்க' #SaveTwins

தற்போது இரண்டு குழந்தைகளும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கின்றன. குறைப்பிரசவத்தில் பிறந்ததால், பிறந்தது முதல் இன்று வரை உயிரைக் காப்பாற்றும் சாதனங்களோடு ஒட்டியே கிடக்கின்றன அந்தப் பிஞ்சு உயிர்கள். இன்னும் நான்கு முதல் ஐந்து வாரங்கள் தீவிர சிகிச்சை தொடர்ந்தால் மட்டுமே குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கலைவாணியின் கணவர் மட்டுமே வேலைக்குச் செல்கிறார். அவரின் மிகக்குறைவான சம்பளத்தில் குழந்தைகளுக்கு மருந்துகள்தான் வாங்க முடியுமே தவிர, அவற்றின் உயிரைக் காப்பாற்றும் அளவுக்கு மருத்துவமனை சிகிச்சை வழங்குவது என்பது நிறைவேறாத காரியமாகும்.

குழந்தைகளை எப்படியும் காப்பாற்றி விட வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக ஒருபக்கம் சிகிச்சைகள் நடைபெற்று வந்தாலும், நாட்கள் செல்லச் செல்ல மேற்படி சிகிச்சைக்கான கட்டணத்துக்கு என்ன செய்வது என்று அறியாமல் குழம்பி நிற்கின்றனர் அந்த ஏழைப் பெற்றோர்.

குழந்தைகளின் உயிரை இழுத்துப் பிடித்து வைத்துள்ள நவீன சாதனங்களின் வசதி தொடர்ந்து கிடைத்திட மொத்தமாக 'பத்து லட்ச ரூபாய்' தேவைப்படுகிறது.

'ரெட்டக் குழந்தையில ஒன்னு சாகக்கெடக்குது! காப்பாத்துங்க' #SaveTwins

"குழந்தைகளுக்கு அப்பா நான் தானே! ஆனா என்னால சிகிச்சைக்குப் பணம் கட்ட முடியலையே! எனக்குத் தெரிஞ்ச எல்லார் காலையும் பிடிச்சி, என்னால முடிஞ்சளவு கடன் வாங்கிட்டேன், எல்லாமே இப்போ செலவாகிப் போச்சு! அரசு மருத்துவமனைக்கு போயிடலாம்னு பார்த்தா, குழந்தைங்க இன்னும் இக்கட்டான கட்டத்தை விட்டு வெளியே வரல... எங்க கனவு இப்போதான் நிறைவேறுச்சு, ஆனா கையில காசில்லாம அந்தக் கனவு திரும்பவும் கனவாவே போயிருமோன்னு பயத்துல இருக்குறோம்." என்று கதறுகிறார் கலைவாணியின் கணவர்.

தற்போது...

ஒரு குழந்தையின் நிலைமை சற்று தேறி வந்துள்ளது என்றாலும் மற்றொரு குழந்தையின் நிலைமை மோசமாகிக் கொண்டே வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பிஞ்சு உடல்கள் தானாக சுவாசிக்கக் கூட முடியாத நிலையில் உள்ளன, தற்போது வென்டிலேட்டர்தான் குழந்தைகளைக் காப்பாற்றி வருகிறது.

குழந்தைகளை ஆசையாக கையில் வாங்கி, வீட்டுக்குத் தூக்கிச் சென்று, தொட்டிலில் இட்டுக் கொஞ்ச வேண்டிய பெற்றோர் கண்ணீருடன் மருத்துவமனையே கதியாய்த் தங்கள் வாழ்வினைக் கழித்து வருகின்றனர். இருப்பினும் இந்தப் போராட்டத்தை கைவிடக்கூடாது என்று உறுதியோடு இருக்கின்றனர். தங்களிடம் உள்ள பொருள்களையெல்லாம் விற்றுவிட்டனர், தினசரி உணவைக் குறைத்து விட்டனர். இருப்பினும் அந்த ஏழைக் குடும்பத்திற்குத் தேவையான தொகை என்பது பெரிதாகவேதான் இருக்கிறது.

குழந்தைகளின் சிகிச்சைக்குத் தங்களால் இயன்ற நிதி உதவியைச் செய்யுமாறு மன்றாடிக் கேட்டுக்கொள்கின்றனர். உங்களின் ஒவ்வொரு ரூபாயும் குழந்தைகளின் வாழ்நாளை மீட்டுத்தரும் என்பதில் சந்தேகமே இல்லை!

நிதி உதவி செய்ய, இங்கே கிளிக் செய்யவும்.

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை கெட்டோ-வின் விளம்பரதாரர் பகுதி என்பதால் கட்டுரையின் உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பாகாது. இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம் என்பதால் நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு